அல் சானுப் விளையாட்டரங்கம்

கத்தார் நாட்டிலுள்ள விளையாட்டரங்கம்

அல் சானுப் விளையாட்டரங்கம் (Al Janoub Stadium) கத்தார் நாட்டின் அல் வக்ரா நகரில் அமைந்துள்ளது.[3] முன்னதாக அல் வர்கா விளையாட்டரங்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பிஃபா அமைப்பு நடத்தும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவதற்காக இந்த விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது.[4] உள்ளிழுக்கும் கூரை வகை விளையாட்டரங்கமான இது 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஈராக்-பிரித்தானிய கட்டிடக் கலைஞர் சகா அதீத்து மற்றும் அமெரிக்கப் பொறியியல் நிறுவனம் இணைந்து அல் சானுப் விளையாட்டரங்கம் வடிவமைத்தனர்.[5]

அல் சானுப் விளையாட்டரங்கம்
Al-Janoub Stadium
ملعب الجنوب
2019 ஆம் ஆண்டில் அரங்கின் உட்புறம்
முழுமையான பெயர்அல் சானுப் விளையாட்டரங்கம்
முன்னாள் பெயர்கள்அல் வக்ரா விளையாட்டரங்கம்
அமைவிடம்அல் வக்ரா, கத்தார்
ஆட்கூற்றுகள்25°09′35.2″N 51°34′26.7″E / 25.159778°N 51.574083°E / 25.159778; 51.574083
உரிமையாளர்கத்தார் கால்பந்து சங்கம்
இருக்கை எண்ணிக்கை40,000[1][2]
ஆடுகள அளவு105 x 68 m
தரைப் பரப்புபொவேசி
கட்டுமானம்
Broke ground2014
கட்டப்பட்டது2014–2019
திறக்கப்பட்டது16 மே 2019[1]
வடிவமைப்பாளர்சகா அதீத்து
Main contractorsமிட்மேக்கு ஒப்பந்ததாரர்கள் நிறுவனம்.

சிக்சு கத்தார் கட்டுமான நிறுவனம்

போர் கத்தார் கட்டுமான நிறுவனம்
குடியிருப்போர்
அல்வர்கா விளையாட்டுக் கழகம் (2020–முதல்)

பின்நவீனத்துவமும் புதிய எதிர்காலமும் கவனத்திற் கொள்ளப்பட்டு விளையாட்டரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவின் முத்துக் குளிப்பவர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய படகு தோவின் பாய்மரங்களைப் போல அரங்கத்தின் கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது.[6]

அல்-வக்ரா விளையாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இடமாக இது இருக்கும். அங்கு கத்தார் நாட்டின் பூர்வாங்கப் போட்டிகள் இங்கு நடைபெறும். அரங்கத்தில் 40,000 பேர் அமர்ந்து போட்டிகளை இரசிக்க முடியும். உலகக் கோப்பைக்குப் பிறகு பார்வையாளர்கள் இருக்கை எண்ணிக்கை 20,000 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[7]

2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள்

தொகு

2022 பிஃபா உலகக் கோப்பை போட்டியின் போது அல் சானுப் விளையாட்டரங்கத்தில் ஏழு போட்டிகளை நடைபெறுகின்றன.

நாள் நேரம் அணி. 1 முடிவு அணி. 2 சுற்று வருகை
22 நவம்பர் 2022 22:00   பிரான்சு   ஆத்திரேலியா குழு ஈ
24 நவம்பர் 2022 13:00   சுவிட்சர்லாந்து   கமரூன் குழு எ
26 நவம்பர் 2022 13:00   தூனிசியா   ஆத்திரேலியா குழு ஈ
28 நவம்பர் 2022 13:00   கமரூன்   செர்பியா குழு ஏ
30 நவம்பர் 2022 18:00   ஆத்திரேலியா   டென்மார்க் குழு ஈ
2 திசம்பர் 2022 18:00   கானா   உருகுவை குழு ஏ
5 திசம்பர் 2022 18:00 குழு உ வெற்றியாளர் குழு ஊ இரண்டாமிடம் 16 ஆவது சுற்று

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The New Al Wakrah Stadium". qataramerica.org. 30 April 2019. Archived from the original on 1 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
  2. "Al Wakrah Stadium". sc.qa. Archived from the original on 29 June 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
  3. "Al Janoub Stadium opens to fanfare". the-AFC.
  4. "Amir inaugurates Al Janoub Stadium". thepeninsulaqatar.com. 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 22 March 2022.
  5. "Al Janoub Stadium". zaha-hadid.com. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.
  6. "Al Wakrah Stadium Design". sc.qa. Archived from the original on 5 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
  7. "Al Janoub Stadium / Zaha Hadid Architects". ArchDaily (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.