அனன்யா சட்டர்ஜி

இந்திய நடிகை

அனன்யா சட்டர்ஜி (Ananya Chatterjee) (பிறப்பு 16 சனவரி 1977) ஓர் இந்திய நடிகையாவார். இவர் வங்காள மொழித் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.[3] அபஹோமன் என்ற படத்தில் இவரது பாத்திரத்திற்காக அறியப்பட்ட இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இவர், தொலைக்காட்சி நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அஞ்சன் தத் இயக்கிய மூன்று படங்கள் உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்தார். ரிதுபர்னோ கோஷ் இயக்கிய அப்துமான் என்ற திரைப்படத்தில் இவரது பாத்திரம் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

அனன்யா சட்டர்ஜி
57 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதிபா பாட்டீலிடமிருந்து (இடது) தேசிய விருதைப் பெறும் சட்டர்ஜி (வலது), 2010, 2010[1]
பிறப்பு16 சனவரி 1977 (1977-01-16) (அகவை 47)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இராஜ் பானர்ஜி
(தி. 2015; ம.மு. 2019)
[2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

1976இல் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த அனன்யா சட்டர்ஜி ஜிடிபிர்லா மையத்தில் கல்வி பயின்றார். 1994 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணைந்த இளங்கலை மகளிர் கல்லூரியான ஜோகமாயா தேவி கல்லூரியில் உயிரியலில் பட்டம் பெற்றார்.[4]

தொழில்

தொகு

சாட்டர்ஜி, மம்தா சங்கரின் நடன நிறுவனத்தில் ஒரு மாணவியாக இருந்தார். இவர் தொலைக்காட்சியில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கியபோது, தின் பிரதீதின் என்ற நாடகத் தொடர் மூலம் இவர் உருத்ரனில் கோஷ் என்ற நடிகருக்கு இணையாக நடித்தார். மேலும் திதிர் அதிதி, அலேயா மற்றும் அனன்யா போன்ற நாடகத் தொடர்களைலும் தோன்றினார்.. நடிப்பில் முறையான பயிற்சி இல்லாத போதிலும், இவரது பணி பாராட்டப்பட்டது. விரைவில் இவர் அனைவருக்கும் ஒரு வீட்டுப் பெயராக ஆனார்.[4] பின்னர், அஞ்சன் தத் இயகத்தில், ஜான் ஜானி ஜனார்தன், ஏக் டின் டார்ஜிலிங் மற்றும் அமர் பாபா ஆகிய மூன்று தொலைக்காட்சித் திரைப்படங்களில் தோன்றினார். அஞ்சன் தத்தின் ஒரு இந்திய-பெங்காலி கற்பனையான துப்பறியும் நிபுணரான பயோம்கேஷ் பக்யை சித்தரித்த ஆடிம் ரிபு என்ற படத்திலும் நடித்துள்ளார்.[5] அதைத் தொடர்ந்து, இவர் பாசு சாட்டர்ஜியின் தக் ஜால் மிஷ்டி (2002) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் சரண் தத்தாவின் ராத் பரோட்டா பாஞ்ச் (2005) என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்தார். மைனக் பௌமிக் எழுதிய ஆம்ரா (2006) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் தோன்றிய பிறகு, இவரது அடுத்த முக்கியமான படம் அறிமுக இயக்குநர் அக்னிதேவ் சாட்டர்ஜியின் ப்ரோபு நாஷ்டோ ஹோய் ஜெய் (லார்ட், லெட் த டெவில் ஸ்டீல் மை சோல்) என்ற படட்த்ஹுடன் இருந்தது. இது 13 வது கொல்கத்தா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[6]

2009ஆம் ஆண்டில், சுமன் கோஷின் துவாண்டோ என்ற படத்தில் மூத்த நடிகரான சௌமித்ரா சாட்டர்ஜிக்கு இணையாகத் தோன்றினார். இதன் மூலம் இவர் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டார், பின்னர் அனுப் செங்குப்தாவின் மாமா பாக்னே (2009) பத்தில் மீண்டும் இவரது நடிப்பு "நட்சத்திரமாக" மதிப்பாய்வு செய்யப்பட்டது. இருப்பினும், 2010 இல் வெளியான ரிதுபர்னோ கோஷின் அபோஹோமன் திரைப்படத்தில், இவர் புகழ்பெற்ற நடிகையாக நிலைநாட்டப்பட்டார். சிறந்த நடிகைக்கான முதல் தேசிய திரைப்பட விருதையும் வென்றார். 2012இல் கமலேசுவர் முகர்ஜி இயக்கிய மேகே தக தாரா பெங்காலித் திரைப்படத்தில் இவர் நீலகண்ட பக்சியின் மனைவி துர்கா என்ற வேடத்தில் நடித்தார்.

ஜீ வங்காளம் என்ற வங்காள தொலகாட்சியில் ஒளிபரப்பாகும் சுவர்னலதா என்ற பிரபல பெங்காலி நாடகத் தொடரில் இவர் முக்கிய வேடத்தில் நடித்தார்.[7]

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Press Information Bureau Photo Gallery". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.
  2. "Ananya Chatterjee ends four year marriage with husband Raj". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
  3. "'Actors' moods are bound to shift like tectonic plates: Ananya Chatterjee".
  4. 4.0 4.1 Sharmila Maiti (28 June 2004). "Ananya knows the science of acting". The Times of India. TNN. https://timesofindia.indiatimes.com/calcutta-times/ananya-knows-the-science-of-acting/articleshow/756042.cms. 
  5. "National Award is the first big award of my life: Ananya". யாகூ! செய்திகள். 15 September 2010. Archived from the original on 28 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Reviews: Probhu Nashto Hoye Jai". Screen. 21 December 2007.
  7. "Ananya's happy to be herself". The Telegraph (Calcutta, India). 11 April 2012. https://www.telegraphindia.com/1120411/jsp/entertainment/story_15357416.jsp#.UJORlmcufcc. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனன்யா_சட்டர்ஜி&oldid=4162601" இலிருந்து மீள்விக்கப்பட்டது