அதுரலிய ரத்தன தேரர்

(அதுரலிய ரதன தேரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அதுரலிய ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero) இலங்கை அரசியல்வாதியும் பௌத்த துறவியும் ஆவார். இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜாதிக எல உறுமய என்ற கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரது சொந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரசை தேர்தல் தொகுதியில் உள்ள அதுரலிய என்ற ஊராகும். இவர் தனது கட்சியினருடன் 2014 நவம்பரில் ஆளும் ஐமசுமு கூட்டணியில் இருந்து விலகினார்.[1]

அதுரலிய ரத்தன தேரர்
Athuraliye Rathana Thero

நா.உ
Athuraliye Rathana Thero.jpg
களுத்துறை மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
கம்பகா மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சி ஜாதிக எல உறுமய
இருப்பிடம் ஒபயசேகரபுர, ராஜகிரி
பணி பௌத்த மதகுரு, அரசியல்வாதி
சமயம் பௌத்தர்

அதுரலிய ரத்தன தேரர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 2015-இல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]

2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அரசில் பதவி வகிக்கும் முஸ்லீம் அமைச்சர்களையும், மாகாண ஆளுநர்களையும் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டார்.[3][4]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுரலிய_ரத்தன_தேரர்&oldid=2761943" இருந்து மீள்விக்கப்பட்டது