அட்லாண்டிக் துருத்தி மீன்
அட்லாண்டிக் துருத்தி மீன் (Aulostomus strigosus)(அல்லது தவறாக அட்லாண்டிக் கார்னட்மீன்) அல்லோஸ்டோமிடே குடும்பத்தினைச் சார்ந்த துருத்தி மீன் இனமாகும். இம்மீன் கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மவுரித்தேனியா முதல் நமீபியா வரை ஆழமற்ற கடலோர நீர்ப்பகுதிகளில் காணப்படும் வெப்பமண்டல கடல் மீனாகும். மற்ற துருத்தி மீன்களைப் போலவே, இவை சிறிய மீன்களை உணவாகச் சாப்பிடுகின்றன. இரைதேடும்போது மீன்களை வேட்டையாடும் பிற உயிரிகளை மறைவாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.[2][3][4]
அத்திலாந்திக்கு துருத்தி மீன் Atlantic trumpetfish | |
---|---|
அட்லாண்டிக் துருத்தி மீன் (எசுப்பானியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | |
குடும்பம்: | துருத்திமீன்
|
பேரினம்: | துருத்திமீன்
|
இனம்: | A. strigosus
|
இருசொற் பெயரீடு | |
Aulostomus strigosus உவீலர், 1955 |
அல்லோஸ்டோமசு ஸ்டிரிங்கோசசு, அல்லோஸ்டோமசு மேகுளோடசு சிற்றினத்துடன் நெருங்கிய உறவுடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இச்சிற்றினம் தென்கிழக்கு பசிபிக் கடல் பகுதிக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் கருத்தினை ஆதரிப்பதாக உள்ளது.[5]
விளக்கம்
தொகுதுருத்தி மீன் நீண்ட குழாய் போன்ற உடலின் நுனிப்பகுதியில் மேல்நோக்கிய வாயுடன் நீண்ட தலையினைக் கொண்டவை.
இம்மீன்கள் கலவியின் போது துணையினை ஈர்க்கவும், சூழலில் மறையவும் தன்னுடைய நிறத்தினை மாற்றிக்கொள்ள அபரிமிதமான நிறம் மாற்றும் தன்மையினைக் கொண்டுள்ளது. பழுப்பு அல்லது நீலம், பச்சை அல்லது ஆரஞ்சு நிற தோற்றங்கள் அல்லது அதன் இடைநிலைகள் பெரும்பாலும் காணப்படும் வண்ணங்கள். இது வெளிர் நிறமாகவும், செங்குத்து மற்றும்/அல்லது கிடைமட்ட கோடுகளாகவோ அல்லது உடலில் ஒழுங்கற்ற அடர் புள்ளிகளுடன் கோடுகளாகக் காணப்படும். முதுகுபுற மற்றும் வால் துடுப்புகள் பகுதி ஒளி ஊடுருவும் தன்மையுடன் முன்பகுதியில் கருப்பு நிறப் புள்ளியுடன் இருக்கும். பொதுவாக இதன் உடலில் நான்கு வெள்ளை புள்ளிகள், முதுகு துடுப்பு மற்றும் வால் துடுப்புகளுக்கு இடையிலும்; மூன்று வெள்ளை செங்குத்து கோடுகள் வால் துடுப்பிலும், கருமைநிற புள்ளி வால் துடுப்பிலும் காணப்படும்.
இதன் அதிகபட்ச நீளம் 75 செ.மீ.[6]
வாழ்விடமும் நடத்தையும்
தொகுஆலோஸ்டோமஸ் ஸ்ட்ரைகோசஸ் என்பது அடிமட்டவாழ் மீன் இனமாகும். இவை கடலோரப் பகுதிகளில் உள்ள பாறை, பவளப் பாறை பகுதிகளில் காணப்படும். இதனுடைய முக்கிய இரையானது மீன் ஆகும்.[6] இவை பாறைகளின் மீது காணப்படும் விலங்குகளையும் உண்பதாக நம்பப்படுகிறது. ஏ. ஸ்ட்ரைகோசஸ் பிற மீன் கூட்டங்களை பின் தொடர்ந்து செல்லும் மீன்களாகும். தாவரங்களை உண்ணும் பெரிய மீன்களைப் பின் தொடர்ந்து செல்வதால் இம்மீன்களுக்குத் தக்க பாதுகாப்பும், தேவையான உணவும் கிடைக்கின்றது. சிறிய இரையினை வேட்டையாடும்போது உடலினை செங்குத்தாகவும் தலையினை கீழ்நோக்கியும் உள்ளவாறு வைத்துக்கொண்டிருக்கும். தக்க இரை இதனருகில் வரும்போது தாக்கிப்பிடித்துவிடும்.
பல மீன்களைப் போலவே, துருத்தி மீன்களும் ஒரு விரிவான இனக்கவர்ச்சி செயல்களை மேற்கொள்கின்றன. தம்முடைய நிறத்தினை மாற்றியமைத்து துணையினை கவர்கின்றது.
வெர்டி முனைத் தீவுகளில் காணப்படும் பாண்டிஓன் கெலியாட்சு மீன்களுக்கு ஏ ஸ்டிரிங்கோசசு அடிக்கடி இரையாகிறது
பரவல்
தொகுகிழக்கு அட்லாண்டிக்கின் வெப்பமான நமீபியாவிலிருந்து மவுரித்தேனியா வரையிலும், மடிரா சார்ந்த மாகேரோனிசியன் தீவுகள், கேப் வெர்டே தீவுகள் மற்றும் கேனரி தீவுகளிலும் காணப்படுகிறது. பிரேசிலின் எஸ்பிரிட்டோ சாண்டோ மற்றும் செயின்ட் பால்ஸ் பாறைகளிலும் இந்த இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; ஆனால் இவை ஏ. மாகுலட்டசுடன் தவறாக அடையாளம் காணப்பட்டதாக இருக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Smith-Vaniz, W.F. (2017). "Aulostomus strigosus". IUCN Red List of Threatened Species 2017: e.T21133172A112656647. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T21133172A112656647.en. https://www.iucnredlist.org/species/21133172/112656647.
- ↑ "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} {{{year}}} version. N.p.: FishBase, {{{year}}}.
- ↑ Eschmeyer, W. N. (ed). "Catalog of Fishes". California Academy of Sciences. Archived from the original on 5 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 September 2012.
{{cite web}}
:|last=
has generic name (help); Check date values in:|archive-date=
(help) - ↑ Kuiter, Rudie H. 2000. Seahorses, pipefishes, and the relatives. Chorleywood, UK: TMC Publishing. 240 p.
- ↑ Bowen, B. W., Bass, A. L., Rocha, L. A., Grant, W. S. and Robertson, D. R. (2001), PHYLOGEOGRAPHY OF THE TRUMPETFISHES (AULOSTOMUS): RING SPECIES COMPLEX ON A GLOBAL SCALE. Evolution, 55: 1029–1039. doi: 10.1111/j.0014-3820.2001.tb00619.x
- ↑ 6.0 6.1 Fritzsche, R.A., (1990). Aulostomidae. p. 653. In J.C. Quero, J.C. Hureau, C. Karrer, A. Post and L. Saldanha (eds.) Check-list of the fishes of the eastern tropical Atlantic (CLOFETA). JNICT, Lisbon; SEI, Paris; and UNESCO, Paris. Vol. 2.
வெளி இணைப்புகள்
தொகு- Photos of Atlantic trumpetfish on Sealife Collection