அண்ணா நகர் மேற்கு விரிவு


அண்ணா நகர் மேற்கு விரிவு என்பது சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.

அண்ணா நகர் மேற்கு விரிவு
—  neighbourhood  —
அண்ணா நகர் மேற்கு விரிவு
அமைவிடம்: அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை , இந்தியா
ஆள்கூறு 13°05′55″N 80°12′04″E / 13.09853°N 80.2011°E / 13.09853; 80.2011
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி வில்லிவாக்கம்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. வெற்றியழகன் (திமுக)

திட்டமிடல் முகமை சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் Chennai District website

அமைவிடம்

தொகு

இது சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு 12 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு 2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பாடி, கொரட்டூர், அண்ணா நகர் மேற்கு, முகப்பேர், நொளம்பூர், அயனம்பாக்கம், அத்திப்பட்டு மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகள் அண்ணா நகர் மேற்கு விரிவை சுற்றி அமைந்துள்ளன.

நெடுஞ்சாலைகள்

தொகு

அண்ணா நகர் மேற்கு விரிவிற்கு சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் வட்ட வடிவ மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் மேற்கு விரிவுடன் உள்வட்ட சாலை செல்கிறது.

அஞ்சல் குறியீட்டு எண்

தொகு

அண்ணா நகர் மேற்கு விரிவின் அஞ்சல் குறியீட்டு எண் 600101 ஆகும்.[3]

பாடசாலைகள்

தொகு

அண்ணா நகர் மேற்கு பகுதியில் காணப்படும் பாடசாலைகளில் சில:

  • எஸ்.பி.ஓ.ஏ ஜூனியர் பள்ளி
  • எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் பள்ளி
  • லியோ மெட்ரிக் பள்ளி

மருத்துவமனைகள்

தொகு

அண்ணா நகர் மேற்கு விரிவு பகுதியில் காணப்படும் மருத்துவமனைகளில் சில:

  • வீ கேர் மருத்துவமனை

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Anna Nagar (west) Extension Pin Code: Anna Nagar (west) Extension, Ambattur, Chennai City North, Chennai Post Office Code & Address with Map". codepin.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_நகர்_மேற்கு_விரிவு&oldid=3641266" இலிருந்து மீள்விக்கப்பட்டது