முக்திகா
முக்திகா ( Muktikā ) என்பது 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பைக் குறிக்கிறது.[1] ஒவ்வொன்றின் காலமும் தேதியும் தெரியவில்லை. மிகப்பழமையானது கிமு 800 இலிருந்து இயற்றப்பட்டிருக்கலாம்.[2][3] முதன்மை உபநிடதங்கள் கிமு 1 ஆம் மில்லினியத்தில் இயற்றப்பட்டன.[4] பெரும்பாலான யோக உபநிடதங்கள் கிமு 100 முதல் 300 கிபி வரை இயற்றப்பட்டிருக்கலாம்.[5] மேலும், ஏழு சந்நியாச உபநிடதங்கள் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்டன.[6][7]
முக்திகா என்பது தெலுங்கு மொழியில் கி.பி 1883 முதல் அச்சிடப்பட்ட வடிவத்தில் கிடைக்கும் 108 உபநிடதங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.[1] முக்தி பற்றிய விசாரணையைக் கையாளும் இராமனுக்கும் அனுமனுக்கும் இடையிலான உரையாடலின் ஒரு பகுதியாக இந்த நியதி உள்ளது. இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 108 உபநிடதங்களின் பட்டியலிலுள்ள 50 உபநிடதங்கள் "ஐரோப்பாவின் முதல் சிறந்த சமசுகிருத அறிஞரான கோல்ப்ரூக் என்பார் தொகுத்துள்ளார். மீதமுள்ள 52-ஐ நாராயணன் என்பவர் தொகுத்துள்ளார். இதில் பாரசீக மொழித் தொகுப்பான உபனேகத் என்பதும் அடங்கும்.[8]
நியதி
தொகுஇந்த நியதி பகவான் இராமனுக்கும் அனுமனுக்கும் இடையிலான உரையாடலின் ஒரு பகுதியாகும். இராமன் வேதாந்தத்தை கற்பிக்க முன்மொழிந்து, " முனிவர்களால் கூட பெறமுடியாத முக்தியை ஒருவர் இவற்றில் ஒரு வசனத்தை [எந்த உபநிடதத்தையும்] பக்தியுடன் படித்தால் போதும் என்னுடன் ஐக்கியமான நிலையை அடைவான்" எனக் கூறுகிறார். அனுமன் பல்வேறு வகையான "விடுதலை" (அல்லது முக்தி, அதனால் உபநிடதத்திற்கு இப்பெயர் வந்தது) பற்றி வினவுகிறார். அதற்கு இராமன், கைவல்யமே ("பற்றற்ற தன்மை") வாழிவின் விடுதலை பெற ஒரே உண்மையான வகை என்று பதிலளிக்கிறார்.[9]
108 உபநிடதங்களின் பட்டியல் 26-29 வசனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது:[9]
ஒருவர் வீடுபேற்றை எதன் மூலம் ஒருவர் அடைகிறார்? மாண்டூக்கிய உபநிடதம் போதும்; அதிலிருந்து அறிவை அடையவில்லை என்றால், பத்து உபநிடதங்களைப் படிக்கவும். மிக விரைவாக அறிவை அடைந்து, என் இருப்பிடத்தை அடைவாய். அப்போதும் உறுதி ஏற்படவில்லை என்றால், 32 உபநிடதங்களைப் படித்துவிட்டு நிறுத்துங்கள். உடல் இல்லாமல் மோட்சத்தை விரும்பினால், 108 உபநிடதங்களைப் படியுங்கள். அவர்களின் உத்தரவைக் கேளுங்கள்.
