அவுரா ராஜதானி விரைவுவண்டி

அவுரா ராஜதானி விரைவுவண்டி (Howrah Rajdhani Express) முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட இந்தியத் தொடருந்தாகும். முதன்மையின்படி இந்திய ரயில்வேயின் ரயில்களில் முன்னிற்கும் ரயில் ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகும்.[1] ராஜதானி வகைத் தொடருந்துகளில் மூத்ததான ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ், தொடருந்துப் பிரியர்களினால் ‘ராஜா’ என அழைக்கப்படுகிறது. எந்த நேரத்திலும், எப்போதும் இந்த ரயிலுக்கு முன்னுரிமை உள்ளது. இந்தியாவில் முதன்முதலாக இலவச வயரில்லா இணையச் சேவை அனைத்துப் வகைப் பயணிகளுக்கும் அளிக்கப்பட்டதும் இந்தத் தொடருந்தில்தான்.

ஹவுரா-புதுதில்லி ராஜதானி விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைராஜதானி விரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில் உள்ளது
நிகழ்வு இயலிடம்மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம் & தில்லி
முதல் சேவைமார்ச் 03, 1969
நடத்துனர்(கள்)கிழக்கு இரயில்வே
வழி
தொடக்கம்ஹவுரா சந்திப்பு (HWH)
முடிவுபுது தில்லி (NDLS)
ஓடும் தூரம்1451 கிமீ
சராசரி பயண நேரம்16 மணி 55 நிமிடங்கள் (வண்டி எண்: 12302) , 17 மணி (வண்டி எண்: 12301)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்12301/12302; 12305/12306
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்குப் பெட்டிகள்
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிஉள்ளது
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்உள்ளது (பயணச்சீட்டுத் தொகையில் அடக்கம்)
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
சுமைதாங்கி வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்140 km/h (87 mph) (அதிகபட்ச வேகம்)
88 km/h (55 mph) (நிறுத்தகள் நீங்கலாக)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

மார்ச் 3, 1969 ஆம் ஆண்டு, ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ், புது தில்லி தொடருந்து நிலையத்திலிருந்து ஹவுரா சந்திப்பை நோக்கித் தனது முதற்பயணத்தைத் தொடங்கியது. அப்போது அது சுமார் 1445 கிலோ மீட்டர் தூரத்தினை 17 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களில் கடந்தது. அந்த காலகட்டத்தில் அமரும்வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பெட்டிகளை மட்டுமே கொண்டிருந்தது. டெல்லியில் இருந்து மேற்கு வங்கம் வரை செல்வதற்கான பயண நேரத்தினை 24 மணி நேரங்களில் இருந்து 17 மணி நேரமாகக் குறைந்தது. இது இந்தியாவின் ஐந்தாவது அதிவேகத் தொடருந்தாகும்.

வரலாறு தொகு

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் வகையில், மணிக்கு 145 கிலோ மீட்டர் (87 மைல்) வேகத்தில் செல்லும்படியான அதிவேக தொடருந்துசேவையாக ராஜதானி விரைவுவண்டிகள் மார்ச் 3, 1969 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் மாநிலத் தலைகரங்களுக்கு மட்டுமல்லாது வேறு சில முக்கிய நகரங்களுக்கும் ராஜதானி விரைவுவண்டிகள் இயக்கப்பட்டன. ஹவுரா ராஜதானி விரைவுவண்டியின் பிரபலத்தினால் கொல்கத்தாவின் சீல்டா ராஜதானி விரைவுவண்டியும் இயக்கப்பட்டது.

இலக்குகள் தொகு

கொல்கத்தா மற்றும் புது டெல்லிக்கான முக்கியத் தொடர்பு இந்த ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகும். அலகாபாத், கயா மற்றும் பாராஸ்னாத் போன்ற பல முக்கிய புனித தலங்கள் வழியே செயல்படும் ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் கான்பூர், டெல்லி மற்றும் கொல்கத்தாவினையும் இணைக்கிறது.[2]

ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் இரு வழிப்பாதைகளை பயன்படுத்துகிறது. இதன் முதல் பாதை கயா வழியேயான கிராண்ட் கார்ட். இது ஹவுராவில் இருந்து திங்கள் முதல் சனி வரை செயல்படுகிறது. இதன் இரண்டாம் வழிப்பாதை ஹவுரா – டெல்லியின் முக்கிய பாதை, இது பாட்னா வழியே வெள்ளிக்கிழமைகளில் செயல்படும்.

