அல்லைல்பலேடியம்(II) குளோரைடு இருபடி

அல்லைல்பலேடியம்(II) குளோரைடு இருபடி ( Allylpalladium(II) chloride dimer) என்பது (η3- C3H5)2Pd2Cl2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும்.காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட, மஞ்சள் நிறத்திலான இச்சேர்மம் கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு முக்கியமான வினையூக்கியாக விளங்குகிறது.[1]

அல்லைல்பலேடியம்(II) குளோரைடு இருபடி
Allylpalladium(II) chloride dimer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அல்லைல்பலேடியம்(II) குளோரைடு இருபடி
வேறு பெயர்கள்
அல்லைல்பலேடியம்(II) குளோரைடு இருபடி
பிசு(அல்லைல்)இரு-μ-குளோரோ-இருபலேடியம்(II)
இனங்காட்டிகள்
12012-95-2 Y
ChemSpider 21171401 Y
InChI
  • InChI=1S/2C3H5.2ClH.2Pd/c2*1-3-2;;;;/h2*3H,1-2H2;2*1H;;/q;;;;2*+1/p-2 Y
    Key: TWKVUTXHANJYGH-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2C3H5.2ClH.2Pd/c2*1-3-2;;;;/h2*3H,1-2H2;2*1H;;/q;;;;2*+1/p-2/r2C3H5ClPd/c2*1-2-3-5-4/h2*2H,1,3H2
    Key: TWKVUTXHANJYGH-NNVIZEFPAF
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • Cl[Pd]CC=C.C=CC[Pd]Cl
பண்புகள்
C6H10Cl2Pd2
வாய்ப்பாட்டு எடை 365.85 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள், படிகவடிவத் திண்மம்
அடர்த்தி திண்மம்
உருகுநிலை 155-156 °செ இல் சிதைவடைகிறது
கரையாது
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் குளோரோஃபார்ம்
பென்சீன்
அசிட்டோன்
மெத்தனால்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் http://www.colonialmetals.com/pdf/5048.pdf
R-சொற்றொடர்கள் 36/37/38
S-சொற்றொடர்கள் 26-36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு மற்றும் வினைகள் தொகு

பலேடியம்(II) குளோரைடு, சோடியம் குளோரைடு மற்றும் அல்லைல் குளோரைடு ஆகியனவற்றின் மெத்தனாலிக் நீர்க்கரைசலை கார்பன் மோனாக்சைடு மூலம் காற்றை நீக்குவதனால் இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்.[1]

2Na2PdCl4 + 2 CH2=CHCH2Cl + 2 CO + 2 H2O → (C3H5)2Pd2Cl2 + 4 NaCl + 2 CO2 + 4 HCl

அல்லைல்பலேடியம்(II) குளோரைடு இருபடி வளையபென்டாடையீனைல் எதிரயனி மூலப்பொருட்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய 18e வளையபென்டாடையீனைல் அல்லைல் பலேடியம் அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.

(C3H5)2Pd2Cl2 + 2 NaC5H5 → 2 Pd(η3-C3H5)(η5-C5H5) + 2 NaCl

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Tatsuno, Y.; Yoshida, T.; Otsuka, S. "(η3-allyl)palladium(II) Complexes" Inorganic Syntheses, 1990, volume 28, pages 342-345. ISBN 0-471-52619-3