அரச மறிமான்
அரச மறிமான் ( Royal antelope ) என்பது ஒரு மேற்கு ஆப்பிரிக்க மறிமான் ஆகும். இது உலகின் மிகச்சிறிய மறிமானாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது முதன்முதலில் 1758 இல் ஸ்வீடிஷ் விலங்கியல் நிபுணர் கரோலஸ் லின்னேயசால் விவரிக்கப்பட்டது. இது நிற்கும்போது தோள்வரை வெறும் 25 சென்டிமீட்டர் (10 அங்குலம்) உயரமும், 2.5–3 கிலோகிராம் எடையும் உள்ளதாக இருக்கும். இதன் ஒரு சிறப்பியல்பு அம்சமாக இதன் நீண்ட, மெல்லிய கால்கள் ஆகும். முன்கால்களை விட பின்னங்கால்கள் இரண்டு மடங்கு நீண்டதாக இருக்கும். கொம்புகள் ஆண் மான்களுக்கு மட்டுமே உண்டு. குட்டையான, வழுவழுப்பான, கூரான கொம்புகள் 2.5-3 சென்டிமீட்டர்கள் (1.0-1.2 அங்குலம்) நீளமுள்ளதாக பின்னோக்கி வளைந்திருக்கும். இதன் உடலில் உள்ள மென்மையான உரோமம் சிவப்பு நிறத்தில் இருந்து பொன் பழுப்பு நிறத்தில் இருக்கும். அடிப்பகுதி முற்றிலும் மாறுபட்டதாக வெள்ளை நிறத்தில் இருக்கும். பேட்சின் குள்ள மறிமானை ஒப்பிடுகையில், அரச மறிமான் நீண்ட முகவாய், பரந்த உதடுகள், சிறிய வாய், சிறிய கன்னத் தசைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அரச மறிமான் Royal antelope | |
---|---|
சான் டியாகோ உயிரியல் பூங்காவில் ஒரு அரச மறிமான் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Neotragus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/NeotragusN. pygmaeus
|
இருசொற் பெயரீடு | |
Neotragus pygmaeus (லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் [2] | |
Capra pygmaea Linnaeus, 1758 |
பொதுவாக இது ஒரு இரவாடி (இரவில் சுறுசுறுப்பாக இருக்கும்) ஆகும். அரச மறிமான் மிகுந்த எசரிக்கை உணர்வு மிக்கது. தான் வாழும் பிரதேசத்தின் எல்லைக்குள் சாணத்தை குவித்து வைக்கும். அடிக்கடி சாணத்தை முகர்ந்து தன் இருப்பிடத்தைக் கண்டு கொள்ளும். இது ஒரு தாவர உண்ணி ஆகும். பகலில் மறைந்திருந்து இரவில் வெளியே வரும் அரச மறிமான்கள் சிறிய அளவிலான புத்தம்புதிய தளிர்களை விரும்பி உண்கிறது. மேலும் செடிகளில் பூத்திருக்கும் மலர்கள், பழங்கள், காளான்கள் போன்றறையும் சிலசமயம் உண்கிறது. மற்ற நியோட்ராஜின்களைப் போலவே, அரச மறிமானும் ஒரு துணையைக் கொண்டது. இரு பாலினத்தவையும் ஆறு மாதங்களுக்கு முன்பே பாலியல் முதிர்ச்சியடைகின்றன . நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் பிறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் கர்பக் காலம் அறியப்படவில்லை. கர்ப்பகாலத்திற்குப் பிறகு ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது.
அரச மறிமான் புதர்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாக வளர்ந்த பகுதிகளை விரும்புகிறது. கோட் டிவார், கானா, கினி, லைபீரியா, சியேரா லியோனி போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சூடான, ஈரமான தாழ்நிலக் காடுகளில் இது வாழ்கிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தால் அரச மறிமான் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்விட சீரழிவு மற்றும் விரிவடைந்து வரும் மனித குடியிருப்புகள் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வருவதாக அஞ்சப்படுகிறது. வேட்டையாடுவது இந்த மறிமான் உயிர்வாழ்விற்கான குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது.
வகைபிரித்தல் மற்றும் சொற்பிறப்பியல்
தொகு"ராயல் ஆன்டெலோப்" என்ற பொதுப்பெயரானது, டச்சு மேற்கிந்திய நிறுவனத்துடன் தொடர்புடைய வில்லெம் போஸ்மன் என்ற வணிகரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்டது. இது உள்ளூர் மக்களால் "சிவப்பு மான்களின் அரசர்" (அதாவது, மறிமான்களின் அரசர்) என்று அழைக்கப்பட்டது.
