அ. அரவிந்தகுமார்
அருணாசலம் அரவிந்தகுமார் (பிறப்பு: 17 நவம்பர் 1954)[1] இலங்கையின் மலையக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் பொருளாளரும் ஆவார்.
அருணாசலம் அரவிந்தகுமார் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | பதுளை மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | பதுளை மாவட்டம் |
ஊவா மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் 2004–2014 | |
தொகுதி | பதுளை மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 நவம்பர் 1954 |
தேசியம் | இலங்கையர், மலையகத் தமிழர் |
அரசியல் கட்சி | மலையக மக்கள் முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ் முற்போக்குக் கூட்டணி |
வாழிடம்(s) | பதுலுப்பிட்டி வீதி, பதுளை |
வேலை | அரசியல்வாதி |
ஆரம்ப வாழ்க்கை
தொகுஅரவிந்தகுமார் கம்பளை புனித யோசேப்பு கல்லூரியிலும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]
அரசியலில்
தொகுஅரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினராவார். அக்கட்சியின் நிதிச்செயலாளராகப் பணியாற்றினார்.[3][4] 2015 சூன் மாதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5]
இவர் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 5,059 வாக்குகள் பெற்று ஊவா மாகாணசபையின் உறுப்பினராக 2004 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.[6] 2009 மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]
2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8][9] 2015 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 53,741 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][11][12][13]
2020 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 45,491 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15]
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|---|
2004 மாகாணசபை[6] | பதுளை மாவட்டம் | மமமு | மமமு | 5,059 | தெரிவானார் |
2009 மாகாணசபை[7] | பதுளை மாவட்டம் | மமமு | மமமு | 7,863 | தெரிவானார் |
2010 நாடாளுமன்றம் | பதுளை மாவட்டம் | மமமு | மமமு | தெரிவு செய்யப்படவில்லை | |
2015 நாடாளுமன்றம்[16] | பதுளை மாவட்டம் | மமமு | ஐதேக | 53,741 | தெரிவானார் |
2020 நாடாளுமன்றம் | பதுளை மாவட்டம் | மமமு | ஐதேக | 45,491 | தெரிவானார் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Directory of Members: A. Aravindh Kumar". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "More than 50 new faces in House". சண்டே டைம்சு. 23 ஆகத்து 2015.
- ↑ "Rathakrishnan elected as Leader of Upcountry People's Front". Tamil Diplomat. 10 செப்டம்பர் 2015. http://tamildiplomat.com/rathakrishnan-elected-as-leader-of-upcountry-peoples-front/.
- ↑ Kithsiri, Piyal (20 மார்ச் 2013). "Nearly 3,000 estate workers denied EPF and ETF". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304094158/http://www.ceylontoday.lk/51-27565-news-detail-nearly-3000-estate-workers-denied-epf-and-etf.html.
- ↑ "Tamil Progressive Alliance elects working committee". Eye Sri Lanka. 5 சூன் 2015. http://www.eyesrilanka.com/2015/06/05/tamil-progressive-alliance-elects-working-committee/.
- ↑ 6.0 6.1 "Results of Provincial Council Elections 2004" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
- ↑ 7.0 7.1 "Preferences Badulla" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2015-09-13.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1643/07. 2 March 2010. http://www.documents.gov.lk/Extgzt/2010/PDF/Mar/1643_7/1643_7(E).pdf. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2015.
- ↑ "Parliamentary General Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-04-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-13.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
- ↑ "General Election 2020: Preferential votes of Badulla District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027090934/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-badulla-district. பார்த்த நாள்: 17 September 2020.
- ↑ Jayakody, Pradeep (28 ஆகத்து 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010.