அந்தாட்டிக்க வட்டம்

அந்தாட்டிக்க வட்டம் அல்லது அண்டார்ட்டிக்க வட்டம் (Antarctic Circle) புவியின் நிலப்படங்களில் குறியிடப்படும் ஐந்து முதன்மை நில நேர்க்கோட்டு வட்டங்களில் மிகவும் தெற்கில் உள்ள வட்டமாகும். இந்த வட்டத்திற்கு தெற்கில் உள்ள பகுதி அந்தாட்டிக்கப் பகுதி எனப்படுகின்றது. இந்த மண்டலத்திற்கு மிக அடுத்து வடக்கில் இருக்கும் பகுதி தெற்கு மிதவெப்ப மண்டலம் எனப்படுகின்றது. அந்தாட்டிக்க வட்டத்திற்கு தெற்கில் கதிரவன் குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது தொடர்ந்து 24 மணித்தியாலங்களும் தொடுவானத்தில் காணப்படும்; எனவே நடு இரவிலும் சூரியனைக் காணலாம். அதே போன்றுஆண்டுக்கு ஒருமுறையேனும் (குறைந்தது பகுதியாகவாவது) தொடர்ந்த 24 மணித்தியாலங்களும் (தொடுவானத்திற்கு கீழாக இருக்கும்; எனவே நடுப்பகலிலும் சூரியனைக் காணவியலாது. இது வடக்கு அரைக்கோளத்தில் உள்ள துருவ வட்டமான ஆர்க்டிக் வட்டத்திலும் காணும் பண்புகளுக்கு இணையானது.

அந்தாட்டிக்கா நிலப்படத்தில் அந்தாட்டிக்க வட்டம் நீல நிறத்தில் குறியிடப்பட்டுள்ளது.

அந்தாட்டிக்க வட்டத்தின் இருப்பிடம் நிலையானதல்ல; ஏப்ரல் 28, 2018 நிலைப்படி இது நில நடுக்கோட்டிற்கு தெற்கே 66°33′47.1″ பாகைகளில் உள்ளது.[1] இதன் நிலநேர்க்கோடு புவியின் அச்சுச் சாய்வைப் பொறுத்துள்ளது; இந்த அச்சுச் சாய்வு நிலவின் சுழற்சியால் ஏற்படும் அலைகளின் விசையினால் 40,000-ஆண்டுக் காலத்தில் 2° வரை ஊசலாடுகிறது.[2] தற்போதைய அந்தாட்டிக்க வட்டத்தின் நெட்டாங்கு தென்முகமாக ஆண்டுக்கு 15 m (49 அடி) அளவில் நகர்ந்து வருகிறது.

நள்ளிரவு சூரியனும் துருவ இரவும் தொகு

 
புவியின் அச்சுக்கோட்டின் சாய்விற்கும் (ε) அயன, துருவ வட்டங்களுக்குமுள்ளத் தொடர்பு

அந்தாடிக்க வட்டம் தெற்கு அரைக்கோளத்திலுள்ள மிக வடக்கான அகலாங்கு ஆகும். இங்கு கதிரவன் தொடர்ந்து 24 மனிநேரம் தொடுவானத்திற்கு மேலோ அல்லது பகுதியும் கீழோ இருக்கும். இக்காரணத்தால் ஆண்டுக்கு ஒருமுறையேனும் இந்த வட்டத்தின் ஏதேனும் ஒரு புள்ளியில் கதிரவன் உள்ளக நேரப்படி நள்ளிரவில் காணப்படும். அதேபோன்று குறைந்தது ஒருமுறையேனும் பகுதியும் நடுப்பகலில் மறைந்திருக்கும்.[3]

