அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: HDYஐசிஏஓ: VTSS) (ஆங்கிலம்: Hat Yai International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Hat Yai தாய் மொழி: ท่าอากาศยานหาดใหญ่; Tha-akatsayan Hatyai) என்பது தெற்கு தாய்லாந்து, சொங்கலா மாநிலம் அட் யாய் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.

அட் யாய் பன்னாட்டு
வானூர்தி நிலையம்
Hat Yai International Airport
ท่าอากาศยานหาดใหญ่
அட் யாய் வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்= தாய்லாந்து வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Airports of Thailand PCL
சேவை புரிவதுஅட் யாய், தாய்லாந்து
அமைவிடம்99 Moo 3, Khlong La, Songkhla, Thailand
கவனம் செலுத்தும் நகரம்
நேர வலயம்தாய்லாந்து நேரம்
ஒ.ச.நே +7 ({{{utc}}})
உயரம் AMSL101 ft / 31 m
ஆள்கூறுகள்06°55′59″N 100°23′34″E / 6.93306°N 100.39278°E / 6.93306; 100.39278
இணையத்தளம்hatyai.airportthai.co.th
நிலப்படம்
Hat Yai Airport is located in தாய்லாந்து
Hat Yai Airport
Hat Yai Airport
அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
08/26 3,050 10,007 தார் (Asphalt)
புள்ளிவிவரங்கள் (2017)
பயணிகள்4,083,465 Increase9.1%
விமான நகர்வுகள்30,067 Increase7.0%
சரக்கு (டன்கள்)5,999 ( 50.6%)

இந்த வானூர்தி நிலையம் தாய்லாந்து வானூர்தி நிலையங்கள் நிறுவனம், (Airports of Thailand Public Company Limited (AOT) எனும் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 1.5 மில்லியன் பயணிகள், 9,500 விமானங்கள், 12,000 டன் சரக்குகள் ஆகியவற்றைக் கையாளுகிறது.

பொது

தொகு

கடல் மட்டத்தில் இருந்து 28 மீ. உயரத்தில் உள்ள இந்த வானூர்தி நிலையம் அட் யாய் நகரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நெடுஞ்சாலை 4135 (Sanambin Panij Road) எனும் முதன்மைச் சாலையுடன் இந்த வானூர்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வானூர்தி நிலையத்தின் சேவை நேரம் 06:00 – 24:00. இதன் ஓடுபாதை ஒரு மணி நேரத்திற்கு 30 விமானங்களைக் கையாள முடியும். அத்துடன் அதன் தாங்கும் ஆற்றல் PCN 60/F/C/X/T என மதிப்பிடப்படுகிறது. அதன் பரப்பளவு 56,461 மீ2.

விரிவாக்கம்

தொகு

அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் 2.5 மில்லியன் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனால், விரிவாக்கத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2018-ஆம் ஆண்டில் ஏற்கனவே 4.5 மில்லியன் பயணிகளை இந்த வானூர்தி நிலையம் கண்டுள்ளது. இந்த மேம்படுத்தல், 2030-ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகளுக்குச் சேவை செய்யும். அந்த வகையில் வானூர்தி நிலையத்தின் கொள்ளாற்றல் திறனும் விரிவுபடுத்தப்படுகின்றது.[1]

பயணிகள் சேவை

தொகு
நிறுவனம் சேரிடங்கள்
பாங்காக் ஏர்வேஸ் பாங்காக்–சுவர்ணபூமி,[2]கோ சாமுய்,[2] புக்கெட்
நோக் ஏர் பாங்காக்–தோன் முவாங்
சுகூட் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
தாய் ஏர் ஏசியா பாங்காக்–தோன் முவாங், சியாங் மாய், கோன் காயன், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்[3]
தாய் லயன் ஏர் பாங்காக்–தோன் முவாங், உடோன் தானி
தாய் இசுமயில் சுவர்ணபூமி வானூர்தி நிலையம்
தாய் வியட் செட் ஏர் பாங்காக்–சுவர்ணபூமி, சியாங் மாய்

விபத்து

தொகு

2005 ஏப்ரல் 3-ஆம் தேதி, அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பயணிகள் புறப்படும் முனையத்தில் ஒரு வெடிகுண்டு விபத்து நிகழ்ந்தது. 2005 சொங்கலா குண்டுவெடிப்பு (2005 Songkhla Bombings) என்று குறிப்பிடப்படும் அந்த வெடிகுண்டு விபத்திற்கு, பட்டானி பிரிவினைவாதிகள் (Pattani Separatists) காரணம் என்றும் சொல்லப்பட்டது. அந்த விபத்தில் ஒரு பயணி கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயம் அடைந்தனர்.[4]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hat Yai. "AoT plans Hat Yai expansion" (in en). Bangkok Post. https://www.bangkokpost.com/thailand/general/957549/aot-plans-hat-yai-expansion. 
  2. 2.0 2.1 "Bangkok Airways Expands Hat Yai Network From July 2022". Aeroroutes. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  3. Töre, Özgür. "AirAsia Resumes Flights from Malaysia to Thailand". ftnNews. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.
  4. Thai news agency TNAMCOT (29 February 2016). "Famous News Across Time, Episode "Hunting...Exploding the City"". Archived from the original on 2023-02-20. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20 – via YouTube.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு