அழகாபுரி பட்டணம் (அலகரை)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம் ஒன்றியத்தில் அமைந்த ஒரு கிராமமாகும்

அலகரை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம் ஒன்றியத்தில் அமைந்த ஒரு கிராமமாகும். இது விவசாயத்தினை சார்ந்துள்ள ஒரு கிராமமாகும்.

அலகரை
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
ஊராட்சி தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வரலாறு

தொகு

இக்கிராமம் சோழர் காலத்தில் மணமேடு, முள்ளிப்பாடி, அலகரை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய அழகாபுரிபட்டணம் என்றழைக்கப்பட்டடது. அப்போது உருவாக்கப்பட்ட சிவன் கோயில் மிகப்பழமையானது. இக்கோவிலில் சோழர்களால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்கோவிலின் பின்பக்க சுவரில் காணப்படுகிறது. இந்த கோயில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவலாயத் தலமாகும்.

மக்கள் தொகை

தொகு

தற்போது கிராமத்தில் ஏறக்குறைய 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பழமையான அக்ரகாரம் உள்ளது.

பள்ளி

தொகு

இக்கிராமத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இக்கிராமத்தில் ஒரு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியும், பஞ்சாயத்துத் தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகாபுரி_பட்டணம்_(அலகரை)&oldid=3100525" இலிருந்து மீள்விக்கப்பட்டது