ஆக்டினியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம்

ஆக்டினியம்(III) புரோமைடு (Actinium(III) bromide) என்பது AcBr3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியமும் புரோமினும் சேர்ந்து கதிரியக்கப் பண்புடன் அறுகோண வடிவத்தில், ஒரு படிகத் திண்மமாக வெண்மை நிறத்தில் இச்சேர்மம் உருவாகிறது.

ஆக்டினியம்(III) புரோமைடு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டினியம் முப்புரோமைடு, ஆக்டினியம் டிரைபுரோமைடு
இனங்காட்டிகள்
33689-81-5 Y[EPA]
InChI
  • InChI=1S/Ac.3BrH/h;3*1H/p-3
    Key: KATYVAFQSWUUQL-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57348990
  • [Br-].[Br-].[Br-].[Ac]
பண்புகள்
AcBr3
வாய்ப்பாட்டு எடை 466.74 கி/மோல்
தோற்றம் வெண்மை நிற படிகத் திண்மம்
அடர்த்தி 5.85 கி/செ.மீ3
உருகுநிலை 1,051 °C (1,924 °F; 1,324 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணப் படிகம், hP8[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆக்டினியம்((III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலந்தனம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஆக்டினியம்(III) ஆக்சைடுடன் அலுமினியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்டினியம்(III) புரோமைடு உருவாகிறது.[1]

வினைகள்

தொகு

வாயுநிலை அமோனியா மற்றும் நீராவி சேர்ந்த கலவையுடன் ஆக்டினியம்(III) புரோமைடை சேர்த்து 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடாக்கினால் ஆக்டினியம் ஆக்சிபுரோமைடு உருவாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Actinium tribromide". WebElements (in English). WebElements. பார்க்கப்பட்ட நாள் 15 April 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Zachariasen, W. H. (1948). "Crystal chemical studies of the 5f-series of elements. I. New structure types". ActaCrystallographica 1 (5): 265–268. doi:10.1107/S0365110X48000703. 
  3. the University of Michigan (1954). Seaborg, Glenn (ed.). The Actinide Elements (in English). McGraw-Hill. p. 870. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780598942548.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியம்(III)_புரோமைடு&oldid=3745571" இலிருந்து மீள்விக்கப்பட்டது