அனில் காகோட்கர்

அனில் காகோட்கர் (Anil Kakodkar) என்பவர் பிறப்பு 11 நவம்பர் 1943) ஓர் இந்திய அணு விஞ்ஞானி மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார். இவர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்திய அணுசக்தி துறையின் தலைவராக பணியாற்றிய இவர், இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும் இருந்துள்ளார். மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 1999 ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை செயலாற்றினார். இவர் 2009 ம் ஆண்டு சனவரி 26 இல் இந்திய அரசின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.

அனில் காகோட்கர்
अनिल काकोडकर
பிறப்பு11 நவம்பர் 1943 (1943-11-11) (அகவை 81)
பர்வானி, இந்தியா
வாழிடம்மும்பை, இந்தியா
தேசியம்இந்தியன்
துறைஇயந்திரப் பொறியியல்
பணியிடங்கள்இந்திய அணுசக்திப் பேரவை
அணு சக்தித்துறை (இந்தியா)
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
கல்வி கற்ற இடங்கள்ரூபாரேல் கல்லூரி
வீ ஜே டீ ஐ, மும்பை பல்கலைக்கழகம்
நாட்டிங்கம் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசிரிக்கும் புத்தர்
போக்ரான் II
இந்திய அணுக்கருத் திட்டம்
விருதுகள்பத்மசிறீ (1998)
பத்ம பூசண் (1999)
பத்ம விபூசண் (2009)[1]

இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்ததைத் தவிர காகோட்கர் அணு ஆற்றலுக்கு தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றினார்.

இளமைக் காலம்

தொகு

இந்திய அணுவிஞ்ஞானியான அனில் காகோட்கர் 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் மத்தியபிரதேசத்தில் உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர் ஆவர். இவர்கள் இருவரும் காந்தியவாதிகள் ஆவர்.

படிப்பு

தொகு

இவர் பள்ளிப்படிப்பை பர்வானி மற்றும் மும்பையில் முடித்தார். கல்லூரிப்படிப்பை மும்பை ரூபாரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963 இல் பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அனில் காகோட்கர் 1964 இல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார்.

வேலை மற்றும் சாதனைகள்

தொகு

வேலை மற்றும் சாதனைகள்

தொகு

பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அணுஉலை பொறியியல் பிரிவில் காகோட்கர் சேர்ந்தார். முற்றிலும் உயர் தொழில்நுட்பத் திட்டமான துருவா அணு உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் இவர் முக்கியப்பங்கு வகித்தார். 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். மேலும் இவர் இந்தியாவின் அழுத்தப்பட்ட கனரக நீர் அணு உலை தொழில் நுட்பத்தின் உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களை வழிநடத்தியுள்ளார். கல்பாக்கத்திலுள்ள இரண்டு அணு உலைகள் மற்றும் ஒரு கட்ட்த்தில் கைவிடப்படுவதாக இருந்த ராவத்பாட்டாவில் உள்ள முதல் அலகு ஆகிய அணு உலைகளைப் புணரமைத்ததில் இவரது பங்கு மகத்தானது. 1996 ஆம் ஆண்டில் அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அணு சக்தி ஆணையத்தை முன்னெடுத்து வருபவராகவும் இந்திய அணுசக்தித் துறையின் செயலாளராகவும் இருந்து வருகிறார். 250 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகளை இவர் வெளியிடுள்ளார்.

குறிப்பாக மலிவான தோரியம் வளங்களை அணு ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவதில் இந்தியா தன்னிறைவு அடைமுடியுமென இவர் தீவிரமாக நம்பினார் [2].புளூட்டோனியத்தால் இயங்கும் தோரியம்-யுரேனியம் 233 தனிமங்களை தொடக்கநிலை அணு ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தும் மேம்பட்ட கன நீர் அணு உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எளிமையான ஆனால் பாதுகாப்பான தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட உலை அமைப்பு மூலமாக தோரியத்தில் இருந்து 75 சதவிகித மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் [3].

டாக்டர் காகோட்கர் பல கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். அவற்றில் சில

  • இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பம்பாய் - 2006-15 ஆளுநர்களின் குழு தலைவர். அணு சக்தி ஆணையத்தின் உறுப்பினர்[4]
  • ஓஎன்ஜிசி எரிசக்தி மையம் அறக்கட்டளையின் உறுப்பினர்
  • இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் {ஐஐடி }சீர்திருத்தங்கள் மீது அதிகாரம் கொண்ட குழுவின் தலைவர்
  • 1999-2000 ஆண்டுகளில் இந்திய தேசிய அகாடமி ஆஃப் என்ஜினியரின் ஜனாதிபதியாக பணியாற்றினார்
  • சர்வதேச அணுசக்தி எரிசக்தி அகாடமி மற்றும் உலக கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் கெளரவ உறுப்பினர் ஆகியவற்றில் இவர் உறுப்பினராக உள்ளார்.
  • 1999-2002 இல் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (INSAG) உறுப்பினராக இருந்தார்
  • அவர் VJTI, மும்பை ஆளுநர்களின் குழுவில் இருக்கிறார்
  • ரெயில்வே அமைச்சகத்தின் ரயில்வே பட்ஜெட் உரையில் 2012 ஆம் ஆண்டில் ரெயில் பாதுகாப்புக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • ராஜிவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம், மகாராஷ்டிரா அரசு, மந்திராலயா, மும்பையின் தலைவராக இருந்துள்ளார்

பெற்ற விருதுகள்

தொகு

தேசிய விருதுகள்

தொகு
  • பத்மஸ்ரீ விருது (1998)
  • பத்ம பூசன் (1999)
  • பத்ம விபூசன் (2009)

பிற விருதுகள்

தொகு
  • மஹாராஷ்டிரா மாநிலம்-மகாராஷ்டிரா பூஷண் விருது (2012)
  • கோவா மாநில-கோமண் விபுஷான் விருது (2010)[5][6]
  • ஹரி ஓம் ஆசிரமம் விக்ரம் சாராபாய் விருது (1988)
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான எச்.கே. ஃபைரோடியா விருது (1997)
  • தொழில்நுட்பத்தில் சிறப்புக்கான ராக்வெல் பதக்கம் (1997)
  • அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பிற்கான FICCI விருது (1997-98)
  • ANACON - 1998 அணு ஆய்விற்கான வாழ்நாள் சாதனை விருது
  • இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் H.J. பாபா மெமோரியல் விருது (1999-2000)
  • கோதாவரி கௌரவ விருது (2000)
  • டாக்டர். Y. நாயுடம்மா நினைவு விருது (2002)
  • கெம்டெக் அறக்கட்டளையின் ஆற்றலுக்கான ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருது(2002)
  • குஜார் மால் மோடி புதுமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது 2004
  • ஹோமி பாபா வாழ்நாள் சாதனையாளர் விருது 2010.
  • வராகமிர் நிறுவனத்தின் ஆச்சார்யா வராகமிர் விருது (2004)

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "India aims to build World's First Thorium ADS".
  3. "Harnessing thorium for nuclear power challenges ahead by Anil Kakodkar at ThEC15".
  4. http://anilkakodkar.in/index.php/current-key-engagements
  5. Kamat, Prakash (30 May 2010). "India will become energy-independent: Kakodkar". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
  6. "First Gomant Vibhushan award presented to Dr Anil Kakodkar". Target Goa. 30 May 2010. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_காகோட்கர்&oldid=4007512" இலிருந்து மீள்விக்கப்பட்டது