விளக்கம்
தொகுஅரச மறிமானானது உலகின் மிகச்சிறிய மறிமான் மற்றும் அசைபோடும் விலங்கு ஆகும்.[3] இது மிகச்சிறிய ஆபிரிக்க குளம்பி ஆகும் இதையடுத்து பேட்ஸின் குள்ள மறிமான் உள்ளது; அரச மறிமான் நிற்கும்போது தோள்வரை வெறும் 25 சென்டிமீட்டர்கள் (10 அங்) வரை இருக்கும். மேலும் எடை 2.5–3 கிலோகிராம்கள் (5.5–6.6 lb) இருக்கும் தலை மற்றும் உடல் நீளம் பொதுவாக 40 சென்டிமீட்டர்கள் (16 அங்) இருக்கும். இதன் ஒரு சிறப்பியல்பு அம்சமாக இதன் நீண்ட, மெல்லிய கால்கள் உள்ளன. இதன் முன்னங்கால்களை விட இரண்டு மடங்கு நீளமான பின்னங்கால்களைக் கொண்டுள்ளது. இதில் முயலுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது.[3] மேலும் இதற்கு உள்ள மெல்லிய வாலானது, 5–8 சென்டிமீட்டர்கள் (2.0–3.1 அங்) நீளமுள்ளதாகவும், அடிப்பகுதியில் வெண்மையாகவும், நூணிப்பகுதியில் வெள்ளை உரோமங்களுடன் முடிவடையும். இந்த இனங்கள் பால் ஈருருமை கொண்டவையாகும். ஆண் மான்களை விட பெண் மான்கள் பெரியவை. ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன. இவை 2.5–3 சென்டிமீட்டர் (1.0–1.2 அங்குலம்) நீளம் கொண்டதாகவும் குட்டையாகவும், வழுவழுப்பானதாகவும், கூர்முனை கொண்டதாகவும் இருக்கும்.[3]
இதன் உடல் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து பொன் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் வயிற்றுப் பகுதி முற்றிலும் மாறுபட்டு வெள்ளையாக இருக்கும். ஒரு பழுப்பு நிற பட்டை மார்பின் குறுக்கே உளது. மேலும் கழுத்தில் ஒரு தனித்துவமான செம்பழுப்பு பட்டை இருப்பதைக் காணலாம். கன்னம் மற்றும் கால்களின் இடையலுள்ள பகுதிகள் வெண்மையானவை. முகம் பெரியது, இதன் கண்கள் அடர் பழுப்பு நிறமானவை. சிறிய அரூகுறை காதுகள், ஒரு மெல்லிய முகவாய் மற்றும் ஒரு பெரிய சாம்பல் இளஞ்சிவப்பு மூக்கின் முனை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.[3][3]
சூழலியல் மற்றும் நடத்தை
தொகுஅரச மறிமானை காட்டில் பார்ப்பது எளிதன்று. ஒரு சிறு ஒலியைக் கேட்டாலும் முயலைப் போல ஒரேபாய்ச்சலாகப் பாய்ந்து எங்காவது புதருக்குள் ஒளிந்து கொள்ளும். அதன் விளைவாக இதன் நடத்தை பற்றி அதிகம் அறியப்படவில்லை. உடலைத் தரையில் தாழ்வாகக் கொண்டு வேகமாக ஓடுவதன் மூலமாகவோ அல்லது பெரிய, நன்கு தசைகள் கொண்ட பின்னங்கால்களால் வலுவான பாய்ச்சல்கள் மூலமாகவோ இது விரைவாக செல்லும். இது ஒரே பாய்ச்சலில் 2.8 மீட்டர் (9.2 அடி) தொலைவுகு பாயும், மேலும் தரையில் இருந்து 55 சென்டிமீட்டர் (22 அங்குலம்) உயரம் வரை உயரம் வரை குதிக்கும்.[4] இது பொதுவாக இரவாடி (இரவில் சுறுசுறுப்பாக இருக்கும்), இருப்பினும் பகலிலிலும் இதனை சல சமயம் பார்க்கலாம். இது பொதுவாக பகலில் தன் மறைவிடத்தில் ஓய்வெடுக்கும்.[5] ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எல்லைப் பிரதேசம் உண்டு. இதன் எல்லைக்குள் சாணத்தைக் குவித்து வைக்கும். இந்தச் சாணத்தை அடிக்கடி முகர்ந்து தன் இருப்பிடதை கண்டு கொள்ளும்.
