ஊவா மாகாணம்

இலங்கையின் மாகாணம்
(ஊவா மாகாணசபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஊவா (Uva, சிங்களம்: ඌව) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.

ஊவா
Uva
ඌව
அப்புத்தளை-பெரகலை இடையில் இருந்து
அப்புத்தளை-பெரகலை இடையில் இருந்து
ஊவா-இன் கொடி
கொடி
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
நாடு இலங்கை
அமைப்பு1886
சேர்க்கை14 நவம்பர் 1987
தலைநகர்பதுளை
பெரிய நகரம்பதுளை
அரசு
 • ஆளுநர்நந்தா மத்தியூ
 • முதலமைச்சர்சசீந்திர குமார ராசபக்ச
பரப்பளவு
 • மொத்தம்8,500 km2 (3,300 sq mi)
 • பரப்பளவு தரவரிசை4வது (மொத்தப் பரப்ப்ளவில் 12.92%)
மக்கள்தொகை
 (2011 கணக்கீடு)
 • மொத்தம்12,59,800
 • தரவரிசை7வது (மொத்த மக்கள்தொகையில் 6.3%)
 • அடர்த்தி150/km2 (380/sq mi)
Gross Regional Product
 (2010)[1]
 • மொத்தம்ரூ. 220 பில்லியன்
 • Rank8வது (4.6%)
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை)
ஐஎசுஓ 3166 குறியீடுLK-8
அதிகாரபூர்வ மொழிகள்சிங்களம், தமிழ்
சின்னங்கள்குருளு ராஜா (Rhynchostylis retusa)
இணையதளம்www.tourismuva.com

இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, யால தேசிய வனம் (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். மகாவலி, மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும்.

வரலாறு

தொகு

இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் அருவி, ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். கதிர்காமம் முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது.

பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக இடம்பெற்ற 1818 கிளர்ச்சி ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.[2]

மாவட்டங்கள்

தொகு
 
ஊவாவின் மாவட்டங்கள்

ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

முக்கிய நகரங்கள்

தொகு

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uva Province, Sri Lanka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊவா_மாகாணம்&oldid=3354755" இலிருந்து மீள்விக்கப்பட்டது