அழகி (மென்பொருள்)

அழகி (ஒலிப்பு) என்பது கணினியில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை தட்டெழுதவென, பா. விசுவநாதன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு இலவச மென்பொருளாகும். இது ஆரம்ப காலத்தில் தமிழ் மொழிக்கு மட்டும் பயன்பட்டது, தற்போது, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட 13[1] மொழிகளிலும் இக்கருவியை பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம். த இந்து நாளிதழ் 2002-ஆம் ஆண்டு, இம்மென்பொருளை, "ஒப்பற்றது" (stand out) என்று குறிப்பிட்டுள்ளது.[2] ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய ஒலிவடிவைத் தரக்கூடிய ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புகள் தெரிவு செய்யப்பட்டு அத்தொகுப்புக்களைத் தட்டெழுத, முறையான எழுத்துக்கள் கணினியில் திரையில் தோன்றும் வகையில் இம்மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. 2006-ஆம் ஆண்டு, அழகியை உருவாக்கியதற்காக டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுன்டேசன் வழங்கிய மாந்தன் விருது (Manthan Award), பா. விசுவநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.[3] அதே ஆண்டில், அழகி ஒரு சிறந்த வெற்றிக் கதை என்று மைக்ரோசாப்டின், இந்திய மொழிகளுக்கான பாஷாஇந்தியா தளத்தில் தெரிவித்திருந்தது.[4]

அழகி ஒருங்குறி திருத்துனர்

அழகியின் சிறப்பம்சங்கள்

தொகு

திரை அமைப்பு

தொகு

அழகியில் இருதிரை அல்லது ஒரு திரை முறையைப் பயன்படுத்தும் வசதியுள்ளது. இருதிரை முறையில் மேற்புறமுள்ள திரையில் நாம் தட்டெழுதும் ஆங்கில எழுத்துக்களும், கீழ்ப்புறமுள்ள திரையில் அதற்கீடான தமிழ் எழுத்துக்களும் தோன்றும். ஒரு திரை முறையில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தோன்றும். அழகியின் திரை திறந்ததும் அதில் சிறிய ஒரு அட்டவணை தோன்றுகிறது. புதிதாய் அழகியை உபயோகிப்போர்அதில் காணும் தமிழ் எழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்களைத் தட்டி மிக எளிதில் தமிழைக் கணினியில் எழுதலாம். அவ்வாறு எழுதியதை மின்னஞ்சல் வழியே அனுப்பும் வசதி அழகியில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் வந்துள்ள ஒருங்குறி (Unicode) வகை எழுத்துக்களில் தமிழை எழுதும் வசதி அழகி மென்பொருளில் உள்ளடக்கம் செய்யப் பட்டுள்ளது.

பயன்பாடு

தொகு

அழகியின் துணையோடு அழகி தவிர்த்த கணினியின் பிற பயன்பாட்டு மென்பொருட்களிலும் தமிழை உள்ளிட முடியும். அழகி மென்பொருளை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஒலிபெயர்ப்பு

தொகு

ஸ்ரீமதி என்ற சொல்லைப் பெற, srimathi, sreemathi, shrimathi, shreemathi, srimadhi, shrimadhi எனப் பல்வேறு ஆங்கிலச் சொற்களின் தொகுப்புக்களை உபயோகப் படுத்தலாம். மஞ்சு, கஸ்தூரி, மஞ்சள், சிங்கம், சங்கு, நீங்க, நாங்க, விஸ்வம், பொய், நன்றி, கற்று முதலிய சொற்களை manju, manjaL, singam, sangu, neenga, naanga, visvam, poi, nandri, katru என்று இயல்பான எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். ஆங்கிலத்தில் Mr என்று தட்ட 'ஸ்ரீ' என்ற எழுத்து கிடைக்கிறது. நீங்க என்பதை niinga என்றும் பெறலாம்.

எங்கே, அங்கே, இங்கே, வந்தே, தந்தே, பலனே, பலமே என வரும் சொற்களை enge, engae, ange, angae, inge, ingae, vanthe, vanthae, thanthe, thandhae, palane, palanae, balame, balamae என எளிதாகப் பெறலாம் engE, angE, ingE, vandhE, palanE, balamE என்று ஷிஃப்ட் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை எனினும் இவ்வாறு ஷிஃப்ட் உபயோகித்தும் பெறலாம்.

ந, ன, ண எனும் எழுத்துக்களை முறையே nha, na, Na என்று எழுதிப் பெறலாம். இவற்றுள் ஒரு வரியின் முதல் எழுத்திலும் ந வருகையில் na என்று எழுதினால் போதுமானது பிற இடங்களில் மட்டும் nha உபயோகிக்க வேண்டும்.

