ரூகொல்லா கொமெய்னி

(அயத்தொல்லா கொமெய்னி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி (Sayyid Ruhollah Mūsavi Khomeini, பாரசீக மொழி: سید روح‌الله موسوی خمینی‎, 24 செப்டம்பர் 1902 – 3 சூன் 1989) ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முசுலிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார். 1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் இவர் ஈரானின் அதியுயர் தலைவராக 1979 முதல் 3 சூன் 1989 வரை இருந்தார். இவருக்குப் பின்னர் ஈரானின் அதியுயர் தலைவராக 1989 முதல் அலி காமெனி பதவியில் உள்ளார்.

ஆயதுல்லா
ரூகொல்லா மூசவி கொமெய்னி
1வது ஈரானிய உச்சத் தலைவர்
பதவியில்
3 திசம்பர் 1979 – 3 சூன் 1989
முன்னையவர்முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
பின்னவர்அலி காமெனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1902-09-24)24 செப்டம்பர் 1902 [1][2][3][4][5]
கொமெயின், ஈரான்
இறப்பு3 சூன் 1989(1989-06-03) (அகவை 86)
தெகுரான், ஈரான்
தேசியம்ஈரானியர்
அரசியல் கட்சிஇசுலாமியக் குடியரசுக் கட்சி
துணைவர்
கதிஜா சக்கஃபி (தி. 1929⁠–⁠1989)
பிள்ளைகள்முசுத்தபா
சாரா
சாதிக்
பரீதா
அகமது
கையெழுத்து
இணையத்தளம்www.imam-khomeini.ir

1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,[9] இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர[10] மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் எனக் கருதப்பட்டார்.[11].

இளமைப் பருவம்

தொகு

இவர் 1903 -ல் தனது தந்தையாரின் மறைவிற்குப் பின் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது 6 வது வயதில் பாரசீக மொழியில் குரானைக் கற்க ஆரம்பித்தார். பின்னர் பள்ளியில் மதக்கல்வி பயின்றார். தனது இளமைப் பருவத்தில் பெரும்பாலும் மதக்கல்வி கற்றார். இஸ்லாமிய சட்டக்கல்வியைக் கற்றறிந்தார். கவிதையிலும், தத்துவத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவரது ஆசிரியர் 'மிர்ஸா முகம்மது அலி ஸஹஹபாடியின் தாக்கம் அவரிடம் இருந்தது. கொமேனி கிரேக்கத் தத்துவத்தைக் கற்றார். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. 'அவிஸென்னா 'மற்றும் 'முல்லா ஸாட்ரா' ஆகிய இஸ்லாமிய தத்துவ ஞானிகளின் கருத்துகளே கொமேனியை அதிகளவு கவர்ந்தன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. DeFronzo 2007, ப. 287. "born 22 September 1901..."
  2. "History Of Iran Ayatollah Khomeini – Iran Chamber Society". Iranchamber.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
  3. "Khomeini Life of the Ayatollah By BAQER MOIN". The New York Times. https://www.nytimes.com/books/first/m/moin-khomeini.html. பார்த்த நாள்: 19 January 2012. 
  4. "Imam Khomeini Official Website | پرتال امام خمینی". harammotahar.ir. Archived from the original on 3 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2012.
  5. Karsh 2007, ப. 220. "Born on 22 September 1901
  6. Bowering, Gerhard; Crone, Patricia; Kadi, Wadad; Stewart, Devin J.; Zaman, Muhammad Qasim; Mirza, Mahan, eds. (28 November 2012). The Princeton Encyclopedia of Islamic Political Thought. Princeton University Press. p. 518. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400838554.
  7. Malise Ruthven (8 April 2004). Fundamentalism: The Search For Meaning: The Search For Meaning (reprint ed.). Oxford University Press. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191517389.
  8. Jebnoun, Noureddine; Kia, Mehrdad; Kirk, Mimi, eds. (31 July 2013). Modern Middle East Authoritarianism: Roots, Ramifications, and Crisis. Routledge. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135007317.
  9. TIME. "TIME Person of the Year 1979: Ayatullah Khomeini." 7 January 1980. Accessed 22 November 2008 at http://www.time.com/time/subscriber/personoftheyear/archive/stories/1979.html பரணிடப்பட்டது 2008-11-23 at the வந்தவழி இயந்திரம்
  10. [1]
  11. Arjomand, S.A. "Khumayni." Encyclopaedia of Islam, Second Edition. Brill, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூகொல்லா_கொமெய்னி&oldid=3661886" இலிருந்து மீள்விக்கப்பட்டது