ஆடு வாகனம்
ஆடு வாகனம் என்பது இந்து சமயத்தில் பல கடவுள்களுக்கு வாகனமாக உள்ளது. கௌமார முழுமுதற் கடவுளான முருகப்பெருமான் வாகனமாக கோயில்களில் ஆடு வாகனம் உலா செல்ல பயன்படுத்தப்படுகிறது. அக்னி, துர்க்கை அம்மன் ஆகியோருக்கு ஆடு வாகனமாக புராணங்களில் கூறப்படுகிறது. வாகன அமைப்புதொகுஆடு வாகனமானது நின்ற நிலையில் உள்ளது. வாகனத்தின் மேல் உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகை அமைக்கப்படுகிறது. ஆடு வாகன காரணம்தொகுஅந்தணர், இந்திரன், அருந்தவர், அரன், அரி ஆகியோர் சிவபெருமானுக்காக பூமியில் இடத்தை தேர்ந்தெடுத்து யாகம் செய்தனர். அந்தணர்கள் கவனக்குறைவால் மந்திர உச்சரிப்பு மாறுபட்டது. உடனே யாகத்திலிருந்து செவ்வானம் போன்ற நிறத்துடன் ஓர் ஆட்டுக் கடா எழுந்தது. எதிர்வந்தோரை கொன்றது. வானத்திற்கு பறந்து சந்திரனின் தேரை உடைத்தது, பிரம்மலோகம் போன்ற இடங்களில் ஆட்டுக்கிடாவை கண்டு அஞ்சினர். [1] தங்களை காக்க வேண்டும் என கயிலாயத்தில் முருகப்பெருமானிடம் முறையிட்டனர். முருகப்பெருமான் வீரபத்திரரிடம் ஆட்டுக்கிடாவை பிடித்துவர சொன்னார். வீரபத்திரர் சென்று ஆட்டுகிடாவை பிடித்து முருகனிடம் தந்தார்.
கோயில்களில் உலா நாட்கள்தொகு
இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
|