ஒரு வரியின் முதல் எழுத்தாக ல, ள, ழ ஆகிய எழுத்துக்களை la, La, za அல்லது zha எனத்தட்டெழுதிப் பெறலாம். ர, ற என்பவற்றை முறையே ra, Ra என்று தட்டிப் பெறலாம். கற்ற, மற்ற, சிற்றூர், பெற்றோர், முற்றம், சுற்றம் போன்ற வார்த்தைகளை katra, matra, sitruur, petroar, mutrum, sutram என எளிதில் பெறலாம். kaRRa, maRRA, siRRuur, peRRoar, muRRam, suRRam என எழுத வேண்டியதில்லை, இவ்வாறு எழுதியும் பெறலாம்.

இது போல அனைத்து விதங்களிலும் கடினமான தூக்குவிசை (shift key) உபயோகித்துப் பெறக்கூடிய வார்த்தைகள் அனைத்தையும் தூக்குவிசை உபயோகிக்காமல் எளிய வழியில் பெறுவதுடன் தூக்குவிசை உபயோகித்துப் பெறும் பழக்கமுள்ளவர்கள் தொடர்ந்து அவ்விதமே பெறவும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

ச எனும் எழுத்தை sa, cha எனும் இரு வழிகளில் பெறலாம். சச்சரவு - sachcharavu, chachcharavu, சச்சிதானந்தம் - sachchithaanandham, chachchithanandham, சச்சின் - sachchin, chachchin

ஆங்கிலச் சொற்கள்

தொகு

சஸ்பென்ஸ் - saspenS, சிஸ்டம் - sistam, சிஸ்டர் - sistar, சில ஆங்கில வழிப் பெயர்ச்சொற்களைப் பலுக்கல் மாறாமல் தமிழில் எழுதுவது மிகவும் எளிது. எடுத்துக்காட்டாக Patrik எனும் பெயரை பேட்ரிக் என்று பெற paeTrik எனத்தட்டினால் போதும். Patrik எனத்தட்ட "பேற்றிக்" என்றாகி விடுவதால் இத்தகைய முன்னேற்பாடு அழகி மென்பொருளில் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு

தொகு

முத்தைத்தரு பத்தித் திருநகை யத்திக்கிரை சத்திச்சரவண
muththaiththaru paththith thirunhagai yaththikkirai saththichcharavaNa
முக்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
mukthikkoru viththuk kurubara enavoathum
முக்கட்பரமர்க்குச்சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரு
mukkatparamarkkuchchuruthiyin muRpattathu kaRpiththiruvaru
முப்பத்து முவர்க்கத் தமரரு மடிபேண
muppaththu muvarkkath thamararu madipaeNa

திக்குளெட்டுக்கைந்துக்கமுற்றுத்திடுக்கிட்டலர
thikkuLettukkainthukkamutruththidukkittalara
மைக்கடற்குட்சரந்தைக்கவிட்டோர்க்கிடமாமதுர
maikkadaRkutcharanthaikkavittoarkkidamaamathura
இக்குமுற்றிக்கணுச்சற்றுவிட்டுத்தெரித்திட்டமுத்தைக்
ikkumutrikkaNuchchatruvittuththeriththittamuththaik
கொக்குமொக்கிக்கக்கிவிக்குமச்சோலைக்குறுங்குடியே
kokkumokkikkakkivikkumachchoalaikkuRungudiyae

எட்டெழுத்தைக்கருத்திற்குறித்திட்டு நித்தம் பரவும்
ettezuththaikkaruththiRkuRiththittu niththam paravum
சிட்டர்கட்குத்திருப் பொற்பதத்தைச் சிறக்கத்தருமவ்
sittargatkuththirup poRpathaththaich chiRakkaththarumav
வட்டநெட்டைப்பணி மெத்தையத்தர்க்கிடம் வாரிசைப்பொ
vattanhettaippaNi meththaiyarkkidam vaarisaippo
குட்டினத்துக்குலந்தத்துமுத்தீனும் குறுங்குடியே
kuttinaththukkulanthaththimuththiinum kuRungudiyae

ஆண்ட்ராய்டு இயங்குதள குறுஞ்செயலி

தொகு

2016-ம் ஆண்டு, அழகி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான குறுஞ்செயலியை வெளியிட்டது.[5] இது புதுவகையான எழுத்துப்பெயர்ப்பை[6] அறிமுகம் செய்தது. இது இண்டிக் கீபோர்டு என்னும் குறுஞ்செயலியை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும், எழுத்துப்பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு உள்ளிட்ட சேவைகளையும் கொண்டுள்ளது.[7][8]

