ஆண்டனி பெரும்பாவூர்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளார்

மேல்குடி ஜோசப் ஆண்டனி (Malekudy Joseph Antony)[1] ஆண்டனி பெரும்பாவூர் (Antony Perumbavoor) எனவும் அறியப்படும் இவர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்கு காட்சியாளரும் ஆவர். இவர் குறிப்பாக மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிகிறார். 1987 இல் மோகன்லாலுக்கு ஒரு ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1990களில் மலையாளத் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் தோன்றத் தொடங்கினார். 2000ஆம் ஆண்டில், இவர் மோகன்லால் படங்களை பிரத்யேகமாக தயாரிக்கும் ஆசிர்வாத் சினிமாஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். பலதிரையரங்கு வளாகச் சங்கிலியான ஆசிர்வாத் சினிப்ளெக்ஸ்ஸை ஆண்டனி சொந்தமாக வைத்துள்ளார். திரைப்பட விநியோக நிறுவனமான மேக்ஸ்லாப் சினிமாஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட்ஸின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இவர் கேரளாவின் திரையரங்க உரிமையாளர் ஐக்கிய அமைப்பின் (FEUOK) தலைவராக உள்ளார்.[2] இவர் பெரும்பாவூரின் ஐமூரியில் வசிக்கிறார்.[1]

ஆண்டனி
பிறப்புமேல் ஜோசப் ஆண்டனி
25 மே 1968 (1968-05-25) (அகவை 55)
தேசியம்இந்தியர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சாந்தி
பிள்ளைகள்2

ஒரு தயாரிப்பாளராக, இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள்[3][4], நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள்[5][6][7], தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்[8] உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Malekudy Joseph Antony | Profile & Biography | DIN | CorpDir". in.corpdir.org. Archived from the original on 12 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Profile of Malayalam Producer Antony Perumbavoor" (in மலையாளம்). Malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
  3. Livemint (18 March 2013). "National Film Awards: 'Paan Singh Tomar', 'Vicky Donor' big winners". Mint. https://www.livemint.com/Consumer/bqplbNLbv71lzCA9954ROO/Paan-Singh-Tomar-wins-national-award-for-best-film.html. பார்த்த நாள்: 14 May 2020. 
  4. "67th National Film Awards: Complete list (updating)". தி இந்து. 22 March 2021.
  5. Special correspondent (26 April 2002). "'Sesham' adjudged best feature film". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171020191248/http://www.thehindu.com/2002/04/26/stories/2002042601810600.htm. பார்த்த நாள்: 20 October 2017. 
  6. "'Prize for challenging established practices'". தி இந்து. 4 June 2009 இம் மூலத்தில் இருந்து 20 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171020190811/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/lsquoPrize-for-challenging-established-practicesrsquo/article16570271.ece. பார்த்த நாள்: 20 October 2017. 
  7. Special correspondent (6 April 2010). "Mammootty, Shwetha Menon win best actor awards". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/Mammootty-Shwetha-Menon-win-best-actor-awards/article16364412.ece. பார்த்த நாள்: 20 October 2017. 
  8. "Winners of 61st Idea Filmfare Awards South". Filmfare. 13 July 2014 இம் மூலத்தில் இருந்து 20 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171020193231/https://www.filmfare.com/features/winners-of-61st-idea-filmfare-awards-south-6712.html. பார்த்த நாள்: 20 October 2017. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டனி_பெரும்பாவூர்&oldid=3542512" இலிருந்து மீள்விக்கப்பட்டது