பெரும்பாலான அறிஞர்கள் பத்து உபநிடதங்களை முதன்மையாக அல்லது முக்ய உபநிடதங்களாகப் பட்டியலிடுகின்றனர். சிலர் பதினொரு, பன்னிரண்டு அல்லது பதின்மூன்றை முதன்மையானவை அல்லது மிக முக்கியமான உபநிடதங்கள் (சிறப்பம்சப்படுத்தப்பட்டவை) எனக் கருதுகின்றனர்.[10][11][12]
108 உபநிடதங்கள்
தொகு108 பெயர்களின் பட்டியல் 30-39 வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
- ஈசா வாஸ்ய உபநிடதம்
- கேன உபநிடதம்
- கடோபநிடதம்
- பிரசின உபநிடதம்
- முண்டக உபநிடதம்
- மாண்டூக்கிய உபநிடதம்
- தைத்திரீய உபநிடதம்
- ஐதரேய உபநிடதம்
- சாந்தோக்கிய உபநிடதம்
- பிரகதாரண்யக உபநிடதம்
- பிரம்ம உபநிடதம்
- கைவல்ய உபநிடதம்
- ஜபால உபநிடதம்
- சுவேதாசுவதர உபநிடதம்
- அம்ச உபநிடதம்
- ஆருணேய உபநிடதம்
- கர்ப்ப உபநிடதம்
- நாராயண உபநிடதம்
- பரமகம்ச உபநிடதம்
- அமிர்தபிந்து உபநிடதம்
- அமிர்தபிந்து உபநிடதம்
- அதர்வசிரசு உபநிடதம்
- அதர்வசிகா உபநிடதம்
- மைத்ராயனிய உபநிடதம்
- கௌசிதகி உபநிடதம்
- பிருகஜபால உபநிடதம்
- நரிசிம்ம தபனிய உபநிடதம்
- காலாக்னி ருத்ர உபநிடதம்
- மைத்ரேய உபநிடதம்
- சுபால உபநிடதம்
- சூரிக உபநிடதம்
- மாந்திரீக உபநிடதம்
- சர்வசர உபநிடதம்
- நிரலம்ப உபநிடதம்
- சுகரகசிய உபநிடதம்
- வச்ரசூசி உபநிடதம்
- தேஜோபிந்து உபநிடதம்
- நாதபிந்து உபநிடதம்
- தியானபிந்து உபநிடதம்
- பிரம்மவித்யா உபநிடதம்
- யோகதத்துவ உபநிடதம்
- ஆத்மபோத உபநிடதம்
- நாரதபரிவராஜக உபநிடதம்
- திரிசிகபிராமண உபநிடதம்
- சிதா உபநிதடம்
- யோகசூடாமணி உபநிடதம்
- நிர்வாண உபநிடதம்
- மண்டல-பிராமண உபநிடதம்
- தட்சிணாமூர்த்தி உபநிடதம்
- சாரப உபநிடதம்
- கந்த உபநிடதம்
- மகாநாராயண உபநிடதம்
- அத்வயாத்ரக உபநிடதம்
- இராம ரகசிய உபநிடதம்
- இராம தபனீய உபநிடதம்
- வாசுதேவ உபநிடதம்
- முத்கல உபநிடதம்
- சாண்டில்ய உபநிடதம்
- பைங்கல உபநிடதம்
- பைசுக உபநிடதம்
- மகா உபநிடதம்
- சரீரக உபநிடதம்
- யோகசிக உபநிடதம்
- திரியத்தத்துவ உபநிடதம்
- பிருகத்-சந்நியாச உபநிடதம்
- பிரம்மரகசிய பரிவராஜக உபநிடதம்
- அக்சமாலிகா உபநிடதம்
- அவ்யக்த உபநிடதம்
- ஏகாக்சர உபநிடதம்
- அன்னபூர்ணா உபநிடதம்
- சூர்ய உபநிதம்
- அக்சி உபநிதம்
- அத்யாதம உபநிதம்
- குந்திகா உபநிதம்
- சாவித்திரி உபநிடதம்
- ஆத்ம உபநிடதம்
- பாசுபதபிரம்ம உபநிடதம்
- பரப்பிரம்ம உபநிடதம்
- அவதூத உபநிதம்]]
- திரிபுரதபிணி உபநிடதம்
- தேவி உபநிடதம்
- திரிபுர உபநிதம்
- கதாசுருதி உபநிடதம்
- பாவனா உபநிதம்
- உருத்திரத்திய உபநிடதம்
- யோக-குண்டலினி உபநிதம்
- பஸ்ம உபநிடதம்
- உருத்திராகச உபநிடதம்
- கணபதி உபநிதம்
- தர்சண உபநிதம்
- தாராசர உபநிடதம்
- மாகாவாக்கிய உபநிடதம்
- பஞ்சபிரம்ம உபநிடதம்
- பிராணக்னிகோத்ர உபநிடதம்
- கோபால தபனீ உபநிடதம்
- கிருஷ்ண உபநிடதம்
- யக்ஞவாக்கிய உபநிடதம்
- வராக உபநிடதம்
- சத்யாயனிய உபநிடதம்
- தத்தாத்திரேய உபநிடதம்
- கருட உபநிடதம்
- காளி-சந்திரண உபநிடதம்
- ஜபாலி உபநிடதம்
- சௌபாக்யலட்சுமி உபநிடதம்
- சரசுவதி உபநிடதம்
- பௌரிச உபநிடதம்
- முக்திகா உபநிடதம் (இந்த உரை)
பரவிய முறை
தொகுபண்டைய வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் கிட்டத்தட்ட அனைத்து அச்சிடப்பட்ட பதிப்புகளும் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பிற்கால கையெழுத்துப் பிரதிகளைச் சார்ந்தது, இன்று இருப்பவை உயர்ந்த வாய்வழி மரபு அல்ல.[13] அமெரிக்க மொழியலாளர் மிக்கேல் விட்செல் இந்த வாய்வழி பாரம்பரியத்தை பின்வருமாறு விளக்குகிறார்:
வேத நூல்கள் எழுத்தைப் பயன்படுத்தாமல் வாய்மொழியாக இயற்றப்பட்டு அனுப்பப்பட்டன. ஆசிரியரிடமிருந்து மாணவருக்கு இடைவிடாத பரிமாற்ற வரிசையில் ஆரம்பத்தில் முறைப்படுத்தப்பட்டது. இது மற்ற கலாச்சாரங்களின் பாரம்பரிய நூல்களை விட மேலான ஒரு குறைபாடற்ற உரை பரிமாற்றத்தை உறுதி செய்தது; உண்மையில், இது ஒரு டேப்-ரெக்கார்டிங் போன்றது.... உண்மையான வார்த்தைகள் மட்டுமல்ல, நீண்ட காலமாக இழந்த இசை (டோனல்) உச்சரிப்பும் (பழைய கிரேக்கம் அல்லது ஜப்பானிய மொழியில்) தற்போது வரை பாதுகாக்கப்படுகிறது.[14]
