அனிஸ் ஜார்ஜ்
முனைவர் அனிஸ் ஜார்ஜ் (Anice George) ஓர் இந்தியச் செவிலியரும், கல்வியாளரும், ஆராய்ச்சியாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தற்போது மணிப்பால் செவிலியர் கல்லூரியின் தலைவராகவும்,குழந்தைகள் சுகாதார செவிலியர் பேராசிரியராகவும் உள்ளார்.[1] இவர் மணிப்பால் உயர்கல்வி கழகத்தில் செவிலியர் கல்வி இயக்குநராக உள்ளார் (முன்பு மணிபால் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது). இவர் செவிலியர் தொழிலை மதிக்கும் ஒரு பதிவுசெய்யப்பட்ட செவிலியராவார். [2]
அனிஸ் ஜார்ஜ் | |
---|---|
பிறப்பு | 1961 (அகவை 62–63) கோழிக்கோடு, இந்தியா |
பணி | செவிலியர் செவிலியக் கல்வியாளர் அறிஞர் |
விருதுகள் | முனைவர் எஸ். தணிகாசலம் அறக்கட்டளை விருது |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | வேலூர், கிருத்தவ மருத்துவக் கல்லூரி தில்லி பல்கலைக்கழகம் மணிப்பால் உயர்கல்விக் கழகம் |
முனைவர் பட்ட நெறியாளர் | அபர்ணா பாதுரி |
கல்விப் பணி | |
துறை | செவிலியம் |
கல்வி நிலையங்கள் | மணிப்பால் உயர்கல்விக் கழகம் |
Main interests | செவிலியக் கல்வி செவிலிய ஆராய்ச்சி |
வலைத்தளம் | |
manipal |
கல்வி
தொகுமுனைவர் அனிஸ் ஜார்ஜ், 1983இல் வேலூர்கிருத்தவ மருத்துவக் கல்லூரியிலுள்ள செவிலியர் கல்லூரியில் செவிலியத்தில் இளம் அறிவியல் பட்டத்தையும், 1987இல் முதுநிலை அறிவியல் பட்டதையும் பெற்றார். பின்னர் 1993 ஆம் ஆண்டு புதுதில்லியின் ஆரேகே கல்லூரியில் செவிலியத்தில் முதுநிலை தத்துவமும், 1998 இல் மணிப்பால் உயர்கல்வி கழகத்திலிருந்து முனைவர் பட்டமும் பெற்றார். [3] இவர், மணிப்பால் உயர்கல்வி கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் செவிலியர் நிபுணர் ஆவார்.[4]
தொழில்முறை வாழ்க்கை
தொகுஇவர் 1991இல் மணிப்பால் குழுமத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வராகவும், பின்னர், அதன் தலைதற்போது மணிபால் நர்சிங் கல்லூரியின் தலைவராகவும் பணியாற்றுகிறார். மணிப்பால் உயர்கல்விக் கழகம் இவரது மேற்பார்வையின் கீழ் இந்தியாவின் சிறந்த செவிலியக் கல்லூரிகளில் 3வது இடத்தில் அங்கீகரிக்கப்பட்டது.[5] முன்பு இவர், சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் செவிலியக் கல்லூரியின் உதவித் தலைவராகவும், சவூதி அரேபியாவின் [6] கிங் காலித் பல்கலைக்கழக மருத்துவமனையில்] செவிலியக் கல்வி உதவி துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
0மணிப்பால் செவிலியக் கல்லூரியின்[7] தலைவராக, இவர், கல்வியில் கல்லூரியின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரது தலைமையின் போது, கல்லூரி அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக ஆராய்ச்சியில் வலுவாக வளர்ந்துள்ளது.[8] ஒரு செவிலியக் கல்வியாளராக இருப்பதால், இவர் தனது அனுபவம், அறிவு, திறமைகளைப் பயன்படுத்தி, தாங்கள் பணியாற்றும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் செவிலிய நிபுணர்களைத் உருவாக்குகிறார். வழக்கமான தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தர மேம்பாடு என்பது இவரது முக்கிய குறிக்கோளாகும். செவிலிய நிபுணர்கள் ஒரு புதியவராக இருந்து ஒரு நிபுணராக மாறுவதற்கு இவர் வழிகாட்டியும், ஆதரித்தும் ஊக்குவித்தும் வருகிறார்.[9]
கூட்டுத் திட்டங்கள்
தொகுமுனைவர் அனிஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ஐசிஎம்ஆர்), சுகாதார ஆராய்ச்சி துறை (டிஹெச்ஆர்) போன்றவை நிதியளித்த முதியோர் சுகாதார பராமரிப்பு, ஆராய்ச்சி குறித்த செவிலியர் கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்திற்கான முதன்மை ஆய்வாளர் ஆவார்.[10] 2013ஆம் ஆண்டில், கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பசந்தி மஜும்தாருடன் இணைந்து மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சி குறித்த ஒரு இருக்கை நிறுவப்பட்டது.[11] இந்த திட்டத்தின் கீழ் ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகள் எச்ஐவி/எய்ட்ஸ், புலம்பெயர்ந்த ஆரோக்கியம், நீரிழிவு நோய் போன்றவை. தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் , சமுதாயத்திற்கான ஆரோக்கியம், சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சியில் திறமைகளுடன் செவிலிய ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த திட்டம் முயன்றது.
இந்திய செவிலிய மன்றம், எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியம் ஆகியவற்றின் கூட்டுத்திட்டமான எச்.ஐ.வி/எய்ட்ஸ் பயிற்சித் திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக 2008- 2013 வரை இருந்தார். மேலும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் விரைவான வளர்ச்சியை செயல்படுத்த தேசிய சுகாதார அமைப்பின் மனித மற்றும் நிறுவன திறன்களை வலுப்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். [12] தேசிய அளவில் 2011 ஆம் ஆண்டுக்கான இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மணிபால் செவிலியர் கல்லூரி முதல் இடத்தைப் பெற்றுள்ளது. [13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr Anice George".
- ↑ http://manipal.edu/mcon-manipal/about-mcon-manipal/leadership/dr-anice-george.html
- ↑ http://manipal.edu/mcon-manipal/about-mcon-manipal/message-from-the-dean.html
- ↑ "Dr Anice George".
- ↑ "MCON".
- ↑ [https://medicine.ksu.edu.sa/en/node/371
- ↑ [https://manipal.edu/mcon-manipal.html
- ↑ "Dr Anice George".
- ↑ "Dr Anice George".
- ↑ "Short term Course on "Geriatric Healthcare & Research"". Archived from the original on 2020-07-15.
- ↑ "Udupi: Int'l Conference on Impact of Global Issues at Manipal from Jan 9 to 12".
- ↑ "HIV/AIDS Training supported by GFATM". Archived from the original on 2020-07-13.
- ↑ "Udupi: Manipal College of Nursing Tops in Implementation of project on HIV/AIDS". Archived from the original on 2020-07-13.