உருவாக்க குழுமம்

தொகு

பா. விசுவநாதன், என்னும் ஒரு மென்பொருள் வல்லுநரால் உருவாக்கப்பட கருவியாகும். 1999-களில் சரியானதொரு தட்டெழுத்து கருவி தமிழில் இல்லை. ஒரு சில தட்டெழுத்து கருவிகளிலிருந்தும் சரியான இடைமுகப்பு இல்லாமலிருந்தது. 2000-ம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும் வகையில் தன் மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயரிட்டிருக்கிறார்.[9]

பயனர்களின் ஆதரவு

தொகு

பல்வேறு தமிழ் இணையத்தளங்களும், மென்பொருட்களும், ஆவணங்களும், தமிழில் தட்டச்சு செய்ய அழகி மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர், அழகி மென்பொருளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுடைய வலைத்தளம், வலைப்பதிவு உள்ளிட்டவகைகளில் அழகி மென்பொருள் குறித்தும், அதற்கு நன்றி தெரிவித்தும் தகவலிட்டுள்ளனர்.[10] அதுமட்டுமின்றி, அழகி ஏராளமான ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக வழங்கி வருகிறது.[11], TSCII[12], TAB மற்றும் TAM தரவுகளும் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான பயனர்கள் இம்மென்பொருளை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதை [13] தொடர்ந்து, இதனுடைய புகழும் வளர்ந்து வருகிறது.

அங்கீகாரமும் விருதுகளும்

தொகு
  • 2006-ஆம் ஆண்டு இருதிரை தட்டெழுத்து கருவியை உருவாக்கியதற்காக பா. விசுவநாதனுக்கு மாந்தன் விருது (Manthan Award) வழங்கப்பட்டது[14]
  • சூலை 2004-இல், சென்னை ஆன்லைன் இணையம் பா. விசுவநாதனை, அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக கணினி வல்லுநர் என்று பாராட்டியது[15]
  • நவம்பர் 2004-இல், நிலாச்சாரல் இணையமானது, விசுவநாதனை அழகி மெபொருளை உருவாக்கியதற்காக தமிழ் வளர்க்கும் அறிஞர் என்று பாராட்டியிருந்தது.[16]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Same words, many languages
  2. இராமச்சந்திரன், கே. (2002-06-26), "Input English, Output Tamil", த இந்து, archived from the original on 2012-10-08, பார்க்கப்பட்ட நாள் 2012-04-22{{citation}}: CS1 maint: unfit URL (link)
  3. Manthan-AIF Award '06 > Award Winners > Azhagi, Digital Empowerment Foundation, archived from the original on 2012-10-17, பார்க்கப்பட்ட நாள் 2012-05-15
  4. Meet Mr. Vishwanathan, Bhashaindia.com, archived from the original on 2010-12-14, பார்க்கப்பட்ட நாள் 2012-05-14
  5. "Azhagi - Indic Typing Keyboard". Google. பார்க்கப்பட்ட நாள் 3 November 2016.
  6. "'Azhagi' Android App - Tamil Transliteration Scheme". Archived from the original on 23 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 November 2016.
  7. "'Azhagi' Android App - 23 languages - SuperFast Tamil Transliteration - Free". Archived from the original on 4 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 November 2016.
  8. "'Azhagi' android app - a class apart - Features". Archived from the original on 23 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 November 2016.
  9. "Innovative, despite odds" இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031128232915/http://www.hindu.com/mp/2003/11/11/stories/2003111100360300.htm. பார்த்த நாள்: 22 April 2012. 
  10. "Sundaram, Introduction and thanks to Azhagi". பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  11. "100s of FREE Tamil Fonts (Unicode, Tscii, TAB, TAM, etc. encodings)". பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  12. "TSCII file Description". TSCII. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.
  13. "Any other tool like e-Kalappai for typing Tamil in all applications". Archived from the original on 12 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Manthan-AIF Award '06 > Award Winners". The Manthan Award இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017144426/http://manthanaward.org/section_full_story.asp?id=517. பார்த்த நாள்: 17 May 2012. 
  15. "Computer Expert Vishwanathan". Chennaionline.com இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100114125849/http://archives.chennaionline.com/health/hopeislife/07life07.asp. பார்த்த நாள்: 17 May 2012. 
  16. "Thamizh Valarkkum Arignar". Nilacharal.com. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகி_(மென்பொருள்)&oldid=3927300" இலிருந்து மீள்விக்கப்பட்டது