ஆசிய மரகதக் குயில்
ஆசிய மரகதக் குயில் | |
---|---|
ஆண் (♂) தாய்லாந்தில் | |
பெண் (♀) மேற்கு வங்காளம், இந்தியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கி. மேக்குலேட்டசு
|
இருசொற் பெயரீடு | |
கிரைசோகாக்சிக்சு மேக்குலேட்டசு ஜெமிலின், 1788 |
ஆசிய மரகதக் குயில் (Asian emerald cuckoo, உயிரியல் பெயர்: Chrysococcyx maculatus ) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குயில் ஆகும். இது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
வகைபிரித்தல்
தொகுஆசிய மரகதக் குயிலானது 1788 ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹன் ஃபிரெட்ரிக் குமெலின் அவர்களால் கரோலஸ் லின்னேயசின் சிஸ்டமா நேச்சுரேவின் திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பில் விவரிக்கப்பட்டது. அவர் இதை குக்குலசு பேரினத்தில் உள்ள மற்ற அனைத்து குயில்களுடன் சேர்த்து, குக்குலஸ் மாக்குலேடஸ் என்ற உயிரியல் பெயரை உருவாக்கினார். 1826 ஆம் ஆண்டு ஜெர்மன் விலங்கியல் வல்லுனரான ஃபிரெட்ரிக் பாய் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிசோகோசிக்ஸ் பேரினத்தைச் சேர்ந்த மற்ற 12 இனங்களுடன் ஆசிய மரகதக் குயில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. [2] [3] ஆசிய மரகதக் குயிலில் எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை. [3]
விளக்கம்
தொகுசிட்டுக் குருவியைவிட சற்று பெரியதான ஆசிய மரகதக் குயில் சுமார் 18 cm (7 அங்) நீளம் வரை வளரும். முதிர்ந்த ஆண் பறவையின் தலை, மேல் பாகுதிகள், மேல் மார்பகம் போன்றவை பன்னிறங் கொண்ட கரும் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் கீழ் மார்பகம் வெள்ளை நிறத்திலும், வயிறு பச்சைக் கோடுகள் கொண்டதாகவும் இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள வெறுமையான தோல் ஆரஞ்சு நிறத்திலும், அலகு ஆரஞ்சு/மஞ்சள் நிறத்தில் கருப்பு முனையுடன் இருக்கும். முதிர்ந்த பெண் பறவையின் மேல் பகுதிகள் செம்பு-பச்சை நிறத்திலும், உச்சந்தலையும், பிடரியும் துரு பழுப்பு நிறம் கொண்டது. பெண் பறவையின் அடிப்பகுதி பச்சை வரிகளை கொண்டதாக இருக்கும். இரு பாலினத்தவை பறக்கும் போது கீழ் இறக்கையில் ஒரு வெள்ளை பட்டை தெரியும். இளம் ஆண் பறவையின் அடிப்பபாகத்தின் கீழ் மார்பகப் பகுதி வெண்மையாக இல்லாமல் அதிக அளவிலான வரிகளோடு இருக்கும். இப்பறவை பறக்கும் போது "ச்வீக்" என்று ஒலி எழுப்பும், மேலும் பல்வேறு சீழ்க்கைகளை கீச்சிடிடும்.
பரவலும் வாழ்விடமும்
தொகுஆசிய மரகதக் குயில்கள் இமயமலையில் இருந்து கிழக்கு நோக்கி மியான்மர், சீனா மற்றும் வடக்கு தாய்லாந்து வரை பரவிய இனப்பெருக்க எல்லையைக் கொண்டுள்ளன. மேலும் இது தெற்கே இது வட இந்தியா, இலங்கை, மலேசியா, சுமத்ரா போன்றப் பகுதிகளில் திசைமாறி அலைந்து திரிபவையாக அல்லது வலசை போகக்கூடியவையாக உள்ளன. இந்த பகுதிகளில் இவை இனப்பெருக்கம் செய்வதாகத் தெரியவில்லை. இவை காடுகள் மற்றும் காடுகளின் ஓரங்களில் அடிக்கடி செல்கின்றன. [4]
சூழலியல்
தொகுஆசிய மரகதக் குயில்கள் முக்கியமாக பூச்சிகள், எறும்புகள், கம்பளிப்பூச்சிகள், வண்டுகள் உள்ளிட்ட சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்களை உணவாகக் கொள்கின்றன. இதற்கு கூடுகட்டி அடைக்காக்கத் தெரியாது அதனால் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடும். இப்பறவைகள் கருஞ்சிவப்பு சன்பேர்ட் ( ஏத்தோபிகா சிபராஜா ) மற்றும் சிலந்திபிடிப்பான் ( அராக்னோதெரா லாங்கிரோஸ்ட்ரா ) போன்ற பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடும். [5]
நிலை
தொகுஆசிய மரகதக் குயில்கள் மிகவும் பரந்த வாழிட எல்லையைக் கொண்டுள்ளன. ஆனால் பொதுவாக இது அசாதாரணமாக காணப்படும் இனமாகும். இதற்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் ஏதுவும் இருப்பது உறுதிப்படுத்தபடவில்லை. மேலும் இதன் எண்ணிக்கை நிலையாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதன் பாதுகாப்பு நிலையை " தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் " என்று மதிப்பிட்டுள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2018). "Chrysococcyx maculatus". IUCN Red List of Threatened Species 2018: e.T22684000A130087242. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22684000A130087242.en. https://www.iucnredlist.org/species/22684000/130087242. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Friedrich Boie (1826). "Generalübersicht der ornithologischen Ordnungen, Familien und Gattungen" (in de). Isis von Oken 19: Cols 969–981 [977]. https://biodiversitylibrary.org/page/27511180.
- ↑ 3.0 3.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
- ↑ Jeyarajasingam, Allen (2012). A Field Guide to the Birds of Peninsular Malaysia and Singapore. Oxford University Press. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-963942-7.Jeyarajasingam, Allen (2012).
- ↑ Payne, R.B. (1997). "Asian Emerald Cuckoo (Chrysococcyx maculatus)". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J. (eds.). Handbook of the Birds of the World. Vol. 4: Sandgrouse to Cuckoos. Barcelona, Spain: Lynx Edicions. pp. 564–565. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-22-1.Payne, R.B. (1997).