வர்சா கெய்க்வாட்
வர்சா ஏக்நாத் கெய்க்வாட் (Varsha Gaikwad)(பிறப்பு 3 பிப்ரவரி 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் மும்பை பிராந்தியக் காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். முன்னதாக, இவர் மகாராட்டிர சட்டமன்றத்தில் நான்கு முறை உறுப்பினராக இருந்தார். மும்பையில் உள்ள தாராவி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2004 முதல் 2024 வரை காங்கிரசு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் (2004-2024).[1][2][3][4] இவர் 30 திசம்பர் 2019 முதல் 29 சூன் 2022 வரை மகாராட்டிராவின் அமைச்சரவை அமைச்சராகப் பணியாற்றினார்.
வர்சா கெய்க்வாட் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 சூன் 2024 | |
முன்னையவர் | பூனம் மகாஜன் |
தொகுதி | வடமத்திய மும்பை |
மும்பை பிரதேச காங்கிரசு தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 சூன் 2023 | |
முன்னையவர் | பாய் ஜக்தாப் |
பள்ளிக் கல்வி அமைச்சர் மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 30 திசம்பர் 2019 – 29 சூன் 2022 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
மகாராட்டிராவின் துணை முதல்வர் | அஜித் பவார் |
பாதுகாவலர் அமைச்சர்கள் | ஹிங்கோலி |
முன்னையவர் |
|
பின்னவர் |
|
மகளிர், குழந்தைகள் மேம்பாடு மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 11 நவம்பர் 2010 – 26 செப்டம்பர் 2014 | |
ஆளுநர் |
|
மகாராட்டிராவின் துணை முதல்வர் | அஜித் பவார் |
Guardian Ministers | |
முன்னையவர் |
|
பின்னவர் |
|
மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 25 செப்டம்பர் 2004 – 18 சூன் 2024 | |
ஆளுநர் |
|
முன்னையவர் | ஏக்நாத் கெயிக்வாட் |
பின்னவர் | காலியிடம் |
தொகுதி | தாராவி சட்டமன்றத் தொகுதி |
மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 07 நவம்பர் 2009 – 10 நவம்பர் 2010 | |
அமைச்சர் |
|
ஆளுநர் |
|
மகாராட்டிராவின் துணை முதல்வர் | சாகன் புஜ்பால் |
பாதுகாவலர் அமைச்சர்கள் | ஹிங்கோலி மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 பிப்ரவரி 1975 மும்பை, மகாராட்டிரம், India |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
கல்வி | முதுநிலை அறிவியல் (கணிதம்), இளநிலை ஆசிரியர் கல்வி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பேராசிரியர் |
கெய்க்வாட் 2024 மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆனார். இவர் பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை தோற்கடித்தார். 18வது மக்களவையில் உள்ள மூன்று புத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
வகித்தப் பதவிகள்
தொகு- 2004-2009: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (முதல் முறை)
- 2009-2014: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (2வது முறை)
- 2009-2010: மாநில மருத்துவ கல்வி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, சுற்றுலா, சிறப்பு உதவி அமைச்சர்
- 2010-2014: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சரவை அமைச்சர், மகாராட்டிரா அரசு [5][6]
- 2014-2019: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (3வது பதவிக்காலம்)
- 2019-2024: மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினர் (4வது பதவிக்காலம்)
- பள்ளிக் கல்வித் துறைக்கான அமைச்சரவை அமைச்சர், மகாராட்டிர அரசு மகாராட்டிரா அரசு
- 2024-தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுவர்சா கெய்க்வாட்டின் தந்தை ஏக்நாத் கெய்க்வாட், இவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் அம்பேத்காரிய புத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[7][8] மும்பையில் உள்ள சித்தார்த் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி விரிவுரையாளராக இருந்தார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "मोठी बातमी! काँग्रेसच्या तिसऱ्या आमदाराचा राजीनामा; अधिवेशनापूर्वीच विधानसभेतील संख्याबळ घटलं". https://marathi.abplive.com/news/politics/3rd-congress-mla-resigns-varsha-gaikwad-meets-president-rahul-narvekar-three-more-will-resigne-soon-1291552/amp.
- ↑ "Dharavi Maharashtra Assembly Constituency Elections". பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "Gaikwad Varsha Eknath of INC WINS the Dharavi constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "Varsha Gaikwad tipped to be Mumbai Congress women's wing chief". mid-day.com. 30 March 2016. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "Minister for Women and Child Development". indianexpress.com. 23 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "minister for women and child welfare Varsha Gaikwad said Sunday. The minister said the owner of the pizza outlet must be prosecuted for employing a minor and letting him drive a motorcycle without a driving licence". indianexpress.com. July 2013. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "39-year-old Varsha Gaikwad, the Congress candidate here". indianexpress.com. 7 October 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "जानिए- कौन हैं उद्धव कैबिनेट में शामिल हुईं तीन ताकतवर महिलाएं". 31 December 2019.
- ↑ DHNS. "Lok Sabha polls 2024 | Face-off: Ujjwal Nikam vs Varsha Gaikwad". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-08.