அமர் சிங் கல்லூரி
அமர் சிங் கல்லூரி (ஆங்கிலம்: Amar Singh College;உருது : امر سنگھ کالج سرینگر, காஷ்மீரி : اَمرسنگھ ژاٹٕھال سِرینگر) என்பது இந்தியாவின் சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறிநகரில் உள்ள ஒரு கல்வியியல் மற்றும் தொழில்முறை கல்லூரி ஆகும். சிறீ பிரதாப் கல்லூரிக்குப் பிறகு காசுமீர் பள்ளத்தாக்கின் உள்ள இரண்டாவது பழமையான கல்லூரி இதுவாகும்.
2021-இல் கல்லூரி | |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Light More Light |
---|---|
வகை | கல்வி |
உருவாக்கம் | 1913 |
முதல்வர் | சேக் அஜாசு பசீர் |
அமைவிடம் | வாசீர் பாக், சிறிநகர் , , 34°02′N 74°29′E / 34.03°N 74.48°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | காசுமீர் பல்கலைக்கழகம்,தொகுப்பு கல்லூரி |
இணையதளம் | https://www.amarsinghcollege.ac.in/ |
வரலாறு
தொகுஅமர் சிங் கல்லூரி, நவம்பர் 1913-இல்[1] அமர் சிங் தொழில்நுட்ப நிறுவனமாக நிறுவப்பட்டது. விருப்பமுள்ள மாணவர்களுக்குக் கலை, கலாச்சாரம் மற்றும் கொத்து மற்றும் தச்சு போன்ற அடிப்படை தொழில்களைக் கற்பிக்க இது வழிவகுத்தது. இக்கல்லூரி 29 மே 1914 அன்று மகாராஜா பிரதாப் சிங்கால் முறையாகத் திறக்கப்பட்டது. சூன் 1942-இல், அப்போதைய காசுமீர் மகாராஜாவான ஹரி சிங்கின் தந்தையின் நினைவாக சிறீ பிரதாப் கல்லூரியை இரண்டாகப் பிரித்ததன் மூலம் தொழில்நுட்ப நிறுவனம் அமர் சிங் கல்லூரியாக மாற்றப்பட்டது.[2] இந்தக் கல்லூரி சூன் 1972-இல் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) பி++ தரம் பெற்றது.
இடம்
தொகுஅமர் சிங் கல்லூரி சிறிநகரில் உள்ள வசீர் பாக் நகரில் அமைந்துள்ளது. இது 35 எக்டேர்கள் (86 ஏக்கர்கள்) நிலப்பரப்பில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம், பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கல்லூரியில் 30,000 சதுர மீட்டர்கள் (320,000 sq ft) பரப்பளவில் பல கல்விக் கட்டிடங்கள் உள்ளன. ஆங்கிலோ-இந்தியக் கட்டிடக்கலையின் சிறந்த கலவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற பாரம்பரிய கட்டிடம் 1910-இல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்துவதற்காகக் கட்டப்பட்டது. தற்போது இதில் வேதியியல் துறை, ஆசிரியர் அறை, உள் தர ஒருங்கிணைப்பு அவைப் பிரிவு, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படைப் பிரிவு அறைகள், ஆறு விரிவுரை அரங்குகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கு மூன்று பெரிய அரங்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும் செப்டம்பர் 2014-இல் பேரழிவு ஏற்படுத்திய வெள்ளத்தின் போதும் இந்த பாரம்பரிய கட்டிடம் சேதமடைந்தது.[3] இருப்பினும், இது 2017-18ஆம் ஆண்டில் அப்போதைய சம்மு மற்றும் காசுமீர் மாநில அரசால் இண்டாக் மூலம் பழுதுபார்க்கப்பட்டு அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில், பாரம்பரிய கட்டிடத்தை மறுசீரமைப்பதற்காகக் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புக்கான யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் விருதுகளில் மதிப்புமிக்க விருது அமர் சிங் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.[4][5]
கல்லூரி பற்றி
தொகு- அமர் சிங் கல்லூரி உயர்கல்வித் துறைகள் மற்றும் சுமார் ஐம்பது அரசு கல்லூரிகளுக்கு இடையே தொடர்பாளராகச் செயல்படும் காசுமீர் பிரிவுக்கான கல்லூரியாகச் செயல்படுகிறது.
