குறைத் தலைப்புப் பக்கம்

நூல் முன்பகுதியின் கூறு
(அரைத் தலைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

குறைத் தலைப்புப் பக்கம் அல்லது அரைத் தலைப்புப் பக்கம் என்பது, நூலொன்றின் முன் பகுதியின் ஒரு கூறு ஆகும். இப் பக்கம் இருப்பின் இது, தலைப்புப் பக்கத்துக்கு முன் காணப்படும். இப்பக்கம், நூலின் தலைப்பு, ஆக்குனர், பதிப்பகம் போன்ற பல தகவல்களைத் தரும் தலைப்புப் பக்கத்தைத் போலன்றி, நூலின் தலைப்பை மட்டுமே கொண்டிருக்கும். இன்றும் நூல்கள் குறைத்தலைப்புப் பக்கத்தைக் கொண்டிப்பினும், செலவைக் குறைப்பதற்காகச் சில பதிப்பகங்கள் இப்பக்கத்தைத் தவிர்த்து விடுவதும் உண்டு. இது தலைப்புப் பக்கம் உள்ள விரிப்புக்கு முதல் விரிப்பில் வலப்புறம் அமைவதனால், முன்படப்பக்கத்தைக் கொண்டுள்ள நூல்களில் இப் பக்கத்தின் பின்புறத்தில் முன்படப்பக்கம் இருக்கும். முன்படப்பக்கம் இல்லாவிட்டால் பெரும்பாலும் இதன் பின்புறத்தில் எதுவும் இல்லாமல் வெறுமையாகவே காணப்படுவது உண்டு.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறைத்_தலைப்புப்_பக்கம்&oldid=1353852" இலிருந்து மீள்விக்கப்பட்டது