அனுர புஞ்சி பண்டா தென்னகோன் (Anura Punchi Banda Tennekoon, பிறப்பு: அக்டோபர் 29, 1946), இலங்கை அணியின் முன்னாள் முன்னணித் துடுப்பாட்டக்காரர், தலைவர் ஆவார். இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975, 1979 ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2000-2003 ஆண்டுகளில் இலங்கை அணியின் தேர்வுக்குழுவிலும் அங்கத்துவம் பெற்றுள்ளார். செப்டம்பர் 2018 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 49 முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு நிரந்தர பன்னாட்டுத் துடுப்பாட்ட சங்க உறுப்பினர்களாக அறிவித்து கௌரவித்தது. அதில் தென்னகோனும் ஒருவர்.[1][2]
அனுர தென்னகோன்தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | அனுர புஞ்சி பண்டா தென்னகோன் |
---|
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் |
---|
பந்துவீச்சு நடை | இடது கை மித வேகப் பந்து வீச்சு |
---|
பங்கு | துடுப்பாட்டக்காரர். |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 9) | சூன் 7 1975 எ. மேற்கிந்தியத் தீவுகள் |
---|
கடைசி ஒநாப | சூன் 9 1979 எ. நியூசிலாந்து |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
|
|
---|
|