அல்கா பாண்டே

அல்கா பாண்டே ஒரு இந்திய கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் அருங்காட்சியக காட்சியாளர் மற்றும் கண்காணிப்பாளராவார்.[1][2]

அல்கா பாண்டே

பின்னணி தொகு

அல்கா பாண்டே, 1956 இல் கொல்கத்தாவில் பிறந்தார். அவர் 8ம் வகுப்பு வரை புது தில்லியில் உள்ள ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட் பள்ளியில் பயின்றார். பின்னர் கான்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வென்ட் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பைவரைப் பயின்றார் (1972).

பாண்டே 1981ல் பம்பாய் பல்கலைக்கழகத்திலும் 1983ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் கலை வரலாற்றில் தனது இரட்டை முதுகலைப் பட்டமும், 1996 ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றார். பாண்டேவின் ஆய்வறிக்கையானது இந்தியக் கலைகளில் அர்த்தநாரீஸ்வரரைப் பற்றிய ஆய்வு, இந்திய சிற்பக்கலை பற்றிய சிறப்புக் குறிப்புடன் இருந்தது. 1999 இல், பிரித்தானிய கவுன்சில் மூலம் சார்லஸ் வாலஸ் பெல்லோஷிப்பின் கீழ் லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

பாண்டே 1996 முதல் 2000 வரை சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் வாசகராக இருந்துள்ளார். அதற்கு முன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருந்தார்.

2000 முதல் தற்போது வரை புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் கலை ஆலோசகராகப் பணிபுரிகிறார். பாண்டே , தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் டி.ஜே. வடிவமைப்புக் கலைக்குடதில் சிறப்பாசிரியர் ஆவார்.

தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தொகு

  • 2015 மற்றும் 2016 : 'ஆர்ட் இன் தி மெட்ரோ', புது தில்லியில் உள்ள ஜோர் பாக் மற்றும் மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையங்களில் இந்திய வாழ்விட மையம் மற்றும் டெல்லி மெட்ரோ ஆகியவற்றின் தற்போதைய முயற்சியாகும் [3]
  • அக்டோபர் 2014 : தி காம-சூத்ரா : பாரிஸின் பினாகோதேக்கில் இந்திய கலையில் ஆன்மீகம் மற்றும் சிற்றின்பம் . பாரிஸின் பினாகோதேக்ன் இயக்குனர் மார்க் ரெஸ்டெல்லினியுடன் [4] இதனைத் தொகுத்தார் . இந்நிகழ்ச்சி 10 ஜனவரி 2015 வரை நடைபெற்றது.
  • மார்ச் 2014 : உதய்பூரில் உள்ள பெருநகர அரண்மனையில் உள்ள சிற்பக் கலைக்கூடத்திற்கு பாண்டே விருந்தினராக இருந்தார். 'மூழ்கும் சைகை - மேவார் ஆன்மிகத்தின் மகத்துவம்' நிகழ்ச்சி, புது தில்லியின் யுனெஸ்கோவுடன் இணைந்து, உதய்பூரின் மகாராணா மேவார் அறக்கட்டளை (எம்எம்சிஎஃப்) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 2011: டெல்லியில் இந்திய வாழ்விட மையம்(IHC) மற்றும் நாசர் அறக்கட்டளை இணைந்து நடத்த்ய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புகைப்படத் திருவிழாவான டெல்லி புகைப்பட விழாவை அவர் இணைந்து நடத்தினார்.
  • நவம்பர் 2010 முதல் பிப்ரவரி 2011 வரை எஸ்ஸெல் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியாவின் அருகில் உள்ள க்ளோஸ்டர்நியூபர்க்கில் "ஆலமரத்தின் கீழ் இந்தியா விழித்தெழுகிறது" என்ற நிகழ்வின்கண்காணிப்பாளராக இருந்தார். . தேர்ந்தெடுக்கப்பட்ட 34 கலைஞர்களைக் கொண்டு வளர்ந்து வரும் கலைஞர்கள் தொடரின் ஒரு பகுதியாக இது இருந்தது.

