ஆகார திட்டம்
ஆகார் யோஜனா/ஆகார திட்டம் (Āhār Yojanā)(ஒடியாவில் ஆகார் என்றால் "உணவு" என்று பொருள்படும்) என்பது ஒடிசா அரசாங்கத்தால் நடத்தப்படும் உணவு மானியத் திட்டமாகும். இது தமிழ்நாட்டின் அம்மா உணவகம் திட்டத்தின் அடிப்படையில் ஒடிசா அரசாங்கம் ஐந்து ரூபாய் விலையில் நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவான மதிய உணவை வழங்குவதற்காகத் தொடங்கியது. இதை ஏப்ரல் 1, 2015 அன்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஒடிசா நாளில் (உத்கல் திவாஸ்) துவக்கி வைத்தார். இந்த திட்டம் ஒடிசாவின் ஐந்து முக்கிய நகரங்களில் செயல்படுகிறது. [1] வழங்கப்படும் உணவின் விலையானது ₹ 20 ஆகும். ஆனால் ஒடிசா சுரங்கக் கூட்டுத்தாபனத்தின் நிதி உதவியின் கீழ் ₹ 5க்கு மலிவாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 60,000க்கும் அதிகமான மக்களை இத்திட்டத்தின் இலக்காகக் கொண்டுள்ளது.
வகை | தொடர் உணவகம் |
---|---|
நிறுவுகை | 2015 |
நிறுவனர்(கள்) | ஒடிசா அரசு |
தலைமையகம் | புவனேசுவரம் |
சேவை வழங்கும் பகுதி | ஒடிசா |
முதன்மை நபர்கள் | நவீன் பட்நாய்க் |
உற்பத்திகள் | உணவு |
வருமானம் | இலாப நோக்கமற்ற |
உரிமையாளர்கள் | ஒடிசா அரசு |
இணையத்தளம் | http://164.100.141.236/AAHAAR/ |
நோக்கம்
தொகுஇந்த திட்டத்திற்கு ஒடிசா அரசு நிதியுதவி அளிக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவான சமைத்த உணவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டமானது சோதனை முயற்சியில் புவனேசுவரம், சம்பல்பூர், பெர்காம்பூர், ராவுர்கேலா மற்றும் கட்டக் உள்ளிட்ட 21 ஆகார மையங்களில் அறிமுகப்படுத்தியது. தற்பொழுது 73 நகரங்களை உள்ளடக்கிய 30 மாவட்டங்களில் 100 ஆகார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.[2] இம்மையங்கள் முக்கியமாக மருத்துவமனைகள், பேருந்து/தொடருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சமைக்கப்பட்ட மதிய உணவை வெறும் 5 ரூபாய்க்கு வழங்குகிறது. உணவின் சுகாதாரம் பல்வேறு நகராட்சி மருத்துவமனைகளால் சோதிக்கப்படுகிறது.[3] அண்மையில் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள 54 ஆகார மையங்களில் இரவு உணவையும் சேர்த்தது.
உணவு பட்டியல்
தொகுஇந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பாட்டா (வேகவைத்த அரிசி) மற்றும் தால்மா ₹ 5 விலையில். ஆகார் மையங்கள் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குறிப்பிடப்பட்ட இடங்களில் உணவு வழங்குகின்றன. இரவு உணவு இரவு 7: 00 முதல் 9: 00 மணி வரை வழங்கப்படுகிறது.
ஆகார மையங்கள்
தொகு- கட்டாக் : பதம்படி பேருந்து நிலையம், சிசு பவன், எஸ்சிபி மருந்தகம் [4]
- புவனேஸ்வர் : மாஸ்டர் கேன்டீன், பாரமுண்டா, பிஎம்சி அலுவலகம்.
- பெர்ஹாம்பூர் : புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் இரயில் நிலையம்.
- சம்பல்பூர் :
- ரூர்கேலா : ஆர்.ஜி.எச்., பிரிவு - 2, பிரிவு - 19, வேதவியாசு மற்றும் நகர பேருந்து நிலையம்
- பார்பில் : பார்பில் புதிய பேருந்து நிலையம்
- பார்கர் : மகளிர் கல்லூரி முன், அருகில். பேருந்து நிலையம்
- டால்ச்சர்
- அங்குல்
- காமக்ஷயநகர்
- பாலசோர் தலைமையக மருத்துவமனை
நீலகிரி துணைப்பிரிவு மருத்துவமனை உள்ளிட்ட ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மொத்தம் 100 ஆகார மையங்கள் உள்ளன.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Low-cost meal 'Aahar' provided by Odisha government will start from April". பார்க்கப்பட்ட நாள் 24 April 2015.
- ↑ http://www.urbanodisha.gov.in/Aahar.aspx
- ↑ https://www.rajyayojana.in/category/odisha-state-government-yojana/ பரணிடப்பட்டது 2021-01-16 at the வந்தவழி இயந்திரம் |date=September 2019 |website-rajyayojana.in}
- ↑ http://www.thehindu.com/news/national/other-states/lowcost-aahar-in-odisha-from-april-1/article7004929.ece