ஆசான் மித்ராசென்
மித்ராசென் தாபா மாகர் (29 திசம்பர் 1895 - 7 ஏப்ரல் 1946), ஆசான் மித்ராசென் என்று பிரபலமாக அறியப்படுபவர், நேபாளி நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.[1][2][3][4] நேபாள இசை மற்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்காகச் சிறு வயதிலேயே தரைப்படையினை விட்டு வெளியேறினார். நேபாள சமூகத்தின் பல்வேறு துறைகளில் மித்ராசென்னின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஆசான் மித்ராசென் | |
---|---|
இந்திய தபால் தலையில் மித்ராசென் (2001) | |
தாய்மொழியில் பெயர் | मित्रसेन |
பிறப்பு | மித்ராசென் தாபா மாகர் 29 திசம்பர் 1895 தோடா இராணி, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய இமாச்சலப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 7 ஏப்ரல் 1946 | (அகவை 50)
தேசியம் | நேபாளி |
பணி | பாடகர், கவிஞர், எழுத்தாளர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமித்ராசென் இந்தியாவின் தரம்சாலாவில் 29 திசம்பர் 1895-ல் மன்பிர்சென் தாபா மாகருக்கும் ராதா தாபா மாகருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தாத்தா சுரேந்திரசென் தாபா ஆவார். நேபாளத்தின் பர்பத் மாவட்டத்தில் உள்ள ரகு புலா கிராமத்தில் இவரது மூதாதையர் வீடு இருந்தது.[5] இவருக்கு திக்விஜய் சென் தாபா என்ற மகன் உள்ளார்.
கல்வி
தொகுபாக்சு கன்டோன்மென்ட்டைச் சுற்றி பள்ளி இல்லாததால், இவர் ஆரம்பத்தில் தனது தந்தையிடம் கல்வி கற்கத் தொடங்கினார். பின்னர் தனது 8 வயதில் தனது குடியிருப்பிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார். பானுபக்தர் மொழிபெயர்த்த இராமாயணத்தைத் தனது தந்தையிடமிருந்து கற்றார்.[6]
தரைப்படை பணி
தொகுமித்ராசென்னிற்கு 16 வயது ஆனபோது, 1/1 கோர்க்கா ரைபிள்ஸில் ஆட்சேர்ப்பு நடைபெற்றது. இதன் மூலம் தரைப்படையில் சேர்ந்தார். இவரது முன்னோர்கள் முன்பு இதே பிரிவில் பணியாற்றியவர்கள். இவர் 1914-ல் பிரான்சில் தனது படைப்பிரிவுடன் முதலாம் உலகப் போரில் பங்கேற்றார். இவர் 1920-ல் தரைப்படை சேவையை விட்டு விலகினார். நேபாள இசை மற்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் சமூக சேவகராக அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இவரது ஆர்வமாக இருந்தது.[7]
இசை பங்களிப்புகள்
தொகுமித்ராசென் தனது ஆர்மோனியத்துடன் நேபாள மக்கள் வாழ்ந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேபாள முழுவதும் இசைப்பயணம் செய்தார். இவரது நாட்டுப்புறப் பாடல்கள் நேபாள மக்களிடையே மிகவும் பிரபலமாகின. இந்த பிரபலமான பாடல்களில் சில: லாஹுரே கோ ரெலிமை ஃபஷைனை ராம்ரோ... லாஹுரே கோ ரெலிமை ஃபஷானை ராம்ரோ... லாஹுரே கோ ரெலிமை ஃபஷைனை ராம்ரோ... , தான் கோ பாலா ஜுல்யோ ஹஜுர் தாஷைன் ரமைலோ, மாலை குத்ருக்கை பர்யோ ஜெதன் திம்ரோ பாஹினி லே.... போன்றவை. இவர் நேபாளி இசையில் 24 வட்டத் தட்டில் 97 பாடல்களைப் பதிவு செய்தார்.[8] இவர் பாடகர் மட்டுமல்ல, நாடகம், கதை, நாவல், கட்டுரை, கவிதை போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார்.
நேபாளி சமூகம் மற்றும் இசையில் மித்ராசென்னின் பெரும் பங்களிப்பிற்காக, இந்தியா மற்றும் நேபாள அரசாங்கங்கள் இவரது புகைப்படங்களுடன் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன.[9] மித்ராசென் அகாதமியும் நேபாளி இசையை மேம்படுத்தவும், இவரது பாரம்பரியத்தைப் பின்பற்றவும் நினைவுகூரும் சேவையினை செய்கின்றது. இவரது பங்களிப்புகள் இவரை ஒரு ஆசான் மித்ராசென் ஆக்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Master Mitrasen Thapa Magar". www.saavn.com. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
- ↑ "Khutrukai Paryo Jethan (Adhunik) by Master Mitrasen Thapa Magar on Apple Music". iTunes. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
- ↑ Manch, Nepal Magar Sangh Gulmi-kathmandu Samparka (28 March 2013). "नेपाल मगर सघं-गुल्मी काठमान्डौ सम्पर्क समिती : Brief History of Magars in Nepal (with 1st Boxer of Nepal Dal Bdr Rana from Arkhale, Gulmi)". नेपाल मगर सघं-गुल्मी काठमान्डौ सम्पर्क समिती. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
- ↑ Administrator. "'मलाई खुत्रुक्कै पार्यो जेठान तिम्रो बैनीले'- नेपाली लोकगीत संगितका अमर स्रस्टा मास्टर मित्रसेनको ११८ औं जन्मोत्सब | literature". www.usnepalonline.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 19 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
- ↑ Harsha Bahadur Budha Magar, p.7.
- ↑ Harsha Bahadur Budha Magar, p. 11.
- ↑ Harsha Bahadur Budha Magar, pp. 13–14.
- ↑ Harsha Bahadur Budha Magar, p. 42.
- ↑ Himal Khabarpatrika. Kathmandu, Nepal. 1–16 September 2010. p.62.
மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள்
தொகு- Harsha Bahadur Budha Magar (1999) Master Mitrasen Thapa Magar. Kathmandu: Pushpavati Budha Magar