ஆண்டர்பந்தி
ஆண்டர்பந்தி ( Andarpanthi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
ஆண்டர்பந்தி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609503 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவாரூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், குடவாசலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையில் இருந்து 287 கிலோமீட்டர் தொலைவில்,[1] காவிரி ஆற்றின் கிளை ஆறான அரசலாறின் கரையில் உள்ளது. இந்த ஊரில் இரண்டு தெருக்கள் உள்ளன.
பெயர் காரணம்
தொகுஒரு காலத்தில் அப்பர் இக்கிராமத்தின் அருகிலுள்ள திருவிழிமழலைக் கோயிலில் தங்கி சைவத்துக்கு தொண்டாற்றி வந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அப்போது பஞ்சத்தைத் தீர்க்க இறைவனே அப்பரிடம் தோன்றி தங்கப்படிக்காசு தந்ததாகவும், அதைப் பெற்றுக்கொண்ட அப்பர், அய்யன்பேட்டை எனும் ஊரில் பொருள்களை வாங்கி, ஆண்டார்பந்தி கிராமத்தில் உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கினார். ‘ஆண்டார்’ என்ற சொல்லுக்குத் ‘தொண்டர்’ என்று பொருள் உண்டு. தொண்டர்களுக்குப் பந்தி வைத்ததால் ஆண்டார்பந்தி என ஊருக்குப் பெயர் வந்துவிட்டது என்று செவிவழிக் கதை உள்ளது.[2]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்த ஊரில் 135 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே சைவ வெள்ளாளர் ஆவர். பெரும்பாலும் திருமணங்கள் அகமணமுறையில் ஊருக்குள்ளேயே கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றன. ஊரில் சைவர் குடும்பங்கள் மட்டுமே வாழ்வதால் ஆடு, கோழி போன்றவற்றை வளர்ப்பது கிடையாது.
தொழில்
தொகுஇந்த ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்களின் தொழிலாக சமையல் செய்தல் உள்ளது. இந்த ஊரில் நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்களைக் கொண்டுள்ளது. திருமணம் போன்ற விசேசங்களுக்கு சமையல் செய்கின்றனர்.[3]
குறிப்பு
தொகு- ↑ "Andarpanthi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
- ↑ மு.இராகவன். "அப்பர் விதைத்த எலுமிச்சை மரங்கள்... - பாரம்பர்யம் காக்கும் 'ஆண்டார்பந்தி' கிராமம்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
- ↑ வெ. நீலகண்டன், ஊரெல்லாம் நள மகாராஜாக்கள்!, கட்டுரை, தினகரன் பொங்கல் மலர் 2016, பக்கம் 110-115