புத்தகங்கள் தொகு

  • வாய்ஸஸ் அண்ட் இமேஜஸ், பெங்குயின் பதிப்பகம், நவம்பர் 2015.[5]
  • முக்வாஸ் , பல காலஙளில் இந்திய உணவு , இம்ப்ரிண்ட், 2013
  • சிருங்காரா – இந்திய அழகின் பல முகங்கள், வெளியான ஆண்டு: 2011
  • லீலா - வசனம் மற்றும் கலையின் சிற்றின்ப நாடகம், ஹார்பர் காலின்ஸ் 2009ல் வெளியிட்டது
  • காம சூத்ரா - தி க்வெஸ்ட் ஃபார் லவ் பிரிஜ்பாசி ஆர்ட் பிரஸ் 2008ல் வெளியிட்டது
  • அர்த்தநாரீஸ்வரா தி ஆண்ட்ரோஜின் ரூபா & கோ., 2005 மூலம் வெளியிடப்பட்டது
  • மாஸ்டர் பீஸ் ஆஃப் இந்தியன் ஆர்ட், லஸ்டர் பிரஸ், ரோலி புக்ஸ், 2004ல் வெளியிடப்பட்டது
  • காதல் கொண்டாட்டம் கட்டுரை: மிரியாட் மூட்ஸ் ஆஃப் லவ், அல்கா பாண்டே - ரோலி புக்ஸ் 2004ல் வெளியிட்டது
  • இந்திய சிற்றின்பக் கலை - ரோலி புக்ஸ் 2002ல் வெளியிட்டது
  • பஞ்சாபின் நாட்டுப்புற இசை மற்றும் இசைக்கருவிகள்: டாக்டர் அல்கா பாண்டே - மேபின் பப்ளிஷிங், அகமதாபாத், 2002ல் வெளியிடப்பட்டது
  • இந்தியன் எரோடிகா - அல்கா பாண்டே & லான்ஸ் டேன் - ரோலி புக்ஸ், 2002ல் வெளியிட்டது
  • டாக்டர் அல்கா பாண்டேவின் காமசூத்ரா அறிமுகம் - ரோலி புக்ஸ் 1999ல் வெளியிட்டது

விருதுகள் தொகு

  • 2006 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செவாலியர் டான்ஸ் எல்'ஆர்ட்ரே டே ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் - நைட் ஆஃப் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் பாண்டேவுக்கு வழங்கப்பட்டது.[6]
  • 2009 இல், பாண்டே ஆஸ்திரேலிய ஆசிய கழகத்தின் சிறப்பு விருதைப் பெற்றார் [7]
  • 2015 ஆம் ஆண்டில், கலைக்கான சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் - அமிர்தா ஷெர்-கில் சம்மானுடன் பாண்டேவுக்கு சண்டிகர் லலித் கலா அகாடமி விருது வழங்கப்பட்டது [8]
  • 23 மார்ச் 2015 அன்று, வடிவமைப்பு மற்றும் கலைகளின் கீழ் அல்கா பாண்டேவுக்கு லோரியல் பாரிஸ் ஃபெமினா பெண்கள் விருதுகள் 2015 இல் வழங்கப்பட்டது [9]

மேற்கோள்கள் தொகு

  1. "Alka Pande". HarperCollins Publishers India. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
  2. "Art critic Alka Pande's new book explores depth of India's culture through flowers". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-02-19. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
  3. "Art, Photographs, Digital Works at Delhi Metro Stations". http://www.ndtv.com/delhi-news/art-photographs-digital-works-at-delhi-metro-stations-722718. 
  4. "Art exhibition in Paris aims to 'see beyond sex' in the Kama Sutra, the Times of India | Institut Français en Inde | New Delhi, India | French Cultural Center | Learn French | Study in France". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
  5. "India Habitat Centre - VAG Publications".
  6. "Ritu Kumar awarded the prestigious French Government honor of Chevalier des Arts et des Lettres, 8th December 2008". La France en Inde / France in India.
  7. "Alka Pande". Archived from the original on 20 April 2016. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
  8. "Chandigarh Lalit Kala Akademi". Archived from the original on 2016-03-04.
  9. "美女体育直播". Archived from the original on 2017-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கா_பாண்டே&oldid=3924534" இலிருந்து மீள்விக்கப்பட்டது