அன்பில்
அன்பில் (Anbil), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இலால்குடி வட்டத்தில்[1] அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. முக்கிய அரசியல் கட்சியான, திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், தமிழக அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக பணியாற்றியவராகவும் இருந்த அன்பில் பி. தர்மலிங்கம் மற்றும் அவரது மகன்களான அன்பில் பொய்யாமொழி மற்றும் அன்பில் பெரியசாமி போன்ற அரசியல் தலைவர்களின் பிறந்த இடமாக உள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய அரசாங்கத்தால் அன்பில் மூன்று தனி கிராமங்களாக கருதப்படுகிறது, அதாவது ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் மற்றும் கீழ் அன்பில் போன்ற கிராமங்கள் இந்த சிற்றூரில் உள்ளன.[2]
அன்பில் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°52′00″N 78°52′00″E / 10.86667°N 78.86667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சி |
வழிபாட்டுத்தலங்கள்
தொகுஇங்குள்ள முக்கிய வழிபாட்டுத்தலங்களில், முதலில் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.[3] இங்குள்ள மாரியம்மன் திருச்சி, சமயபுரம் மாரியம்மனின் தங்கை என மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இங்கு ஆண்டிற்கு ஒரு முறை தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.[4] மாரியம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அன்பில் மாரியம்மன் கோயில், மிக முக்கியமான ஏழு மாரியம்மன் கோயில்களில் ஒன்றாகும். மீதி ஆறு மாரியம்மன் கோவில்கள் முறையே, சமயபுரம், நார்த்தாமலை, வீரசிங்கம்பேட்டை, கண்ணனூர், புன்னைநல்லூர் மற்றும் திருவேற்காடு போன்றவை ஆகும். இந்த கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. புராணங்களின்படி, கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இங்குள்ள அம்மன் இந்த கோவிலுக்கு அருகிலுள்ள வேப்பமரத்தின் கீழ் தஞ்சம் புகுந்தார் எனவும், அதன் பிறகு கோயில் கட்டப்பட்டது என்ற குறிப்பு காணப்படுகிறது. குழந்தைகள் இல்லாத பக்தர்கள் இந்த கோவிலுக்குச் சென்று குழந்தை வரம் பெறுவதற்காக வேண்டிக்கொள்வது வழக்கமாக உள்ளது. அதை அடுத்து, அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில் என்கிற சிவன் கோவில் இங்கு உள்ளது.
மேலும், சுந்தரராஜ பெருமாள் கோயில் என்றறியப்படும் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் இங்கு உள்ளது.[5] சுந்தரராஜ பெருமாள் கோயில் திராவிட பாணியிலான கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது மற்றும் கி.பி 7 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆழ்வார்களின் வைணவ நூலான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இக்கோவிலைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வைணவ சமூகத்தைச் சேர்ந்த கோயில் பூசாரிகள், பண்டிகைகளிலும், தினமும் இக்கோவிலில் பூஜைகளை (சடங்குகளை) செய்கிறார்கள். தமிழ் மாதமான மாசி (பிப்ரவரி-மார்ச்) மாதத்தில் கொண்டாடப்படும் தீர்த்தவாரி திருவிழா மற்றும் தமிழ் மாதமான மார்கழியில் (டிசம்பர்-ஜனவரி) கொண்டாடப்படும் வைகுந்த ஏகாதசி ஆகியவை இக்கோவிலில், கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளாகும்.[6]விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 (திவ்ய தேசம்) கோயில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
வேளாண்மை
தொகுகிராமத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயமாகும். இங்கு முதன்மை பயிர்களாக கரும்பு மற்றும் நெல் பயிரிடப்படுகிறது. இருந்தபோதிலும், அறுவடை சமயத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது, இது அறுவடை முறைகளை நவீனமயமாக்குவதன் மூலம் குறைக்கப்படுகிறது.[7]
இணைப்பு
தொகுஅன்பிலுக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம், இலால்குடி தொடருந்து நிலையம் ஆகும். இது சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது, இது சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தை மாநில பேருந்து போக்குவரத்து அமைப்பு (டி.என்.எஸ்.டி.சி) இணைக்கிறது. லால்குடி மற்றும் திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
குறிப்பிடத்தகுந்தோர்
தொகு- அன்பில் பி. தர்மலிங்கம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் (உள்ளாட்சி[8] மற்றும் வேளாண்மைத்[9] துறை)
- அன்பில் பொய்யாமொழி, திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- அன்பில் பெரியசாமி, திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவைச் சேர்ந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
சான்றுகள்
தொகு- ↑ விக்கிமேப்பியாவில் அன்பில்
- ↑ "Census of India : List of Towns and Villages". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.
- ↑ "Anbil car festival on April 12" (in en-IN). The Hindu. 2016-04-09. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/anbil-car-festival-on-april-12/article8453654.ece.
- ↑ அன்பில் மாரியம்மன் கோயிலில் மே 19-ல் பஞ்சப்பிரகார திருவிழா
- ↑ சுந்தரராஜப் பெருமாள் கோயில்
- ↑ "Sundararaja Perumal Temple : Sundararaja Perumal Temple Details | Sundararaja Perumal- Anbil | Tamilnadu Temple | சுந்தர்ராஜப் பெருமாள்". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.
- ↑ "Mechanical harvesters put labour problem of Anbil farmers to rest" (in en-IN). The Hindu. 2012-02-21. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mechanical-harvesters-put-labour-problem-of-anbil-farmers-to-rest/article2914741.ece.
- ↑ All India Council of Mayors (1973). Proceedings. p. 72.
- ↑ The Indian Journal of Social Work. Tata Institute of Social Sciences. 1956. p. 183.