முதல் வழிப்பாதை தொகு

முதல் வழிப்பாதையில் முக்கிய நிறுத்தங்கள்

  • ஹவுரா சந்திப்பு
  • தான்பாத் சந்திப்பு
  • பாராஸ்னாத்
  • கயா சந்திப்பு
  • முகல்சாரை சந்திப்பு
  • அலகாபாத் சந்திப்பு
  • கான்பூர் சென்ட்ரல்
  • புது டெல்லி

இந்த வழிப்பாதையில் ரயிலானது சுமார் 1451 கிலோ மீட்டர்கள் தூரத்தினை, 17 மணி நேரத்தில் கடக்கிறது.

இரண்டாம் வழிப்பாதை தொகு

இரண்டாம் வழிப்பாதையில் முக்கிய நிறுத்தங்கள்

  • ஹவுரா
  • புர்ட்வான்
  • மதுபூர்
  • ஜசிடிஹ்
  • பாட்னா சந்திப்பு
  • முகல்சாரை சந்திப்பு
  • அலகாபாத்
  • கான்பூர் சென்ட்ரல்
  • புது டெல்லி

இந்த வழிப்பாதையில் ரயிலானது சுமார் 1530 கிலோ மீட்டர்கள் தூரத்தினை, 19 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் கடக்கிறது.

பிற விவரங்கள் தொகு

இந்தியாவில் ஐந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டு இயங்கிய முதல் ரயில் ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகும்.[3] தற்போது ரஜேந்திர நகர் (பாட்னா) ராஜதானி இரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளையும், மும்பை ராஜதானி மற்றும் பெங்களூர் ராஜதானி போன்றவை ஐந்து குளிரூட்டப்பட்ட பெட்டிகளையும் கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதன் முதலில் இரு குளிரூட்டப்பட்ட முதல் தர பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்ட ரயில் ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகும். இதில் தேவைக்கேற்றவாரு மற்றொரு குளிரூட்டப்பட்ட பெட்டியினையும் இணைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம்.[4]

ஹவுரா ராஜதானியின் மூன்று ரேக்குகளை கிழக்கு ரயில்வே பராமரிக்கிறது. இரு ரேக்குகள் ஒரே நேரத்தில் 12301 மற்றும் 12302 எண் வண்டிகளுக்கும் மற்றொன்று ஹவுராவில் இருந்து புறப்படும் 12305 எண் வண்டி மற்றும் அடுத்த நாள் ஹவுராவை வந்தடையும் 12305 எண் வண்டியிலும் பயன்படுத்தப்படுகின்றன.

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள் தொகு

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கி.மீ)

நாள் பாதை
1 புது

டெல்லி (NDLS)

தொடக்கம் 16:55 0 0 1 1
2 கான்பூர்

சென்ட்ரல் (CNB)

21:38 21:43 5 440 1 1
3 அலகாபாத்

சந்திப்பு (ALD)

23:43 23:46 3 634 1 1
4 முகல்

சாரை சந்திப்பு (MGS)

01:45 01:55 10 786 2 1
5 பாட்னா

சந்திப்பு (PNBE)

04:45 04:55 10 998 2 1
6 ஜசிதிக்

சந்திப்பு (Jasidih) (JSME)

08:35 08:39 4 1219 2 1
7 மதுபூர்

சந்திப்பு (MDP)

09:04 09:08 4 1248 2 1
8 ஹவுரா

சந்திப்பு (HWH)

12:40 முடிவு 0 1529 2 1

குறிப்புகள் தொகு

  1. "http://indiarailinfo.com/trains/rajdhani". 26 May 2015. {{cite web}}: External link in |title= (help)
  2. "Times of India article". Times of India. 26 May 2015.
  3. "Howrah Rajdhani Express". Cleartrip.com. 26 May 2015. Archived from the original on 27 மே 2015.
  4. "Wi-Fi facility on Howrah-Rajdhani Express". Business Standard. 26 May 2015.

வெளி இணைப்புகள் தொகு