கிர்நார் சமணக் கோயில்கள்
கிர்நார் சமணக் கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு கிழக்கில் 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிர்நார் எனும் ரைவத மலையில் கடல் மட்டத்திலிருந்து 2370 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 16 கோயில்கள் கொண்ட இம்மலைக்கோயில்களுக்குச் செல்ல 3800 படிக்கட்டுகள் உள்ளது. இக்கோயில்கள் பளிங்கு கற்களால் நிறுவப்பட்டது.[1][2] இந்த சமணத்தின் திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் பிரிவினர்களுக்கு பொதுவானது.
கிர்நார் சமணக் கோயில்கள் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கிர்நார் மலை, ஜூனாகத் அருகில் ஜூனாகத் மாவட்டம், குஜராத், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 21°31′36″N 70°31′20″E / 21.5266295°N 70.5222246°E |
சமயம் | சமணம் |
24 தீர்த்தங்கரர்களில் 22வது தீர்த்தங்கரரான அரிஷ்டநேமி எனப்படும் நேமிநாதர் கிர்நார் மலையில் முக்தி அடைந்ததார். இக்கோயில் நேமிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். நேமிநாதர் கோயில் செவ்வக வடிவத்தில் 195 x 130 அடி நீள, அகலம் கொண்டது. [1][2] சாளுக்கியப் பேரரசர் செயசிம்ம சித்தராசன் (ஆட்சி:1092 – 1142) ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரா பிரதேச ஆளுநராக இருந்த சஜ்ஜனா என்பவர் இக்கோயில்களை மறுசீரமைத்து நிறுவினார்.[3][4]இக்கோயில்களில் நேமிநாதர் கோயில் கருவறையில் கருங்கல்லால் நேமிநாதரின் சிற்பம், உள்ளங்கையில் சங்கு ஏந்தி அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ளது.[1][2]
பிற முக்கியக் கோயில்கள்
தொகு- ஆதிநாதர் கோயில்
- ஐந்து கொடுமுடிகள் கொண்ட பஞ்ச மேரு கோயில் 1859ம் ஆண்டில் கட்டப்பட்டது.[5]
- குமாரபாலரின் கோயில்
- வாஸ்துபால விகாரை
- சம்பிரதி ராஜா கோயில்
- அம்பிகா மாதா கோயில்
- சௌமுகி கோயில்
படக்காட்சிகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Murray 1911, ப. 155-157.
- ↑ 2.0 2.1 2.2 Burgess 1876, ப. 166.
- ↑ Dhaky 2010, ப. 102.
- ↑ Madhusudan Dhaky (1961). Deva, Krishna. ed. "The Chronology of the Solanki Temples of Gujarat". Journal of the Madhya Pradesh Itihas Parishad (Bhopal: Madhya Pradesh Itihas Parishad) 3: 43–44, 54-55. http://vmis.in/Resources/digital_publication_popup?id=136#page/44.
- ↑ Burgess 1876, ப. 168.
உசாத்துணை
தொகு- Dhaky, M. A. (2010). Shah, Jitendra B. (ed.). સાહિત્ય, શિલ્પ અને સ્થાપત્યમાં ગિરનાર [Girnar in Literature, Sculptures and Architecture]. L. D. Series: 148 (Sambodhi-Puratatva-Visheshank-2). Ahmedabad: Lalbhai Dalpatbhai Institute of Indology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85857-30-X.
- Burgess, James (1876). Report on the Antiquities of Kâṭhiâwâḍ and Kachh, Being the Result of the Second Season's Operations of the Archaeological Survey of Western India, 1874-75. London: India Museum. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- Murray, John (1911). "A handbook for travellers in India, Burma, and Ceylon". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.