ஆத்மபோத உபநிடதம்

பண்டைய இந்து சமய உரை

ஆத்மபோத உபநிடதம் ( Atmabodha Upanishad ) அல்லது ஆத்மபோதோபநிஷத் என்பது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட 108 முக்திகா உபநிடத இந்து சமய நூலாகும். இருக்கு வேதத்துடன் தொடர்புடைய 10 உபநிடதங்களில் ஒன்றான இது[2] சாமானய வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3][4]

ஆத்மபோதம்
கடலில் அலைகள் உருவாக்கப்படுவது போல், அனைத்து உயிரினங்களும் இரட்டை அல்லாத பிரம்மத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று உரை கூறுகிறது.[1]
தேவநாகரிआत्मबोध
உபநிடத வகைசாமன்யம்
தொடர்பான வேதம்இருக்கு வேதம்
அத்தியாயங்கள்2
பாடல்களின் எண்ணிக்கை18
அடிப்படைத் தத்துவம்வேதாந்தம்

ஆத்மபோத உபநிடதத்தின் உரை விஷ்ணு ( நாராயணன் ) துதியுடன் தொடங்குகிறது. ஆனால் அதன் முக்கிய கருப்பொருளான ஆத்மபோதத்தில் கவனம் செலுத்துகிறது, அதாவது "உள் சுயத்தைப் பற்றிய அறிவின் நிலை".[5] உரை மேலும் "உள்ளுக்குள் பிரம்மம்" [6] (முழுமையான உண்மை) பற்றி பேசுகிறது. [7] ஆரம்ப பிரார்த்தனையில் பிரம்மன் விஷ்ணுவுடன் அடையாளம் காணப்பட்டாலும், பின்னர் தாமரையில் வசிக்கும் பிரம்மனுக்கு சொந்த அடையாளம் கொடுக்கப்பட்டு அதன் வெவ்வேறு அம்சங்களை விளக்கி பேசுகிறது.

உள்ளடக்கம்

தொகு

முதல் வசனம் நாராயணனை ( விஷ்ணுவின் பெயர்ச்சொல்) பிரம்மம், புருசன் மற்றும் ஓம் ஆகியவற்றுடன் சமன் செய்கிறது, அவர் ஒரு யோகியாகவும் பிறவிச்சுழற்சியிலிருந்துவிடுவிப்பவராகவும் இருக்கிறார். ஓம் நமோ நாராயணாய (நாராயணனை வணங்குதல்) என்ற மந்திரம் விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைய வைக்கும். விஷ்ணுவின் பண்புகளான சங்கு, சக்கரம் மற்றும் தந்திரம் ஆகியவை ஆகாயம், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் குறிப்பிடப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. [8] பிரம்மன் விச்ணுவின் இதயத்தில் தாமரையில் வசிக்கிறார். நாராயணன், தேவகியின் மகன் ( கிருஷ்ணரின் அடைமொழி, விஷ்ணுவின் அவதாரம்), மதுசூதனன் (மது என்ற அரக்கனைக் கொன்றவர்), புண்டரிகாக்சன் (தாமரை போன்ற கண்கள் உடையவர்) மற்றும் அச்சுதன் (வாக்கு தவறாதவர்) என்ற விஷ்ணுவின் அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். . அனைத்து உயிரினங்களிலும் வசிக்கும் பரபிரம்மனுடன் நாராயணன் அடையாளம் காணப்படுகிறார்.[8][9]

சான்றுகள்

தொகு
  1. Aiyar 1914, ப. 39.
  2. Prasoon 2008, ப. 82.
  3. Aiyar 1914, ப. vii.
  4. Farquhar, John Nicol (1920), An outline of the religious literature of India, H. Milford, Oxford university press, p. 364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-2086-X
  5. Dalal2011, ப. 48, 430.
  6. Dalal2011.
  7. "Brahman". Britannica. 2013. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  8. 8.0 8.1 Aiyar 1914, ப. 53 ff
  9. Warrier, Dr. A. G. Krishna. "Atma-Bodha Upanishad". The Theosophical Publishing House. Archived from the original on 2017-07-01. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மபோத_உபநிடதம்&oldid=3847998" இலிருந்து மீள்விக்கப்பட்டது