அரவிந்த பால பஜனோர்
அரவிந்த பாலா பஜனோர் (Aravinda Bala Pajanor) (5 திசம்பர் 1935– மார்ச் 2013) ஓர் இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் முன்னாள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரும் ஆவார்.[3] இவர் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலிருந்து 5வது மற்றும் 6வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர், மத்திய அமைச்சராகச் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிமுக அரசியல்வாதி ஆவார்.[4]
அரவிந்த பால பஜனோர் | |
---|---|
அமைச்சர்-பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியா, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் | |
பதவியில் 19 ஆகத்து 1979 – 23 திசம்பர் 1979 | |
பிரதமர் | சரண் சிங் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 25 மார்ச்சு 1977 – 22 ஆகத்து 1979 | |
முன்னையவர் | மோகன் குமாரமங்கலம் |
பின்னவர் | ப. சண்முகம் |
தொகுதி | புதுச்சேரி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புதுச்சேரி (நகரம்), இந்தியா[1] | 5 திசம்பர் 1935
இறப்பு | 20 மார்ச்சு 2013 ஐக்கிய நாடுகள்[2] | (அகவை 77)
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
முன்னாள் கல்லூரி | டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை |
வாழ்க்கை வரலாறு
தொகுஇந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் நகரில் 5 திசம்பர் 1935 அன்று அப்பசாமி பஜனருக்கு மகனாகப் பிறந்தார். காரைக்கால் புனித மேரி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியிலும் சென்னை, இலயோலா கல்லூரியிலும் தனது கல்வியைப் பெற்றார்.[1] பின்னர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.
புதுச்சேரி விளையாட்டு குழுமத் தலைவராகவும், மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅரவிந்த பால பஜனோர், பரீதா கஜலட்சுமியினை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். இங்கு வயது முதிர்வு காரணமாக 20 மார்ச் 2013 அன்று இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile". Parliament of India, Lok Sabha. 1935-12-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ "24th March 2013". The Hindu. 2013-03-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ "Council of Ministers (1947-2015)" (PDF). eparlib.nic.in.
- ↑ 4.0 4.1 "Former union minister Aravinda Bala Pazhanoor passes away". News18. 2013-03-23. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.