வகைகள்
தொகுஇந்த நியதியில்,
- 10 உபநிடதங்கள் இருக்கு வேதத்துடன் தொடர்புடையவை.
- 16 உபநிடதங்கள் சாமவேதத்துடன் தொடர்புடையவை.
- 19 உபநிஷதங்கள் சுக்ல யசுர் வேதத்துடன் தொடர்புடையவை.
- 32 உபநிடதங்கள் கிருஷ்ண யசுர் வேதத்துடன் தொடர்புடையவை.
- 31 உபநிடதங்கள் அதர்வண வேதத்துடன் தொடர்புடையவை.
முதல் 13 முதன்மை, மற்றும் 21 சாமான்ய வேதாந்தம் ("பொதுவான வேதாந்தம் ") என தொகுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இந்து சமயத்தில் உள்ள ஐந்து வெவ்வேறு பள்ளிகள் அல்லது பிரிவுகளுடன் தொடர்புடையவை. 20 சந்நியாசத்துடன், 8 சக்தியுடன், 14 வைணவத்துடன், 12 சைவசமயம்|சைவத்துடன்]] மற்றும் 20 யோகாவுடன் தொடர்புடையவை.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Deussen, Paul (1 January 1997). Sixty Upanishads of the Veda (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 558. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- ↑ பேட்ரிக் ஆலிவெல் (1998), Upaniṣhads. Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199540259, see Introduction
- ↑ Gudrun Buhnemann (1996), Review: The Secret of the Three Cities: An Introduction to Hindu Śakta Tantrism, Journal of the American Oriental Society, Volume 116, Number 3, page 606
- ↑ Stephen Phillips (2009), Yoga, Karma, and Rebirth: A Brief History and Philosophy, Columbia University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0231144858, Chapter 1, pages 28-30
- ↑ Gavin Flood (1996), An Introduction to Hinduism, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521438780, page 96
- ↑ Gavin Flood (1996), An Introduction to Hinduism, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521438780, page 91
- ↑ Patrick Olivelle (1992), The Samnyasa Upanisads, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195070453, pages 5, 8-9
- ↑ Deussen, Paul (1 January 1997). Sixty Upanishads of the Veda (in ஆங்கிலம்). Motilal Banarsidass. pp. 556–565. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- ↑ 9.0 9.1 "Samadhi - 8 Limbs of Yoga". United We Care. June 29, 2021. Archived from the original on நவம்பர் 9, 2022. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 19, 2022.
- ↑ Robert C Neville (2000), Ultimate Realities, SUNY Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791447765, page 319
- ↑ Stephen Phillips (2009), Yoga, Karma, and Rebirth: A Brief History and Philosophy, Columbia University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0231144858, pages 28-29
- ↑ Peter Heehs (2002), Indian Religions, New York University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0814736500, pages 60-88
- ↑ Quotation of "... almost all printed editions depend on the late manuscripts that are hardly older than 500 years, not on the still extant and superior oral tradition" is from: Witzel, M., "Vedas and Upaniṣads", in: Flood 2003.
- ↑ For the quotation comparing recital to a "tape-recording" see: Witzel, M., "Vedas and Upaniṣads", in: Flood 2003, ப. 68–69.
வெளி இணைப்புகள்
தொகு- Muktika Upanishad - Translated by: Dr. A. G. Krishna Warrier The Theosophical Publishing House, Chennai
- 108 Upanishads of the Muktika