அபு நசீர் துறைமுகம்

அபு நசீர் துறைமுகம் (Abu Nasir Port) மேற்கு ஆப்கானித்தானின் பரா மாகாணத்தின் சிப் கோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் உலர் துறைமுகமாகும். ஆப்கானித்தான்-ஈரான் எல்லைக்கு அடுத்ததாக ஓர் எல்லைக் கட்டுப்பாட்டு புள்ளியாகவும் இத்துறைமுகம் திகழ்கிறது.[3] சேக் அபு நசீர் பராகி என்ற பெயராலும் இத்துறைமுகம் அறியப்படுகிறது. ஈரானில் உள்ள மகிருத் கிராமத்திலிருந்து தரை வழியாக நுழைவதற்கான அதிகாரப்பூர்வ துறைமுகமாகவும் இது சிறப்பு பெற்றுள்ளது. . ஆப்கானித்தானின் பொருளாதாரத்தில் அபு நசீர் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் கணிசமான அளவு தேசிய வர்த்தகம் இதன் வழியாக செல்கிறது.

பரா
Farah

فراه
Province
Map of Afghanistan with Farah highlighted
Map of Afghanistan with Farah highlighted
ஆள்கூறுகள் (Capital): 32°30′N 63°30′E / 32.5°N 63.5°E / 32.5; 63.5
Country Afghanistan
CapitalFarah
அரசு
 • ஆளுநர்நூர் முகமது ரொகானி[1]
 • துணை ஆளுநர்சிகாதியர் சாகிபு[1]
 • முதன்மை காவல்துறை அலுவலர்சாகிப் மசூம்[1]
பரப்பளவு
 • மொத்தம்48,470.9 km2 (18,714.7 sq mi)
மக்கள்தொகை (2021)[2]
 • மொத்தம்573,146
 • அடர்த்தி12/km2 (31/sq mi)
நேர வலயம்ஆப்கானித்தான் நேரம் (ஒசநே+4:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAF-FRA
ஆப்கானித்தானின் மொழிகள்Dari

ஆப்கானித்தானின் முக்கிய போக்குவரத்தும், கப்பல் வழி வணிகமும் நடைபெறும் பெறும் தளங்களில் இத்துறைமுகமும் ஒன்றாகும்.[4][5] ஆப்கானித்தானின் பரா நகரைச் சேர்ந்த 13 ஆம் நூற்றாண்டின் அபு நாசர் பராகியின் நினைவாக துறைமுகத்திற்கு இப்பெயர் பெயரிடப்பட்டது. ஆப்கானித்தான் அரசாங்க அலுவலகங்கள் உட்பட பல வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் இத்தளத்தில் அமைந்துள்ளன. அபு நசீர்-பரா நெடுஞ்சாலை எல்லை வாசலில் தொடங்கி 130 கிலோமீட்டருக்குப் பிறகு இணைகிறது. கிழக்கில் பரா நகருக்கு அருகில் காந்தகார்-எரத் நெடுஞ்சாலையுடன் .[6] மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவை மத்திய கிழக்குடன் இணைக்கும் மூன்று முக்கியமான வர்த்தக வழிகளில் இதுவும் ஒன்றாகும்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "د نږدې شلو ولایاتو لپاره نوي والیان او امنیې قوماندانان وټاکل شول". 7 நவம்பர் 2021.
  2. "Estimated Population of Afghanistan 2021-22" (PDF). National Statistic and Information Authority (NSIA). April 2021. Archived from the original (PDF) on ஜூன் 24, 2021. பார்க்கப்பட்ட நாள் June 21, 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Clark, Kate (July 16, 2021). "Menace, Negotiation, Attack: The Taleban take more District Centres across Afghanistan". Afghanistan Analysts Network. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
  4. "$33M Lost in Customs Revenue in Past Month: MoF". TOLOnews. July 26, 2021. https://tolonews.com/business-173759. 
  5. "Analysts Predict Decrease in Govt Revenue as Border Town Falls". TOLOnews. August 7, 2021. https://tolonews.com/afghanistan-174055. 
  6. "Officials visit 'Sheikh Abu Nasr Farahi' Highway Reconstruction Work". Bakhtar News Agency. May 29, 2022. https://bakhtarnews.af/en/officials-visit-sheikh-abu-nasr-farahi-highway-reconstruction-work/. 
  7. "China stresses on reviving 'Silk Road' in Afghanistan". Ariana News. May 8, 2016. https://www.ariananews.af/china-stresses-on-reviving-silk-road-in-afghanistan/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_நசீர்_துறைமுகம்&oldid=3927118" இலிருந்து மீள்விக்கப்பட்டது