அருள்மிகு பயறணீசுவரர் திருக்கோவில்

பயறணீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள 1,000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பெயர் முற்கபுரீஸ்வரர் மற்றும் பயறணீசுவரர் (பயறு மாலை அணிந்த ஈசுவரர்) ஆகும். அம்பிகையின் திருப்பெயர் சுகந்தகுந்தளாம்பிகை அல்லது பூங்குழல்நாயகி ஆகும். முற்கபுரி என்று வட மொழியிலும், பயறணீச்சுரம் என்று தமிழிலும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியுள்ளார்.

பயறணீசுவரர் கோயில்
பயறணீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
பயறணீசுவரர் கோயில்
பயறணீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:11°11′28″N 79°17′33″E / 11.1910°N 79.2924°E / 11.1910; 79.2924
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:அரியலூர் மாவட்டம்
அமைவிடம்:உடையார்பாளையம்
சட்டமன்றத் தொகுதி:ஜெயங்கொண்டம்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
ஏற்றம்:131 m (430 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பயறணீசுவரர்
தாயார்:சுகந்த குந்தளாம்பிகை
(நறுமலர் பூங்குழல் நாயகி)
குளம்:காண்டீப தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
பங்குனி பிரம்மோற்சவம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

தலபுராணம் தொகு

முன்னர் ஒரு மன்னன் இக்கோயில் கட்ட நிதி திரட்ட வேண்டி மிளகுக்கு அதிக வரி விதித்திருந்தானாம். அதனால், இவ்வழியே மிளகு கொண்டு சென்ற ஒரு வணிகன் சுங்க வரியைத் தவிர்ப்பதற்காக தான் கொண்டு சென்ற மிளகு மூட்டையைப் பயறு என்று சொல்லிச் சென்றானாம். அவன் விருத்தாசலத்தில் மூட்டையைத் திறந்து பார்த்தபொழுது அவன் கொண்டு சென்ற மிளகு எல்லாம் பயறாக இருக்கக் கண்டு, தன் தவறை உணர்ந்து மீண்டும் இக்கோயிலை அடைந்து, சுங்கம் செலுத்தி இறைவனை இறைஞ்ச, எம்பெருமான் அவன் பயறை எல்லாம் மீண்டும் மிளகாக்கித் தந்தார் என்றொரு கதை இக்கோயிலை குறித்து உண்டு.

இத்தலத்து விநாயகரின் பெயர் வில்வளைத்த விநாயகர் ஆகும். அர்ச்சுனனின் தன் காண்டீபம் குறித்து மிகுந்த அகந்தை கொண்டிருந்தபோது, அதை வளைத்து அவன் கர்வத்தை ஒடுக்கினார் என்பர்.

அமைவிடம் & போக்குவரத்து வசதிகள் தொகு

திருச்சி - ஜெயங்கொண்டம் சாலையில், ஜெயங்கொண்டத்திலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள உடையார்பாளையம் ஊரில் பயறனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அரியலூர், திருச்சி, விருத்தாசலம் ஆகிய ஊர்களிலிருந்து உடையார்பாளயத்திற்கு நேரடி பேருந்து வசதி உண்டு. [1]

மேற்கோள்கள் தொகு

  1. [http://www.findmytemple.com/ta/சிவன்/t125-பயரணீஸ்வரர்-உடையார்-பாளையம் அருள்மிகு பயறணீநாத சுவாமி திருக்கோவில், உடையார் பாளையம், அரியலூர் மாவட்டம்]

வெளி இணைப்புகள் தொகு