அத்தீனா ஹெல்த்

அத்தீனா ஹெல்த் இன்க். என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமெரிக்காவை மையகாகக் கொண்டு செயல்படுகிறது. இது உடல்நலத்தை பேணுவதற்கான மென்பொருட்களை மேகக் கணிமை வழியாக வழங்குகிறது. இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் சான் டியேகோவில் 1977ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் மாசச்சூசெட்சில் உள்ள வாட்டர்டவுன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் பெல்ஃபாஸ்ட்(மேய்ன்), சான் பிரான்சிஸ்கோ(கலிபோர்னியா), அட்லான்டா, (ஜார்ஜியா), ஆஸ்டின் (டெக்சஸ்), பிரின்ஸ்டன் (நியூ செர்சி), சென்னை (இந்தியா) ஆகிய இடங்களில் இயங்குகின்றன.[1]

athenahealth, Inc.
வகைபொது
நிறுவுகை1997
தலைமையகம்வாட்டர்டவுன், மாசச்சூசெட்ஸ்
தொழில்துறைஉடல்நலம் & தொழில்நுட்பம்
உற்பத்திகள்மின் நலப் பதிவு, மருத்துவ பற்றுச்சீட்டு, நோயாளிகளை கண்காணித்தல், பராமரிப்பு உதவி
வருமானம்Increase $924.7 மில்லியன் (திசம்பர், 2015)
பணியாளர்4,668
இணையத்தளம்athenahealth.com

வரலாறு

தொகு

2015ஆம் ஆண்டின் ஜனவரி பதினான்காம் நாளில், இந்த நிறுவனம் ரேசரின்சைட்ஸ் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது. ரேசரின்சைட்ஸ் நிறுவனம் எலக்ட்ரானிக் முறையில் மருத்துவ ஆவணங்களை பயன்படுத்திய முன்னணி நிறுவனம் ஆகும்.[2] 2015ஆம் ஆண்டின் பிப்பிரவரியில் வெபோயெமார், என்ற நிறுவனத்தை வாங்கியது. அந்த நிறுவனம் இணையவழியில் மருத்துவப் பயன்பாடுகளை உருவாக்கியிருந்தது.[3]

சான்றுகள்

தொகு
  1. "athenahealth, Inc. Factsheet". athenahealth, Inc. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து ஜனவரி 20, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150120172845/http://money.cnn.com/news/newsfeeds/articles/globenewswire/10115479.htm. 
  3. "Athenahealth teaming with Beth Israel Deaconess to offer clinical records software to hospitals - The Boston Globe". BostonGlobe.com. பார்க்கப்பட்ட நாள் 2 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தீனா_ஹெல்த்&oldid=3540937" இலிருந்து மீள்விக்கப்பட்டது