அனகனி சத்ய பிரசாத்

இந்திய அரசியல்வாதி

அனகனி சத்ய பிரசாத் (Anagani Satya Prasad) ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரேபள்ளே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார். வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளார் மோபிதேவி வெங்கட ரமணனை தோற்கடித்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.[1]

அனகனி சத்ய பிரசாத்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
செப்டம்பர் 2014
முன்னையவர்மோபிதேவி வெங்கட ரமணா
தொகுதிரேபள்ளே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 ஜனவரி 1972
குல்லப்பள்ளி, செருக்கப்பள்ளி மண்டலம், குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
முன்னாள் கல்லூரிஅன்வர் உல்-உலூம் கல்லூரி, ஐதராபாத்து
வேலைஅசையாச் சொத்து வணிகம்

சொந்த வாழ்க்கை தொகு

அனகனி சத்ய பிரசாத், அனகனி ரங்கா ராவ் என்பவருக்கு பிறந்தார். இவரது குடும்பம் செருகுவாபள்ளி மண்டலத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், சத்ய பிரசாத் குழந்தைப் பருவமும் கல்வியும் ஐதராபாது நகரத்திலேயே இருந்தது.[2] இவர் ஐதராபாத்தின் அன்வர் உல்-உலூம் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர்.[3] ஆந்திர சட்டமன்றத்தில் நூலகம் தொடர்பான கூட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்தார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Mopidevi banks on BC votes in Repalle". The Hindu. 2014-05-04. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/mopidevi-banks-on-bc-votes-in-repalle/article5975012.ece. 
  2. "Archived copy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "memberurl". பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனகனி_சத்ய_பிரசாத்&oldid=3824462" இலிருந்து மீள்விக்கப்பட்டது