உணவுமுறை
தொகுஇது ஒரு தாவர உண்ணி ஆகும். இது சிறிய அளவிலான புதிய தளிர்களை விரும்புகிறது; பழங்கள் மற்றும் பூஞ்சைகளை எப்போதாவது உண்ணும். இம்மறிமான் இரவாடியாகக் கருதப்பட்டாலும், விலங்கியல் நிபுணர் ஜொனாதன் கிங்டன் இது பகல் முழுவதும் மேய்வதாக கூறுகிறார்.[6] பேட்ஸின் குள்ள மறிமானுடன் ஒப்பிடுகையில், அரச மறிமான் நீண்ட முகவாய், பரந்த உதடுகள், சிறிய வாய் மற்றும் சிறிய கன்னத் தசைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.[3]
இனப்பெருக்கம்
தொகுமற்ற நியோட்ராஜின்களைப் போலவே, அரச மறிமானும் ஒரு துணையை மட்டும் கொண்டது. இருப்பினும் பலதுணைகளை சிலசமயம் கொண்டிருக்கும். இரு பாலினத்தவையும் ஆறு மாத வயதிற்குள் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் பிறப்புகள் பதிவாகியுள்ளன. அறியப்படாத கர்ப்பகாலத்திற்குப் பிறகு பொதுவாக ஒரு குட்டி பிறக்கிறது. குட்டி 0.8-1 கிலோகிராம் (1.8-2.2 பவுண்டுகள்) எடை இருக்கும். இந்தக் குட்டி வயது வந்த மானின் எடையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். குட்டியின் நிறம் பெரிய மான்களுக்கு உள்ளது போலவே இருக்கும்.[4][5] 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் பிடித்து வளர்கப்பட்ட அரச மறிமானின் அதிகபட்ச ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் என மதிப்பிடப்பட்டது.[7]
வாழ்விடம் மற்றும் பரவல்
தொகுஅரச மறிமான் புதர்கள் மற்றும் அடர்த்தியாக வளர்ந்துள்ள பிற தாவரங்கள் உள்ள பகுதிகளை விரும்புகிறது. கோட் டிவார், கானா, கினி, லைபீரியா, சியேரா லியோனி போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சூடான, ஈரமான தாழ்நிலக் காடுகளில் இது வாழ்கிறது. விலங்குகளின் வாழ்விடம் வன விளிம்புகள் மற்றும் இரண்டாம் நிலை காடுகளையும் உள்ளடக்கியது. இதன் புவியியல் எல்லை தென்மேற்கு கினியாவில் உள்ள கொனௌன்கன் மாசிஃப் முதல் சியரா லியோன், லைபீரியா மற்றும் கோட் டி ஐவரி வழியாக கானாவில் உள்ள வோல்ற்றா ஆறு வரை கிழக்கு நோக்கி நீண்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவின் வனப்பகுதிகளுக்கு வடக்கே உள்ள பிராந்தியத்திலும் அரச மறிமான் காணப்படலாம்.[6]
அச்சுறுத்தல்களும் பாதுகாப்பும்
தொகுபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தால் அரச மறிமான் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1999 இல், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் மறிமான் நிபுணர் குழு இவற்றின் மொத்த எண்ணிக்கை சுமார் 62,000 இருக்கலாம் என மதிப்பிட்டது. இருப்பினும், இது குறைத்து மதிப்பிடப்பட வாய்ப்புள்ளது. இவற்றின் வசிப்பிடச் சீரழிவு மற்றும் விரிவடைந்து வரும் மனிதக் குடியேற்றம் போன்றவற்றின் காரணமாக இவன்னிற் எண்ணிக்கை தொகை குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. வேட்டையாடப்படுவது இந்த விலங்கிற்கான குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாகும்; சியரா லியோன் மற்றும் லைபீரியாவில் இது அரிதாகவே வேட்டையாடப்படுகிறது. அதேசமயம் இது கோட் டி ஐவரியில் வேட்டையின் முக்கிய ஆதாரமாக உள்ளது. தாய் தேசிய பூங்கா, ஹவுட் பண்டாமா விலங்கினங்கள் மற்றும் ஃப்ளோரா ரிசர்வ் மற்றும் மாபி-யாயா வகைப்படுத்தப்பட்ட காடுகள் (கோட் டிவார்) காக்கும் தேசிய பூங்கா மற்றும் அசின்-அட்டன்டான்சோ விளையாட்டு உற்பத்தி இருப்பு (கானா); ஜியாமா மற்றும் டிக்கே வன இருப்புக்கள் (கினியா); திவாய் தீவு மற்றும் கோலா மழைக்காடு தேசிய பூங்கா (சியரா லியோன்) ஆகியவை அரச மறிமான்கள் காணப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்..
குறிப்புகள்
தொகு- ↑ IUCN SSC Antelope Specialist Group (2016). "Neotragus pygmaeus". IUCN Red List of Threatened Species 2016: e.T14602A50190835. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T14602A50190835.en. https://www.iucnredlist.org/species/14602/50190835. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Groves, C.; Grubb, P. (2011). Ungulate Taxonomy. Baltimore, Maryland (USA): Johns Hopkins University Press. pp. 144, 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0093-8.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5
{{cite book}}
: Empty citation (help) - ↑ 4.0 4.1 Owen, J. (1973). "Behaviour and diet of a captive royal antelope, Neotragus pygmaeus L.". Mammalia 37 (1): 56–65. doi:10.1515/mamm.1973.37.1.56. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-1547.
- ↑ 5.0 5.1 Huffman, B. " Neotragus pygmaeus Royal antelope". Ultimate Ungulate. பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.
- ↑ 6.0 6.1 Kingdon, J. (2015). The Kingdon Field Guide to African Mammals (2nd ed.). London, UK: Bloomsbury. pp. 524–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781472912367.
- ↑ Jones, M. L. (1993). "Longevity of ungulates in captivity". International Zoo Yearbook 32 (1): 159–69. doi:10.1111/j.1748-1090.1993.tb03529.x.