அத்திலாந்திக்குக் கடற்பறவை

அத்திலாந்திக்குக் கடற்பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. atlanticus
இருசொற் பெயரீடு
Larus atlanticus
Olrog, 1958

அத்திலாந்திக்குக் கடற்பறவை (Olrog's Gull), (Larus atlanticus) என்று அழைக்கப்படும் கடற்பறவையானது நீள் சிறகு கடற்பறவையைப்போல் அத்திலாந்திக்குக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிரேசில், உருகுவே, அர்ஜெண்டீனா போன்ற நாடுகளின் கடற்கரையோரமாக காணப்படுகிறது. இப்பறவையானது பட்டைவால் கடற்பறவை இனத்தின் ஒரு வகையாகும். இதன் இறகுப்பகுதி கருப்பு நிறத்திலும், இதன் தலைப் பகுதி வெள்ளை நிறத்திலும், இதன் அலகுப்பகுதி மேலே கருப்பும், கீழே சிகப்பும் கலந்து காணப்படுகிறது. இப்பறவைக்கு சுவீடன் மற்றும் அர்ஜெண்டீனா உயிரியளாலர் கிளேயஸ் சி ஒல்ரொக் (Claes C. Olrog)[2][3] நினைவாக இப்பெயர் வந்தது. இப்பறவையின் இனவளத்திற்கான பறவை பாதுகாப்பு இயக்கம் அழியும் நிலை கொண்ட இனமாக பிரித்திருக்கிறது.

விளக்கம்

தொகு

இப்பறவையானது கடற்பறவைகளில் பெரிய வகையானதாகும். இதன் நீளம் 50 செமீ முதல் 60 செமீ இருக்கும். இதன் இறகுகள் 130 செமீ முதல் 140 செமீ வரை வளருகின்றன. ஆண் பறவை சிறியதாகவும் இறகுகள் நீண்டும் காணப்படும்.[4]

பங்கீடு

தொகு
 
தென் பிரேசில் கடற்கரை

அர்ஜெண்டீனா நாட்டின் பலாங்கா ஆற்றில் (Bahia Blanca River) கழிமுகப்பகுதில் ஒதன் காலனிகள் ஒன்றிரண்டு காணப்படுகுகிறது. இப்பறவை தீவுகளிலும், கடற்கரையின் கழிமுகப்குதிகளிலும் கூடுகட்டி வாழுகின்றன.[5]

நடத்தை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Larus atlanticus". IUCN Red List of Threatened Species. 2018: e.T22694286A132538305. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22694286A132538305.en. Retrieved 11 November 2021. Handford, P. (April 1987). "In Memoriam: Claes Christian Olrog, 1912-1985". The Auk. 104 (2): 319–320. doi:10.1093/auk/104.2.319. JSTOR 4087042.
  2. Handford, P.; Watkins, Michael; Grayson, Michael (April 1987). "In Memoriam: Claes Christian Olrog, 1912-1985". The Auk 104 (2): 319–320. https://archive.org/details/sim_auk_1987-04_104_2/page/319. 
  3. The Eponym Dictionary of Mammals. Baltimore: The Johns Hopkins University Press. 2009-09-28. pp. 592 (see p. 298). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9304-9. இணையக் கணினி நூலக மைய எண் 270129903.
  4. "Larus atlanticus". NeoTropical Birds. The Cornell Lab of Ornithology. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
  5. "Species factsheet: Larus atlanticus". BirdLife International. Archived from the original on 2013-10-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.

வெளி இணைப்புகள்

தொகு