நேரடியான அந்தார்ட்டிக்க வட்டத்தில் உள்ள இடங்களில் இந்த நிகழ்வுகள், கொள்கையளவில், ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்: முறையே திசம்பர் மற்றும் சூன் கதிர்த்திருப்பங்களில் நிகழும். இருப்பினும், வளிமண்டல ஒளி விலகலாலும் கானல் நீர்களாலும் தவிரவும் கதிரவன் புள்ளியாகவின்றி ஓர் வட்டாகத் தெரிவதாலும் தெற்கத்திய வேனில்கால கதிர்த்திருப்பத்தின் போதும் நள்ளிரவுச் சூரியனை அந்தாடிக்க வட்டத்தின் வடக்கே 50 ′ (90 km (56 mi)) வரை காண முடியும். இதே போன்று தெற்கத்திய குளிர்கால கதிர்த்திருப்பத்தின் நாளன்று அந்தாடிக்க வட்டத்தின் தெற்கே 50 ′ (90 km (56 mi)) வரை பகுதி சூரியனைக் காண முடியும். இது கடல் மட்டத்திற்கானது. உயரம் செல்லச் செல்ல இந்த எல்லைகள் கூடும். ஆர்க்டிக் பகுதிகளை விட அந்தாட்டிக்க வட்டத்தில் கானல்நீர் விளைவுகள் இன்னமும் கண்ணைக் கவர்வதாக உள்ளன. இதனால் கதிரவன் உண்மையில் தொடுவானத்திற்கு கீழே இருந்தபோதும் பல ஞாயிறு தோற்றங்களையும் மறைவுகளையும் இக்கானல் நீர்கள் உருவாக்குகின்றன.

மனிதர் உறைதல் தொகு

 
அந்தாட்டிக்க வட்டத்திற்கருகே உள்ள ஓர் பனிமலை

அந்தாட்டிக்க வட்டத்திற்கு தெற்கே நிரந்தரமாக வாழும் மனிதர்களில்லை. ஆனால் பல்வேறு நாடுகளால் இயக்கப்படும் பல அந்தாட்டிக்க ஆய்வு நிலையங்கள் உள்ளன; இங்கு அறிவியலாளர் அணியாக வாழ்கின்றனர். பருவங்களுக்கொருமுறை இவர்கள் மாறிக் கொள்கின்றனர். முந்தைய நூற்றாண்டுகளில் பகுதி நிரந்தரமாக சில திமிங்கில வேட்டை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன; சில வேட்டைக்காரர்கள் ஓராண்டுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துள்ளனர். குறைந்தது மூன்று குழந்தைகளாவது அந்தாட்டிக்காவில் பிறந்துள்ளன; ஆனால் இவை அந்தாட்டிக்க வட்டத்திற்கு வடக்கே உள்ளன.

புவியியல் தொகு

அந்தாட்டிக்க வட்டம் ஏறத்தாழ 17,662 கிலோமீட்டர்கள் (10,975 mi) நீளமானது.[4] இந்த வட்டத்திற்கு தெற்கேயுள்ள ஏறத்தாழ 20,000,000 km2 (7,700,000 sq mi) பரப்பளவு புவியின் 4% நிலப்பரப்பிற்கு இணையாகும்.[5] அந்தாட்டிக்கா கண்டம் இந்த வட்டத்தினுள்ளே உள்ள பெரும்பாலான பகுதியை அடக்கியுள்ளது.

வட்டத்தை ஒட்டிய இடங்கள் தொகு

முதனெடுங்கோட்டிலிருந்து கிழக்கு முகமாக அந்தாட்டிக்க வட்டம் செல்லுமிடங்கள்:

