அறிவியல் நிறுவனம், மும்பை

அறிவியல் நிறுவனம் (The Institute of Science, Mumbai)(முன்னர் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் என்று அழைக்கப்பட்டது) இந்தியாவில் மும்பையில் அமைந்துள்ள முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு நிறுவனம் ஆகும்.[1] இது மகாராட்டிர அரசால் நிர்வகிக்கப்படுகிறது. 2019 ஆண்டு முதல் டாக்டர் ஹோமிபாபா மாநில பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டது.

அறிவியல் நிறுவனம், மும்பை
குறிக்கோளுரைIt is good to seek out the causes of things
வகைஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1920
பணிப்பாளர்எசு. பி. குல்கர்னி
கல்வி பணியாளர்
50
அமைவிடம், ,
வளாகம்நகரம்
இணையதளம்iscm.ac.in

இந்நிறுவனம் மார்ச் 2014-ல் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றது.[1]

வரலாறு

தொகு

கட்டுமானம்

தொகு

ராயல் அறிவியல் நிறுவனம் ஜார்ஜ் கிளார்க் எனும் காம்பேவின் 1வது பரோன் சிடென்காமினால் நிறுவப்பட்டது.

1911ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.[2] இந்தக் கட்டிடத்தை ஜார்ஜ் விட்டெட் வடிவமைத்தார். தானே மாவட்டத்திலிருந்து மஞ்சள் கரோடி பசால்ட் கல்லைப் பயன்படுத்தி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு வளைந்த வடிவத்தைக் கொண்டுள்ளது. கட்டடத்தின் இரண்டு பகுதிகள் தட்டையான மைய குவிமாடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடத்தில் வளைந்த முகப்பு உள்ளது. தாவரவியல் தோட்டமும், உலர் தாவரத் தொகுப்பும், பூங்காவும் இங்குள்ளன.[2]

இந்தக் கட்டிடம் 1920ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. மும்பை பல்கலைக்கழகத்தின் ராஜாபாய் கடிகாரக் கோபுரம், எல்பின்சுடோன் கல்லூரி போன்ற 19ஆம் நூற்றாண்டின் பிற கட்டிடங்களைச் சுற்றி உள்ளது.[2]

தனியார் நன்கொடைகளின் நிதியைப் பயன்படுத்தி நிறுவனத்தின் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் நிறுவனத்தின் கிழக்கு பிரிவுக்கு நன்கொடை அளித்தார். பிரதானக் கட்டிடத்தின் மேற்குப் பக்கக் கட்டுமானத்திற்கு ஜேக்கப் சசோன் மற்றும் கிழக்குப் பக்கத்திற்கு சர் குர்ரிஂபாய் இப்ராகிம், பண்டிதரும், சர் வசஞ்சி முல்ஜி நூலகத்திற்கும் நன்கொடை அளித்தனர்.[3] கட்டிடத்தின் மையக் குவிமாடம் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் அரங்கம் என்று அழைக்கப்படுகிறது.

கல்வி

தொகு

இயற்பியல், வேதியியல், உயிரியல், நுண்ணுயிரியல், கணிதம், உயிர்வேதியியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்து அறிவியல் பிரிவுகளிலும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. மகாராட்டிரா மாநிலம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில், உயிர் வேதியியலில் முதுநிலைப் பட்டம் போன்ற சில திட்டங்கள் சமீப காலம் வரை அறிவியல் நிறுவனத்தில் மட்டுமே இருந்தன.

கல்வி திட்டங்கள்

தொகு

இந்நிறுவனம் முது நிலை அறிவியல் பட்ட படிப்பினை. முனைவர் பட்ட ஆய்வுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. 2018 வரை, இந்த நிறுவனம் மும்பை பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற நிறுவனமாக இருந்தது. 2019 முதல், இது டாக்டர் ஓமி பாபா மாநில பல்கலைக்கழகத்தின் முக்கிய அங்கமாக உள்ளது.

2009ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் "சிறப்புக்கான திறனுடன் கூடிய கல்லூரி" என்ற தகுதியினைப் பெற்றது. இதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தாராளமாக மானியங்களைப் பெற்றது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு

இந்த நிறுவனத்தில் பயின்ற பல்வேறு மாணவர்கள் குறிப்பிடத்தக்க பதவியினை அடைந்துள்ளனர்.[4] இவர்கள் தத்தம் துறைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

  • ஓமி ஜே. பாபா-இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை-டாட்ட அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் மற்றும் முதலாவது தலைவர்இந்திய அணுசக்திப் பேரவை
  • வி. வி. நார்லிகர்-இந்திய இயற்பியலாளர்
  • பி. எம். உதோங்கர்-இந்திய இயற்பியலாளர்
  • எம். ஜி. கே. மேனன்-இந்திய இயற்பியலாளர் மற்றும் இசுரோவின் 2வது தலைவர்
  • சிறிராம் அபயங்கர்-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க கணிதவியலாளர்
  • மாதவ் காட்கில்-இந்திய சுற்றுச்சூழல் நிபுணர்
  • மாதவ் சவான்-இந்திய சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளர் (பிரதம்)
  • கே. எச். கர்த்தா-இந்திய வேதியியல் பொறியாளர்
  • கே. ஜே. சோமையா-இந்திய தொழிலதிபர் மற்றும் கல்வியாளர் (சோமையா அறக்கட்டளை)
  • கிரண் கார்னிக்-நாஸ்காம் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி
  • வர்சா கெய்க்வாட்-இந்திய அரசியல்வாதி
  • கமலா சோஹோனே-இந்திய உயிர்வேதியியலாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Institute of Science, Mumbai". iscmumbai.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-08.
  2. 2.0 2.1 2.2 "The Institute Of Science: Mumbai/Bombay pages". theory.tifr.res.in. பார்க்கப்பட்ட நாள் 2017-10-08.
  3. "The Institute of Science, Mumbai". iscmumbai.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-08.
  4. "The Institute of Science, Mumbai". iscm.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-22.

வெளி இணைப்புகள்

தொகு