அத்தி குண்டா

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

அத்தி குண்டா (Athigunda) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது மாதேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

அத்தி குண்டா
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635121

பெயராய்வு

தொகு

அத்தி என்னும் கன்னடச் சொல்லுக்கு யானை என்பது பொருள். இப்பகுதியில் உள்ள குட்டைகளுக்கு நீர் அருந்த யானைகள் வந்திருக்கும். அதனால் இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 104. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Athigunda Village , Veppanapalli Block , Krishnagiri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தி_குண்டா&oldid=3657014" இலிருந்து மீள்விக்கப்பட்டது