அரிபாவ் பாகடே

இந்திய அரசியல்வாதி

அரிபாவ் கிசான்ராவ் பாகடே (Haribhau Bagade)(பிறப்பு 17 ஆகத்து 1945) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். தற்போது இராசத்தான் ஆளுநராக பணியாற்றுகிறார். மகாராட்டிராவினைச் சேர்ந்த இவர் 2014-இல் மகாராட்டிர சட்டமன்ற சபாநாயகராக இருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அரசியலில் செயல்படுகிறார்.[1]

அரிபாவ் பாகடே
45வது இராசத்தான் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 சூலை 2024
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
துணைமுதல்வர்பிரேம் சந்த் பைரவா
தியா குமாரி
முன்னையவர்கல்ராஜ் மிஸ்ரா
மகாராட்டிர சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
12 நவம்பர் 2014 – 25 நவம்பர் 2019
Deputyவிஜய்ராவ் பாசுகரராவ் அவுதி
முன்னையவர்திலீப் வால்செ-பாட்டீர்
பின்னவர்நானாபாவு பால்குனராவ் பட்டோலே
உணவு, குடிமைப் பொருள் வழங்கல்
மகாராஷ்டிர அரசு
பதவியில்
1997–1999
tதோட்டக்கலை, வேலைவாய்ப்பு உறுதித் துறை அமைச்சர்
மகாராஷ்டிர அரசு
பதவியில்
1995–1997
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
2014 – சூலை 2024
முன்னையவர்கல்யாண் கலே
பின்னவர்காலியிடம்
தொகுதிபுள்ளம்ப்ரி
பதவியில்
1985–2004
முன்னையவர்கேசவ்ராவு ஆதேடே
பின்னவர்கல்யாண் கலே
தொகுதிஅவுரங்காபாத் கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஆகத்து 1945 (1945-08-17) (அகவை 79)
புள்ளம்ப்ரி, ஐதராபாத் , இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)ஆளுநர் இல்லம், செய்ப்பூர், இராசத்தான், இந்தியா
வேலைஅரசியல்வாதி

சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் சிட்டெபிம்பால்கான் கிராமத்தில் மராட்டிய குஜ்ஜர் குடும்பத்தில் அரிபாவ் பாகடே பிறந்தார்.

தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் ஆர்வலராகவும், உறுப்பினராகவும் இருந்த அரிபாவ் பாக்டே, மராத்வாடா பிராந்தியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அரசியல் வட்டாரங்களில் "நானா" என்று பிரபலமாக அறியப்பட்டார். 1980 வரை இவர் பாரதிய ஜனசங்கத்துடன் இருந்தார்.


1985ஆம் ஆண்டில் அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்றத்திற்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2014-ல் மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் கல்யாண் கலேயினை புலம்ப்ரி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடையச் செய்தார். மேலும் 2019 சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 2014ஆம் ஆண்டில் மகாராட்டிரவில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைத்தபோது, இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இவர் மகாராட்டிர அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார். மேலும் இவர் மகாராட்டிர மாநிலத்தின் பாஜக கட்சியின் கிராமப்புற முகமாகக் கருதப்பட்டார்.

2024 சூலை 27 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவினால் இராசத்தான் மாநில ஆளுநராக அரிபாவ் பாகடே நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP's Haribhau Bagde unanimously elected Maharashtra's Assembly Speaker". The Economic Times. 12 November 2014. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  2. "Madhya Pradesh Assembly Election Results in 1985".
  3. "Bagde haribhau Kisan(Bharatiya Janata Party(BJP)):Constituency- Phulambri(AURANGABAD) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிபாவ்_பாகடே&oldid=4157400" இலிருந்து மீள்விக்கப்பட்டது