ஆண்டிமனி நான்காக்சைடு
ஆண்டிமனி நான்காக்சைடு அல்லது ஆண்டிமனி டெட்ராக்சைடு (Antimony tetroxide) என்பது Sb2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இயற்கையில் இச்சேர்மப் பொருள் செர்வண்டைட் என்ற கனிமப்பொருளாகக் காணப்படுகிறது[2]. வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் சூடுபடுத்தும்போது மஞ்சள் நிறமாக மாறுகிறது. SbO2 என்ற ஆண்டிமனி நான்காக்சைடின் முற்றுப்பெறா வாய்ப்பாடு, இரண்டு ஆண்டிமனி மையங்களின் இருப்பைத் தெரிவிக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமனி(III,V) ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1332-81-6 | |
பப்கெம் | 74002 |
பண்புகள் | |
SbO2; Sb2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 153.7588; 307.5176 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திடப்பொருள் |
அடர்த்தி | 6.64 கி/செ.மீ3 (சாய்சதுர வடிவம்) [1] |
உருகுநிலை | > 930 °C (1,710 °F; 1,200 K) (சிதைவடையும்) |
கொதிநிலை | சிதைவடையும் |
கரையாது | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.0 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு மற்றும் அமைப்பு
தொகுஆண்டிமனி மூவாக்சைடை காற்றில் சூடாக்கும்போது ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:[3]
- Sb2O3 + 0.5 O2 → Sb2O4 ΔH = −187 கி.யூ/மோல்.
800 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆண்டிமனி(V) ஆக்சைடு ஆக்சிசனை இழந்து ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:
- Sb2O5 → Sb2O4 + 0.5 O2 ΔH = −64 kJ/mol
இச்சேர்மம் கலப்பு இணைதிறன் அமைப்பைக் கொண்டு ஆண்டிமனி(V) மற்றும் ஆண்டிமனி(III) உலோக மையங்களைப் பெற்றுள்ளது. ஆண்டிமனி நான்காக்சைடு சாய்துரம் மற்றும் ஒற்றைசரிவு உருவமைப்பு என்ற இரண்டு வகையான பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது[1]. இரண்டு வடிவங்களிலும் நான்கு ஆக்சைடுகளால் கட்டப்பட்ட உருக்குலைந்த ஆண்டிமனி(III) மையங்கள் அடுக்கப்பட்டு உருவான எண்முக அமைப்புகள் வெளிப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Amador, J.; Puebla, E. Gutierrez; Monge, M. A.; Rasines, I.; Valero, C. Ruiz (1988). "Diantimony Tetraoxides Revisited". Inorganic Chemistry 27: 1367–1370. doi:10.1021/ic00281a011.
- ↑ "Cervantite". Webminerals. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.