அமந்தாவா
அமந்தாவா | |
---|---|
ஆண் சிவப்புச் சில்லை (அமந்தாவா அமந்தாவா) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எசுட்ரில்டிடே
|
பேரினம்: | அமந்தாவா பிளைத், 1836
|
மாதிரி இனம் | |
பிரிஞ்ஜிலா அமந்தாவா சிவப்புச் சில்லை லின்னேயஸ், 1758 | |
சிற்றினம் | |
அ. அமந்தாவா |
அமந்தாவா (Amandava) என்ற பேரினம் எஸ்ட்ரிலிட் குருவி பேரினமாகும். இந்த பறவைகள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் அடர்ந்த புல் அல்லது புதர்க்காடுகளில் காணப்படுகின்றன. இவை குட்டையான, சிவப்பு அலகுடன் கூடியன. கூட்டமாகக் காணப்படும் இச்சில்லைகள் விதைகளை உண்ணுகின்றன. முன்னர் இதன் பெயர் அமதாவத் மற்றும் அமிதவத் எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1] அமந்தாவா, அம்தாவத், அமிதவத் என்னும் பெயரானது அகமதாபாது என்பதன் திரிபாகக் கருதப்படுகிறது. அதாவது இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து முதலில் சில சிவப்புச் சில்லை (அமந்தாவா அமந்தாவா) சேகரிக்கப்பட்டதால் இப்பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.[2]
வகைப்பாட்டியல்
தொகுஅமந்தாவா பேரினம் இங்கிலாந்து விலங்கியலாளர் எட்வர்ட் பிளைத்தினால் 1836ஆம் ஆண்டு சிவப்புச் சில்லைக்காக இடப்பட்டது. கில்பர்ட் ஒயிட்டின் தி நேச்சுரல் கிசுஸ்டரி அண்ட் ஆண்டிக்விட்டிசு ஆப் செல்போர்ன் பதிப்பின் ஒரு பக்கத்தின் அடிக்குறிப்பில் இப்பேரினப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரினத்தின் பெயர் இந்திய நகர்ப் பெயராகும். கரோலஸ் லின்னேயஸ் 1758-ல் பிரிஞ்ஜிலா அமந்தாவா என்ற பெயரினை சிவப்புச் சில்லைக்கு இட்டார். இதில் அமந்தாவா என்ற சொல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரப் பெயரின் சிதைவு ஆகும். அமாந்தாவா பேரினம் ஆப்பிரிக்காவில் இரண்டு சிற்றினங்களைக் கொண்ட அமாதிவாவின் சகோதரப் பேரினமாகும்.[3]
சிற்றினங்கள்
தொகுஅமந்தாவா பேரினம் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[4]
படம் | பொது பெயர் | அறிவியல் பெயர் | பரம்பல் |
---|---|---|---|
சிவப்புச் சில்லை | அமந்தாவா அமந்தாவா | வங்கதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாக்கித்தான் | |
பச்சை சில்லை | அமந்தாவா பார்மோசா | மத்திய இந்தியா, தெற்கு ராஜஸ்தானைச் சுற்றி, குறிப்பாக ஒரியா கிராமத்தில், மத்திய உத்தரப் பிரதேசம், தெற்கு பீகார் மற்றும் மேற்கு வங்காளம் | |
ஆரஞ்சு-மார்பக மெழுகு அலகு அல்லது வரிக்குதிரை மெழுகு அலகு சில்லை | அமந்தாவா சப்லவா | ஆப்பிரிக்காவில் சகாரா |
மிகவும் நெருங்கிய தொடர்புடைய இரண்டு சில்லைகள், வெப்பமண்டல தெற்காசியாவிலும், ஆப்பிரிக்காவில் மெழுகு அலகு சில்லையும் காணப்படுகின்றது. இந்த பேரினத்தின் பல்வேறு சிற்றினங்கள் சில சமயங்களில் இசுபோரேஜிதசு பேரினத்தில் வைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Newton, A. & H. Gadow. 1896. A dictionary of birds. Black.London. p.11
- ↑ 2.0 2.1 Pittie, Aasheesh (2004). "A dictionary of scientific bird names originating from the Indian region". Buceros 9 (2): 1–30. https://archive.org/details/BirdNamesIndia.
- ↑ Olsson, Urban; Alström, Per (2020). "A comprehensive phylogeny and taxonomic evaluation of the waxbills (Aves: Estrildidae)". Molecular Phylogenetics and Evolution 146: 106757. doi:10.1016/j.ympev.2020.106757.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Waxbills, parrotfinches, munias, whydahs, Olive Warbler, accentors, pipits". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- Clement, Harris and Davis, Finches and Sparrows பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-8017-2
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அமந்தாவா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் அமந்தாவா பற்றிய தரவுகள்