அன்சூரு
அன்சூரு (Hunsur) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தின் அன்சூரு வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.
அன்சூரு | |
---|---|
ஆள்கூறுகள்: 12°18′38″N 76°16′49″E / 12.3105671°N 76.2802055°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | மைசூர் |
அரசு | |
• நிர்வாகம் | அன்சூரு நகர நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 792 m (2,598 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 50,865 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 571 105 |
தொலைபேசி குறியீடு | 08222 |
வாகனப் பதிவு | KA-45( Includes nearby places like K R Nagar, Periyaptna and H D Kote) |
Wards | 31 |
இணையதளம் | www |
புவியியல்
தொகுகடல் மட்டத்திலிருந்து 792 மீட்டர் (2598 அடி) உயர்த்தில் உள்ள் அன்சூரு நகரம் 12°19′N 76°17′E / 12.31°N 76.29°E பாகையில் அமைந்துள்ளது.[1] அன்சூரு நகரம், மைசூருக்கு மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள்து. அன்சூரு நகரத்தின் பரப்பளவு 11.76 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இது இலட்சுமணன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 27 வார்டுகள் கொண்ட அன்சூரு நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 50,865 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 25,430 மற்றும் பெண்கள் 25,435 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 5680 (11.17 %) ஆகும். சராசரி எழுத்தறிவு ஆகும்.. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.09%, இசுலாமியர்கள் 21.72%, கிறித்துவர்கள் 1.70% மற்றும் பிற சமயத்தினர் 0.44% ஆக உள்ளனர்.[2]
புகழ்பெற்றவர்கள்
தொகு- தேவராஜ் அர்ஸ் -கர்நாடகா முன்னாள் முதலமைச்சர்
- அன்சூரு கிருஷ்ணமூர்த்தி - கர்நாடகத் திரைப்பட இயக்குநர்
- கெம்பராஜ் அர்ஸ் - கன்னடத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்