முகமது ஃபசல்
முகமது ஃபசல் (Mohammed Fazal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் 2004 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை மகாராட்டிர மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். நன்கு அறியப்பட்ட சமீன்தாரி என்று அறியப்பட்ட நில உரிமையாளர் குடும்பத்தில் பிறந்த இவர், அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இலண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் படித்தார்.
முகமது ஃபசல் Mohammed Fazal | |
---|---|
ம்காராட்டிரா ஆளுநர் | |
பதவியில் 10 அக்டோபர் 2002 – 5 திசம்பர் 2004 | |
முன்னையவர் | பி. சி. அலெக்சாண்டர் |
பின்னவர் | சோ. ம. கிருசுணா |
1977 ஆம் ஆண்டில் இந்திய அரசின் தொழில்துறை மேம்பாட்டு செயலாளராக நியமிக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1985 ஆம் ஆண்டு சனவரி மாதம் வரை இப்பதவியில் இருந்தார். திட்டக் குழுவின் மிக மூத்த உறுப்பினராகவும் இவர் கருதப்பட்டார். பின்னர் இவர் இயூசு & இயூசு கெம் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார். 1999 ஆம் ஆண்டில் கோவா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், மகாராட்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படும் வரை அந்த பதவியை வகித்தார். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மகாராட்டிடிர முதல்வர் சுசில்குமார் சிண்டேவிடம் இவர் பரிந்துரைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவரது பேரன் அலி ஃபசல் 3 இடியட்சு மற்றும் விக்டோரியா & அப்துல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஒரு நடிகர் ஆவார்.
முகமது ஃபசல் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று தனது 92ஆவது வயதில் அலகாபாத்தின் அபு பக்கர்பூரில் உள்ள இல்லத்தில் காலமானார். முன்னதாக இவர் குறைந்த இரத்த அழுத்தம், மார்பில் நெரிசல் மற்றும் குறுகிய கால நினைவாற்றல் இழப்பு ஆகிய நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- "Green signal to red light" - article in Bombay Times about the governor's views
- Biodata at website of Raj Bhavan