- அரிய நூல்களின் தொகுப்பு உட்பட சுமார் 70,000 புத்தகங்களின் தொகுப்புடன் கூடிய வசதிகளுடன் கூடிய நூலகம் இந்தக் கல்லூரியில் உள்ளது.
- கல்லூரி அறிவியல், கலை, வணிகம் மற்றும் கணினி பயன்பாடுகளில் இளங்கலைப் படிப்புகளையும், புவியியலில் முதுகலை படிப்புகளையும் வழங்குகிறது.
- தகவல் தொழில்நுட்பம், கணொளி தொகுப்பு, கணினி பயன்பாடு, இணைய வடிவமைப்பு, ஆகியவற்றில் பலகலைக்கழகத்தின் நிதியுதவியுடன் கூடிய கூடுதல் வேலை சார்ந்த படிப்புகளையும் கல்லூரி வழங்குகிறது.
- இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக சிறப்புப் படிப்பு மையங்களில் இந்தக் கல்லூரியும் ஒன்றாகும்.[6]
வசதிகள்
தொகு- நூலகம் [7]
- கணினி ஆய்வகங்கள்
- கலையரங்கம்
- ஜிம்கானா
- உணவகம்
- வகுப்பறைகள்
- விளையாட்டரங்கம்
- தங்கும் விடுதி
கணித அறிவியல் நிறுவனம்
தொகுசம்மு மற்றும் காசுமீர் கணித அறிவியல் நிறுவனம் என்பது காசுமீர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற பொது நிறுவனமாகும். இது சம்மு காசுமீரின் இந்திய நிர்வாக ஒன்றிய பிரதேசமான சிறிநகரில் உள்ள அமர் சிங் கல்லூரியின் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இது 2014-இல் அரசாங்கத்தின் உயர் கல்வித் துறையால் நிறுவப்பட்டது.[8][9][10]
பிரபல முன்னாள் மாணவர்கள்
தொகு- முகமது அமின் நாயக், (தலைமைப் பொறியாளர், மத்திய இராணுவக் கட்டளை மற்றும் இந்திய இராணுவத்தின் முதல் காஷ்மீரி தளபதி)
- பேராசிரியர் அமிதாப் மட்டூ
- மெஹ்ராஜுதீன் வாடூ - கால்பந்து வீரர்
- செவாங் நோர்பெல் - இந்திய குடிமையியல் பொறியியலாளர்
- கேசவ் மாலிக் - கவிஞர்
- கச்சோ சிக்கந்தர் கான் - எழுத்தாளர்
- சானாசு பசீர் - எழுத்தாளர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Tribune, Chandigarh, India - Jammu & Kashmir". Archived from the original on 29 Nov 2014. பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
- ↑ "Amar Singh College History". பார்க்கப்பட்ட நாள் 2023-09-17."Amar Singh College History". www.amarsinghcollege.ac.in. Retrieved 17 September 2023.
- ↑ Ashiq, Peerzada (2020-12-18). "Restoration work on Amar Singh College building in Srinagar wins UNESCO award". https://www.thehindu.com/news/national/other-states/restoration-work-on-amar-singh-college-building-in-srinagar-wins-unesco-award/article33362703.ece.
- ↑ Ganai, Naseer (19 December 2020). "Unesco Award For Srinagar's Amar Singh College Is Huge: Architect Saima Iqbal" இம் மூலத்தில் இருந்து 4 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220704185434/https://www.outlookindia.com/website/story/india-news-unesco-award-for-srinagars-amar-singh-college-is-huge-architect-saima-iqbal/367677.
- ↑ "Srinagar's Amar Singh College conservation project recognised with UNESCO award". 2020-12-28. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
- ↑ "IGNOU Study Centre Amar Singh College Srinagar Admission" (in ஆங்கிலம்). 2023-09-11. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
- ↑ "Amar Singh College, Kashmir's heritage college struggling hard" இம் மூலத்தில் இருந்து 2015-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722193900/http://risingkashmir.in/news/kashmirs-heritage-college-struggling-hard/.
- ↑ "Govt approves permanent faculty for JKIMS | Free Press Kashmir" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-06-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
- ↑ "In a first, JK has Institute for Mathematical Sciences" (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-11-10.
- ↑ "Mathematical training workshop held in Kashmir". 2014-08-16. https://www.business-standard.com/article/news-ani/mathematical-training-workshop-held-in-kashmir-114081600094_1.html.