அம்பநாடு மலைகள்
அம்பநாடு மலைகள் (Ambanad Hills) அல்லது அம்பநாடு என்பது [தென்னிந்தியா|தென்னிந்திய]] மாநிலமான, கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள புனலூர் வட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேயிலை மற்றும் ஆரஞ்சு தோட்டப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1] அம்புநாடு மலைகளானது கழுத்தூருட்டியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள ஆரியங்காவு பஞ்சாயத்தில் உள்ளது. [2]
அம்பநாடு மலைகள்
அம்பநாடு | |
---|---|
ஆள்கூறுகள்: 8°59′31.5054″N 77°5′4.5594″E / 8.992084833°N 77.084599833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
தோற்றுவித்தவர் | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் |
அரசு | |
• வகை | சனநாயகம் |
• நிர்வாகம் | ஆரியங்காவு பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
அருகில் உள்ள நகரம் | கொல்லம் |
அருகில் உள்ள தொடருந்து நிலையம் | கழுத்துருட்டி |
இந்த இடம் தென் கேரளத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும், இது 'மினி மூணார்' என்று பிரபலமாக அறியப்படுகிறது.[3] அம்பானாடு மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டமானது பிரித்தானியர்களால் அமைக்கப்பட்டது, இது கொல்லம் மாவட்டதில் உள்ள ஒரே தேயிலை தோட்டமாகும். இந்தத் தோட்டமானது திருவிதாங்கூர் இரப்பர் மற்றும் தேயிலை நிறுவனத்தின் கட்டுப்படுத்தப்பட்டில் உள்ளது. இந்த தோட்டம் இந்தியாவின் கிராம்பு வட்டாரப் பகுதியில் (கொல்லம் - நாகர்கோயில்) வருகிறது, இது நாட்டின் மிகப்பெரிய கிராம்பு தோட்டங்களில் ஒன்றாகும். 1800 களில் கிழக்கிந்திய நிறுவனம் துணைக்கண்டத்தில் கிராம்பை அறிமுகப்படுத்திய முதல் இடங்களில் இதுவும் ஒன்றாகும். பயிர் அறுவடைக்கு சிறந்த உழைப்புத் திறன் தேவைப்படுகிறது, எனவே ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தோட்டத்திலேயே தங்கி கிராம்பு அறுவடை செய்ய கிட்டத்தட்ட ஒரு மாதம் வேலை செய்வார்கள்.[4]
காணத்தகவை
தொகு- இரவு தங்குமிடமான தோட்ட பங்களா
- குடமுட்டி அருவி
- காட்சி முனை
- பிரித்தானியர் கால உபகரணங்களுடன் உள்ள தேயிலை தொழிற்சாலை[5]
- மிதிபடகு சவாரி வசதி கொண்ட மூன்று ஏரிகள்
- நெடும்பாரா சிகரம்
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "On top of the Ambanad Hills - Mathrubhumi". Archived from the original on 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
- ↑ "Ambanad Hills - Kerala Tourism". பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
- ↑ "Ambanad Hills And Tea Estate". DTPC Kollam. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
- ↑ "Scent of cloves fills the air in Ambanad". The Hindu. 28 January 2015. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
- ↑ "On top of the Ambanad Hills". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2020-08-07. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.