அமர் பால்
அமர் பால் (Amar Pal)(19 மே 1922 - 20 ஏப்ரல் 2019) என்பர் இந்தியாவினைச் சேர்ந்த வங்காள நாட்டுப்புற பாடகர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபால் 1922ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பிரம்மன்பரியா மாவட்டத்தில் பிறந்தார். பாலுக்கு 10 வயதாக இருந்தபோது இவரது தந்தை மகேசு சந்திர பால் இறந்தார். தாய் துர்கா சுந்தரி தேவியிடம் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றார். புகழ்பெற்ற அல்லாவுதீன் கானின் சகோதரர் உசுதாத் அயத் அலி கானிடம் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்றார்.[1] பின்னர் பால் கொல்கத்தாவில் மணி சக்ரவர்த்தி மற்றும் சுரேன் சக்ரவர்த்தி ஆகியோரிடம் நாட்டுப்புற இசையில் பயிற்சி பெற்றார்.[2]
தொழில்
தொகுஅனைத்திந்திய வானொலியின் பாடலாசிரியரான சசீந்திரநாத் பட்டாச்சார்யாவுடன் பால் 1948-ல் கொல்கத்தா சென்றார். இங்கு இவருக்கு முதன் முதலில் 1951ஆம் ஆண்டு ஆகாஷ்பானி கொல்கத்தாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஏழு தசாப்தங்களில் இவர் ஆயிரக்கணக்கான நாட்டுப்புற மற்றும் நவீன பெங்காலிப் பாடல்களை பதிவு செய்தார். சத்யஜித் ராயின் ஹைரக் ராஜர் தெஷெ ("கோடோய் ரோங்கோ தேகி துனியாய்") என்ற நையாண்டிப் பாடல் இவரைப் பிரபலமாக்கியது. இவர் பின்னணி பாடகராகவும் இசை அமைப்பாளராகவும் பல பெங்காலித் திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.[3]
பால் உலகளவில் நாட்டுப்புற இசை பற்றிய கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் பாசுசிம் பங்கா ராஜ்ய சங்கீத அகாதமியின் துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[2]
இந்திய அரசு, 2007ஆம் ஆண்டு பாலுக்குச் சங்கீத நாடக அகாதமி விருதினை வழங்கியது. மேற்கு வங்காள அரசு 2012-ல் இவருக்குச் சங்கீத மகாசம்மன் விருதை வழங்கியது.[4] இவரை இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் மற்றும் பர்த்வான் பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது.
பங்ளார் லோக்சங்கீத் மற்றும் பங்களார் நாதிர் கான் ஆகிய இரண்டு புத்தகங்களையும் பால் எழுதியுள்ளார்.[5]
பால் பாடிய குறிப்பிடத்தக்கப் பக்திப் பாடல்கள் பின்வருமாறு:
- பிரபாத சமயே
- ஜாகோ ஹெ நகர்பாசி
- ஜாகியா லஹோ கிருஷ்ணா நாம்
- அமி கோதை கெலே
- அமர் கூர் கெனே
- ராய் ஜாகோ
- ராய் ஜாகோ கோ
- ஹரி தின் தோ கெலோ
- ப்ரபதே கௌரங்க னம்
- பாரதி கௌரங்கா லோயா
- மோன் ராதே ராதே
- விருந்தாபான பிலாசினி, முதலியன[6]
இறப்பு
தொகுபால் 20 ஏப்ரல் 2019 அன்று தனது 96[4] வயதில் மாரடைப்பால் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amar Pal, Veteran Bengali Folk Singer, Dies in Kolkata". 20 April 2019. Archived from the original on 3 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Amar Paul". sangeetnatak.gov.in. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
- ↑ . 20 April 2019. https://bengali.indianexpress.com/west-bengal/legendary-folk-artist-amar-pal-is-no-more-94978/.
- ↑ 4.0 4.1 "Noted Bengali folk singer Amar Pal dies". பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
- ↑ "Legendary Bengali folk singer Amar Paul dead". Archived from the original on 21 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ (in bn)Prothom Alo. https://www.prothomalo.com/entertainment/article/1589880.
வெளி இணைப்புகள்
தொகு- Amar Pal at IMDb