அவியனூர்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அவியனூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] அவியனூர் பகுதியானது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.[3]

அவியனூர்
ஆள்கூறுகள்: 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E / 11.8483; 79.4725
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்
55.56 m (182.28 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,637
மொழி
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
607101[1]
புறநகர்ப் பகுதிகள்திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், ஒறையூர்
மக்களவைத் தொகுதிகடலூர்
சட்டமன்றத் தொகுதிபண்ருட்டி

அமைவிடம்

தொகு

அவியனூர் பகுதியானது, 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E / 11.8483; 79.4725 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி, அவியனூர் பகுதியின் மக்கள்தொகை 1,637 ஆகும். இதில் 829 பேர் ஆண்கள் மற்றும் 808 பேர் பெண்கள் ஆவர்.[4]

கல்வெட்டுகள்

தொகு

அவியனூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.[5] இதன் மூலம் அவியனூர் பகுதியானது வரலாற்றுத் தொடர்புடையது என்று தெரிய வருகிறது. முதலாம் பராந்தக சோழன் என்ற மதுரை கொண்ட கோப்பரகேசரி சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றும் அவியனூர் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளது.[6][7]

சமயம்

தொகு

இந்துக் கோயில்கள்

தொகு

அவியனூரில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அஷ்டமூர்த்தீஸ்வரர் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று உள்ளது.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Aviyanur Pin Code - 607101, All Post Office Areas PIN Codes, Search cuddalore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  2. Karai Rajan (1997). Archaeological Gazetteer of Tamil Nadu (in ஆங்கிலம்). Manoo Pathippakam.
  3. "Taluk Information". web.archive.org. 2013-10-21. Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  4. "Aviyanur Village Population - Panruti - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  5. DIN (2024-09-11). "முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  6. Archæological Survey of India (1997). Indian Archaeology (in ஆங்கிலம்). Archaeological Survey of India, Government of India.
  7. Archæological Survey of India (1998). Annual Report on Indian Epigraphy for ... (in ஆங்கிலம்). Manager of Publications.
  8. "Arulmigu Ashtamoortheeswararattached Withkothandaramasamy Temple, Aviyanur - 607101, Cuddalore District [TM020982].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  9. lightuptemple (2020-11-17). "Sri Ashtamoortheeswarar Temple, Aviyanur". lightuptemples (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவியனூர்&oldid=4107786" இலிருந்து மீள்விக்கப்பட்டது