அம்பிகை கோவில், கிர்னார்

குசராத்து மாநிலத்தின் கோயில்

அம்பிகை கோயில் (Ambika Temple), அம்பாசி கோயில்(Ambaji Temple) என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தின் சூனாகத் மாவட்டத்தில் கிர்நார் மலையில் உள்ள அம்பிகா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் ஆரம்பகால குறிப்பு 8 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோவில் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

வரலாறு

தொகு
 
1876 ஆம் ஆண்டு அம்பிகை கோயில்

திகம்பர ஆச்சார்யா சினாசென்னின் சமண மதத்தின் அரிவம்ச புராணம் ( சாலிவாகன ஆண்டு 705, 783 சி.இ.) கோயிலைப் பற்றி குறிப்பிடுவதால், ஆரம்பகால கோயில் கி.பி. 784 க்கு முன் (அநேகமாக 8 ஆம் நூற்றாண்டின் மத்தியில்) கட்டப்பட்டது ஆகும்.[1] விக்ரம் சம்வத் 1249 (கிபி 1192) தேதியிட்ட கல்வெட்டு வகேலா மந்திரி வாசுதுபாலன் ரைவடகா (கிர்னார்) மலையில் உள்ள அம்பிகா கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டதைக் குறிப்பிடுகிறது. வாசுதுபாலன் மற்றும் அவரது சகோதரர் தேசபாலாவின் சிலைகளை கோயிலில் நிறுவியதாக நரேந்திரபிரப்சூரி குறிப்பிடுகிறார். சிங்கர்சசூரி, வாசுதுபாலனும் அவனது சகோதரன் தேசபாலனும் சென்று அம்பிகையின் கோயிலின் பெரிய மண்டபத்தையும் பரிகாரத்தையும் கட்டினார்கள் என்று குறிப்பிடுகிறார்.[2][1] விக்ரம் சம்வத் 1524 (கி.பி. 1468) தேதியிட்ட கல்ப சூத்திரத்தின் தங்க எழுத்துப் பிரதியில் கடைசியில் கொடுக்கப்பட்ட ஒரு பிரசுதாப் புகழானது, கிர்னாரில் உள்ள அம்பிகை கோயிலை சமல் சாக் என்ற சிரேசுடி (வணிகர்) மீட்டுப் புதுப்பித்ததாகக் குறிப்பிடுகிறது. [2][3][1] செயின்மேடு செயினக் கோயில் யாத்திரை பயணக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கோயிலில் அம்பிகை ஒரு சைன யட்சினி தெய்வமாக இருந்தது. ராணக்பூர் சமணர் கோவிலில் உள்ள சம்வத் 1507 ஆம் நூற்றாண்டில் உள்ள கிர்நார் பட்டாவும் இதே முறையில் அம்பிகையை சித்தரிக்கிறது. இக்கோயில் சமண மரபுப்படி கட்டப்பட்டுள்ளது. கிர்நார் சமணக் கோயில்களுடன் கூடிய மண்டப உச்சவரம்பு பொருத்தம் ஆக உள்ளது. மதுசூதன் தாக்கியின் கூற்றுப்படி, இடைக்காலத்தின் பிற்பகுதியில் கோயில் பிராமண பாரம்பரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அடுத்தடுத்த தாக்குதல்களின் போது அசல் சிலை தொலைந்து போனது, தற்போது கோவிலில் ஒரு பலாகி வணங்கப்படுகிறது. [1]

தற்போதுள்ள கோவில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எனவே கோயில் கட்டுமானம், புதுப்பித்தல் மற்றும் புனரமைப்பு வரலாறு 8 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை நீண்டுள்ளது. [2]

கட்டிடக்கலை

தொகு

தற்போதைய கோயில் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாரம்பரிய இந்திய கோயில் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. [2][1]

யாத்திரை

தொகு

இந்த கோவிலுக்கு புதுமண தம்பதிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மணமகனும், மணமகளும் தங்களுடைய ஆடைகளை ஒன்றாகக் கட்டிக் கொண்டு, அவர்களது ஆண் மற்றும் பெண் உறவினர்கள் கலந்து கொண்டு, அம்மனை வணங்கி, தேங்காய் மற்றும் பிற பிரசாதங்களை வழங்குகிறார்கள். இந்த புனித யாத்திரையானது, திருமணமான இன்பத்தைத் தொடரும் தம்பதியருக்குப் பெறுவதாகக் கருதப்படுகிறது. [4]

இந்த கோவிலுக்கு இந்து மற்றும் சமண யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Dhaky, M. A. (1997). Shah, Jitendra B. (ed.). મહાતીર્થ ઉજ્જયતગિરિ (ગિરનાર તીર્થ) [Mahatirtha UjjayantGiri (Girnar Tirtha)]. Ahmedabad: Sheth Anandji Kalyanji. pp. 5, 42–43.
  2. 2.0 2.1 2.2 2.3 Tiwari, Maruti Nandan Prasad (1989). Ambikā in Jaina Art and Literature. Bharatiya Jnanpith. p. 145.
  3. Sompura, Kantilal F. (1968). The Structural Temples of Gujarat, Upto 1600 A.D. (in ஆங்கிலம்). Gujarat University. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86186-245-0.
  4. Murray, John (1911). "A handbook for travellers in India, Burma, and Ceylon". Internet Archive. pp. 155–157. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகை_கோவில்,_கிர்னார்&oldid=3846797" இலிருந்து மீள்விக்கப்பட்டது