ஆள்கூறுகள் நாடு, பகுதி அல்லது கடல் குறிப்புகள்
66°34′S 0°0′E / 66.567°S 0.000°E / -66.567; 0.000 (Prime Meridian) தென்முனைப் பெருங்கடல் குயின் மாவுட்லாந்திற்கு வடக்கேயும் என்டர்பை லாந்தும்
66°34′S 50°32′E / 66.567°S 50.533°E / -66.567; 50.533 (Antarctica) அந்தாட்டிக்கா – என்டர்பை லாந்து   ஆத்திரேலியா ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 57°19′E / 66.567°S 57.317°E / -66.567; 57.317 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல் அமெரி பனிப்படி அடுக்குக்கு வடக்கே
66°34′S 82°6′E / 66.567°S 82.100°E / -66.567; 82.100 (Antarctica) அந்தாட்டிக்கா   ஆத்திரேலியா ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 89°14′E / 66.567°S 89.233°E / -66.567; 89.233 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல்
66°34′S 91°29′E / 66.567°S 91.483°E / -66.567; 91.483 (Antarctica) அந்தாட்டிக்கா   ஆத்திரேலியா ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 92°21′E / 66.567°S 92.350°E / -66.567; 92.350 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல்
66°34′S 93°52′E / 66.567°S 93.867°E / -66.567; 93.867 (Antarctica) அந்தாட்டிக்கா   ஆத்திரேலியா ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 107°45′E / 66.567°S 107.750°E / -66.567; 107.750 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல் வின்சென்னசு விரிகுடா
66°34′S 110°12′E / 66.567°S 110.200°E / -66.567; 110.200 (Antarctica) அந்தாட்டிக்கா – வில்க்சு லாந்து   ஆத்திரேலியா ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 116°35′E / 66.567°S 116.583°E / -66.567; 116.583 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல்
66°34′S 121°31′E / 66.567°S 121.517°E / -66.567; 121.517 (Antarctica) அந்தாட்டிக்கா – வில்க்சு லாந்து   ஆத்திரேலியா ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 127°9′E / 66.567°S 127.150°E / -66.567; 127.150 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல்
66°34′S 129°38′E / 66.567°S 129.633°E / -66.567; 129.633 (Antarctica) அந்தாட்டிக்கா – வில்க்சு லாந்து   ஆத்திரேலியா ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 136°0′E / 66.567°S 136.000°E / -66.567; 136.000 (Antarctica) அந்தாட்டிக்கா – அடிலீ லாந்து   பிரான்சு ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 138°56′E / 66.567°S 138.933°E / -66.567; 138.933 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல்
66°34′S 162°44′E / 66.567°S 162.733°E / -66.567; 162.733 பல்லேனித் தீவுகள் – பொர்ராடெய்ல் தீவு   நியூசிலாந்து ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 162°45′E / 66.567°S 162.750°E / -66.567; 162.750 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல் அடிலெய்டு தீவிற்கு சற்றே வடக்கே (  அர்கெந்தீனா,   சிலி &   ஐக்கிய இராச்சியம்
ஆட்பகுதியைக் கோரல்)
66°34′S 65°44′W / 66.567°S 65.733°W / -66.567; -65.733 (Antarctica) அந்தாட்டிக்கா – அந்தாட்டிக்க தீபகற்பம், கிரகாம்லாந்து, இலார்சன் பனிப்படி அடுக்கு   அர்கெந்தீனா,   சிலி &   ஐக்கிய இராச்சியம்
ஆட்பகுதியைக் கோரல்
66°34′S 60°21′W / 66.567°S 60.350°W / -66.567; -60.350 (Southern Ocean) தென்முனைப் பெருங்கடல் வெடல் கடல் மூலமாகச் செல்லுதல் & பெருங்கடலின் பெயரிடப்படாத பகுதியில் செல்லுதல்

மேற்கோள்கள் தொகு

  1. "Obliquity of the Ecliptic (Eps Mean)". Neoprogrammics.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-13.
  2. Berger, A.L. (1976). "Obliquity and Precession for the Last 5000000 Years". Astronomy and Astrophysics 51: 127–135. Bibcode: 1976A&A....51..127B. 
  3. Burn, Chris. The Polar Night (PDF). The Aurora Research Institute. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  4. BBC website, accessed Jan 3, 2016
  5. William M. Marsh; Martin M. Kaufman (2012). Physical Geography: Great Systems and Global Environments. Cambridge University Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-76428-5.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தாட்டிக்க_வட்டம்&oldid=3231271" இலிருந்து மீள்விக்கப்பட்டது